'நீதிபதிகள் நியமனம் புனிதமானது.. ஊடகங்களில் பொறுப்பற்ற செயல் வருத்தமளிக்கிறது..' தலைமை நீதிபதி வேதனை
டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிக்க சிலரை கொலிஜியம் பரிந்துரைத்துள்ளதாகச் செய்திகள் வெளியான நிலையில், ஊடகங்களின் செயல் கவலையளிக்கும் வகையில் உள்ளதாகவும் ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார்,
பொதுவாக உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளை கொலிஜியம் அமைப்பு தான் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யும். இந்த அமைப்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, நான்கு மூத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இடம் பெற்றிருப்பார்கள்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதியாக 9 பேரை நியமிப்பது குறித்து கொலிஜியம் அமைப்பு மூன்று பெண் நீதிபதிகள் உட்பட 9 பேரை பரிந்துரைத்துள்ளதாக இன்று ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

புனிதமானது கன்னியமிக்கது
இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி நவீன் சின்ஹாவின் பணி உபசார விழா இன்று நடைபெற்றது. காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த விழாவில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, "நீதிபதிகளை நியமிக்கும் செயல்முறை புனிதமானது கண்ணியமிக்கது. ஊடகத்துறை நண்பர்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பாராட்டுகிறேன்
இத்தகைய பொறுப்பற்ற செயல்களால் திறமையான சில நீதிபதிகளின் எதிர்காலம் சிதைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் துரதிருஷ்டவசமானது. நான் மிகவும் வருத்தமடைகிறேன். இது எனக்கு கடும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் இதில் முதிர்ச்சியுடனும் பொறுப்புடன் நடந்துகொண்டு, இது போன்ற ஊகங்களைத் தவிர்த்த பெரும்பாலான மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் பாராட்டுகிறேன்.

ஊடக சுதந்திரம்
நீதிபதிகளை நியமிக்கும் செயல்முறை இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அதில் எந்தவொரு இறுதி முடிவும் தற்போது வரை எடுக்கப்படவில்லை. வரும் காலங்களில் ஆலோசனைகள் நடத்தப்பட்டு தேவையான முடிவுகள் எடுக்கப்படும். ஊடக சுதந்திரம் மற்றும் தனிநபர்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தான் உச்ச நீதிமன்றத்தின் எண்ணம். ஆனால், இதன் கண்ணியத்தையும் ஒருமைப்பாட்டையும் அனைவரும் நிலைநாட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டார்.

செய்திகள்
இன்று காலை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக மூன்று பெண் நீதிபதிகள் உட்பட 9 பேரை கொலிஜியம் அமைப்பு பரிந்துரைத்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. அதில் கர்நாடக உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக உள்ள பி.வி. நாகரத்னாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இவருக்கு இன்னும் பல ஆண்டுகள் பணிக்காலம் இருப்பதால் இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதி வரும் 2027இல் ஆகும் வாய்ப்பு இவருக்கு உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது..
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications