டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதுதான் சரியானது.. லடாக் குறித்து பிரதமர் மோடி சொன்ன கருத்து.. புகழ்ந்து தள்ளும் சீன ஊடகங்கள்!

Google Oneindia Tamil News

டெல்லி: லடாக்கில் சீன ராணுவம் எங்கும் ஊடுருவவில்லை என்று பிரதமர் மோடி பேசியதை சீன ஊடகங்கள் பாராட்டி இருக்கிறது. பிரதமர் மோடியின் பேச்சு பதற்றத்தை தணிக்கும் என்று சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

Recommended Video

    India China Border Fight-ன் போது கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டோம் இந்திய வீரர்கள் வாக்குமூலம்

    லடாக் எல்லைப் பிரச்சினை தொடர்பாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில் சீனா எங்கும் ஊடுருவவில்லை. சீன ராணுவம் எங்கும் அத்துமீறவில்லை. இந்தியாவின் நிலப்பரப்பு எதையும் சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு இருந்தார்.

    அவரின் இந்த பேச்சு பெரிய சர்ச்சையானது. இந்தியாவின் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமிக்கவில்லை என்றால் ஏன் தேவையில்லாமல் எல்லையில் சண்டை நடந்தது என்று கேள்விகள் எழுந்தது.

    மோடி இல்லை என்கிறார்.. ஆனால் செயற்கைகோள் படங்கள் சீன அத்துமீறலை காட்டுகிறதே!.. ராகுல் அட்டாக் மோடி இல்லை என்கிறார்.. ஆனால் செயற்கைகோள் படங்கள் சீன அத்துமீறலை காட்டுகிறதே!.. ராகுல் அட்டாக்

    பெரிய வைரல்

    பெரிய வைரல்

    இந்த நிலையில் பிரதமர் மோடியின் இந்த பேச்சு சீனாவில் வைரலாகி உள்ளது.லடாக்கில் சீன ராணுவம் எங்கும் ஊடுருவவில்லை என்று பிரதமர் மோடி பேசியதை சீன ஊடகங்கள் பாராட்டி இருக்கிறது. பிரதமர் மோடியின் பேச்சு பதற்றத்தை தணிக்கும் என்று சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இந்தியாவில் சீனா அத்துமீறவில்லை என்பதை மோடி ஒப்புக்கொண்டுவிட்டார். இதனால் எல்லை பிரச்சனை இந்தியாவில் நடக்கவில்லை.

     உண்மை என்ன

    உண்மை என்ன

    சீனாவின் எல்லைக்குள்தான் இந்திய ராணுவம் நுழைந்துள்ளது என்பதை மோடி இதன் மூலம் ஒப்புக்கொண்டு இருக்கிறார். மோடியின் இந்த பேச்சு எல்லை நிலவரத்தை துல்லியாமாக எடுத்து உரைக்கிறது. சீனாவுடன் தொடர்ந்து மோதல் வேண்டாம் என்று பிரதமர் மோடி இப்படி கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு கண்டிப்பாக அமைதிக்கு வழி வகுக்கும் என்று சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

    தவறான வழிநடத்தல்

    தவறான வழிநடத்தல்

    மோடியின் பேச்சு காரணமாக சீனா மீது இந்தியர்கள் இனி தவறாக பழி போட முடியாது. சீனாவிற்கு எதிராக அவர்கள் எழுத முடியாது. ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுத்து இருப்பதாக மோடி கூறியது இந்திய மக்களை திருப்தி படுத்த மட்டுமே. இந்திய வீரர்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை அளிக்க மட்டுமே அவர் இப்படி பேசி இருக்கிறார், என்றும் சீன ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளது.

    அனைத்து ஊடகம்

    அனைத்து ஊடகம்

    இப்படி சீனாவின் அனைத்து ஊடகங்களும் மோடியின் பேச்சை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி உள்ளது. சீனாவின் இன்னொரு ஊடகமான China Dailyயில், லடாக் மற்றும் காஷ்மீரின் சுதந்திரத்தை பறித்து, அதன் சிறப்பு உரிமையை நீக்கியதுதான் அங்கு சண்டை அதிகம் நடக்க காரணம். லடாக் என்பதை யூனியன் பிரதேசமாக அறிவித்ததுதான் சீனாவின் கோபத்திற்கு காரணம் என்றும் விளக்கி உள்ளனர்.

    அரசு விளக்கம்

    அரசு விளக்கம்

    ஆனால் இதற்கு மத்திய அரசு விளக்கம் கொடுத்து இருந்தது. அதில் அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. அவரின் பேச்சை திரித்து பேசுகிறார்கள். சீன ராணுவம் எல்லையில் அத்துமீற முயன்றது. ஆனால சீன ராணுவத்தால் இந்தியப் பகுதிகளை ஆக்கிரமிக்க முடியவில்லை. ஆக்கிரமிப்பு முயற்சி முறியடிக்கப்பட்டு, இந்திய படைகள் சிறப்பாக செயல்பட்டது. இந்திய வீரர்கள் திருப்பி அடிக்க தயாராக இருக்கிறார்கள், என்று பிரதமர் மோடி கூறியதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    English summary
    China standoff with India: Chinese media's applauds PM Modi's speech on Ladakh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X