டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கிழக்கு லடாக்....இந்தியப் பகுதியில் சாலை அமைக்கும் சீனா... அதிர்ச்சி சாட்டிலைட் புகைப்படங்கள்!!

Google Oneindia Tamil News

டெல்லி: கிழக்கு லடாக்கில் ஆக்கிரமிப்பு செய்த இடத்தில் சீனா சாலை அமைத்து வரும் சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் அசராமல் சீனா தனது வேலையை செய்து வருவது இந்தியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    இந்திய ராணுவம் அனைத்திற்கும் தயாராக உள்ளது - முப்படைகளின் தளபதி பிபின் ராவத்

    கடந்த ஆகஸ்ட் 29, 30 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்குச் சொந்தமான தெற்கு பாங்கோங்க் டிசோ பகுதியில் தாகுங் போஸ்ட் எல்லைக்குள் சீன ராணுவ வீரர்கள் நுழைய முயன்றனர். இதை இந்திய வீரர்கள் உடனடியாக செயல்பட்டு சீன வீரர்களை விரட்டி அடித்தனர்.

    இந்தியாவின் அடுத்தடுத்து சர்ப்ரைஸ்களால் ஆடிப்போன சீனா.. சூசுலில் படைகள் குவிப்பு.. தொடரும் பதற்றம்!இந்தியாவின் அடுத்தடுத்து சர்ப்ரைஸ்களால் ஆடிப்போன சீனா.. சூசுலில் படைகள் குவிப்பு.. தொடரும் பதற்றம்!

    மிரட்டிய சீனா

    மிரட்டிய சீனா

    எல்லையில் சீனாவின் ஒவ்வொரு நகர்வையும் இந்திய ராணுவ வீரர்கள் கண்காணித்து வந்ததால், அவர்களது ஊடுருவலை எளிதாக அறிய முடிந்தது. தற்போது தெற்கு பாங்கோங் டிசோ மற்றும் ரெசின் லா ஆகிய பகுதிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. இந்த ரெசின் லா பகுதியில் இருந்துதான் இந்திய வீரர்கள் பின்வாங்க வேண்டும் என்று சீன வலியுறுத்தியது. ஆனால் இந்திய வீரர்கள் அசைந்து கொடுக்கவில்லை.

    இந்தியப் பகுதி

    இந்தியப் பகுதி

    ஏன் இந்த முறை இந்தியா கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டது என்றால் சீனாவின் அத்துமீறல் மட்டுமின்றி ஆக்கிரமிப்பு பகுதியில் சாலை அமைத்து வருவதுதான். சிறிது சிறிதாக இந்தியப் பகுதிகளை சீனா ஆக்கிரமித்து வருகிறது. இது இன்று நேற்று அல்ல 1950ஆம் ஆண்டில் இருந்து நடந்து வருகிறது.

    சத்தம் இல்லாமல் ஆக்கிரமிப்பு

    சத்தம் இல்லாமல் ஆக்கிரமிப்பு

    பாங்கோங் டிசோ பகுதியில் பிங்கர் 4க்கு மேலே இருக்கும் ரிட்ஜ்லைன் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது மட்டுமில்லை தேப்சாங், கல்வான், ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா ஆகிய இடங்களையும் சத்தம் இல்லாமல் சீன ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது.

    5,100 மீட்டர் உயரம்

    5,100 மீட்டர் உயரம்

    கடந்த ஒரு மாதமாக இந்தப் பகுதியில் சீன ராணுவம் என்ன செய்து கொண்டு இருக்கிறது என்பது சாட்டிலைட் புகைப்படம் மூலம் தெரிய வந்துள்ளது. ஸ்பாங்குர் டிசோ பகுதிக்கு தெற்கே சீனா சாலை அமைத்து வருகிறது. இது இந்தியாவுக்கு சொந்தமானது. 2020, ஜூலை 13க்குப் பின்னர் சீனா இந்த சாலையை அமைத்து வருகிறது. இது சீனாவின் அத்துமீறல்களை உறுதி செய்கிறது. இந்த சாலை அமைப்பின் மூலம் மீண்டும் தனது நிலைப்பாட்டை உறுதி செய்து கொள்வதற்கு சீனா தயாராகி வருகிறது. கடல் மட்டத்தில் இருந்து 5,100 மீட்டர் உயரத்தில் இந்த சாலையை சீனா அமைத்து வருகிறது.

    ரிமோட் கண்ட்ரோல்

    ரிமோட் கண்ட்ரோல்

    பிளேக் டாப்
    இந்தப் பகுதயில் சீனா புதிய போஸ்ட் அமைத்து வருகிறது. அனைத்து முக்கிய உயரமான இடங்களில் இருந்தும் நேரடி சிக்னல்களை இந்த புதிய போஸ்ட்டால் பெற முடியும், மனித உதவி இல்லாமல், ரிமோட் கண்ட்ரோல் கண்காணிப்பு கருவிகளை நிறுவியுள்ளது. குறிப்பாக பிளேக் டாப்பில் அதுபோல் நிறுவியுள்ளது. இதைச் சுற்றியுள்ள இந்திய ராணுவ சிக்னல்களால் இதை கண்டறிய முடியாது.

    நவீனமயம்

    நவீனமயம்

    இந்தியாவும் இந்தப் பகுதியில் எலக்ட்ரானிக் கண்காணிப்பு கேமராக்களை நவீனமாக்கியுள்ளது. இதன் மூலம்தான் சமீபத்திய சீன ஊடுருவலை இந்தியா கண்டறிந்தது. ஆனால், சீனா தற்போது அமைத்து இருக்கும் பிளேக் டாப் பகுதியை இந்திய ராணுவத்தால் அடைவது கடினம் என்று கூறப்படுகிறது.

    English summary
    China PLA has been constructing new road South of Spanggur Tso
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X