டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீனா நடத்துவது வெறும் எல்லை மோதல் மட்டுமல்ல.. அதற்கு மேல் 'நிறைய' இருக்கு.. பரபர பின்னணி

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய எல்லையான கால்வான் பள்ளத்தாக்கில் சீனா பதற்றத்தை குறைப்பதற்கான செயல்களில் இன்னமும் இறங்கவில்லை. படைகளை குவித்து வருகிறது. எப்போது படைகளை குறைத்து பதற்றத்தை தணிக்க முன்வருமோ என்ற அவநம்பிக்கையுடன் இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்நிலையில் சீனா ஏன் இந்தியாவுடனான ஒப்பந்தங்களை மீறியது, எந்த அடிப்படை காரணங்களுக்காக இந்தியாவுடனான இருதரப்பு உறவை வீணாக்க தயாராக இருக்கிறது என்பதை இப்போது பார்க்கலாம்.

இப்போது உள்ள சூழலில் ஒருவேளை படைகளை விலக்கிக்கொண்டு எப்போதும் போல் சமாதானமாக செல்வதாக சீனா சொல்லலாம். ஆனால் பிரச்சினை நீங்காது. சீனர்கள் திரும்பி வருவார்கள்,

ஏனெனில். சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் பெல்ட் மற்றும் சாலை முன்முயற்சியின் முதன்மை திட்டமான பாகிஸ்தானுடன் உள்ள தகவல் தொடர்பு மற்றும் வர்த்தகத்தின் முக்கிய வழியைப் பாதுகாக்க விரும்புகிறார்கள். அதற்காகவே அவர்கள் இந்தியாவிடம் எல்லையை மாற்றுவதில் அதிகம் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.

செம்ம பிளான்! சீன எல்லை முழுவதும் விறுவிறுப்பாக சாலைகள் அமைக்கும் இந்தியா செம்ம பிளான்! சீன எல்லை முழுவதும் விறுவிறுப்பாக சாலைகள் அமைக்கும் இந்தியா

சீனா மோதல்

சீனா மோதல்

சீனா ஏப்ரல் மாதத்தில் இதற்கான திட்டமிடல்களை தொடங்கி, மோதல்களை தொடங்கியது. உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் பல புள்ளிகளில் சீனாவின் கணிசமான கட்டமைப்பிற்கு பதிலளிக்கும் விதமாக இந்தியா விரைவாக எதிர்-வரிசையில் பலப்படுத்த தொடங்கியபோது, இருநாடுகளுக்கும் இடையே விரோதங்கள் தொடங்கியது. மோதல்கள் ஆரம்பித்த நிலையில், சீனாவின் அத்துமீறல் நடவடிக்கைகளுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஆனால் சீனா அதை இந்தியாவின் அத்துமீறலாகவே சித்தரிக்க விரும்பியது, அப்படித்தான் வெளி உலகிற்கு சொன்னது.

லே டிபிஓ இணைப்பு சாலை

லே டிபிஓ இணைப்பு சாலை

இந்த மோதலின் துவக்க புள்ளி என்னவென்றால், இந்தியாவின் கரகோரம் பாஸின் அடிவாரத்தில் லேவை டிபிஓவுடன் இணைக்கும் சமீபத்தில் கட்டப்பட்ட 255 கிமீ டார்புக்-ஷியோக்-தௌலத் (Darbuk-Shyok-Daulat ) சாலை தான். ஆரம்பத்தில் இந்த சாலை படுமோசமாக இருந்த காரணத்தால் சாலை சிறப்பாக மேம்படுத்தி இந்தியா அண்மையில் திறந்தது. இந்த சாலை, ஷியோக் மற்றும் டாங்சே நதிகளின் மேல் செல்கிறது. இந்த சாலையைத்தான் பிரச்சனையாக சீனா பார்க்கிறது. இதில் ஆதிக்கம் செலுத்த சீனா விரும்புகிறது.

சீனா கடும் எதிர்ப்பு

சீனா கடும் எதிர்ப்பு

அத்துடன் ஷியோக்-கால்வான் ஆற்றின் சந்திப்பில் சீனா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறது. மிக சமீபத்தில் ஷியோக்-கால்வான் ஆற்றின் பாலத்தில் இந்த சாலையை இந்தியா அமைத்ததற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. இந்த பகுதி அனைத்தும் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் இந்தியாவின் பக்கத்திலேயே உள்ளன, மேலும் இங்கு உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான இந்தியா அதன் உரிமைகளுக்கு உட்பட்டது. ஆனால் இதை சீனா முற்றிலும் விரும்பவில்லை. நம்மை எந்த கட்டமைப்பும் செய்யக்கூடாது என்று மிரட்டும் சீனா, கார்கில் மோதலின் போது இந்தியாவின் கவனச்சிதறலைப் பயன்படுத்தி, பாங்காங் ஏரியின் வடக்குக் கரையில் ‘பிங்கர் 4' வரை சாலையை அமைத்து இந்தியாவை விட உள்கட்டமைப்பை திறம்பட மேம்படுத்திவிட்டது.

சீனாவின் நோக்கம் என்ன

சீனாவின் நோக்கம் என்ன

இந்த நிலையில் தான் இந்தியா கட்டமைத்த தர்புக்-ஷியோக்-டிபிஓ சாலை சீனாவுக்கு அச்சுறுத்தலாக தெரிகிறது. ஏனெனில் இதன் கிழக்கே சீனாவின் அக்சாய் சின் உள்ளது. 1960களில் இந்தியாவிடம் இருந்து சீனா கைப்பற்றிய பகுதி ஆகும். இதேபோல் சீனா ஆக்கிரமித்த ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கும் உள்ளது. சீனாவின் நோக்கம் என்பது கால்வான் பள்ளத்தாக்கு முழுவதையும் கையகப்படுத்துவதன் மூலம், இந்த சாலையை அச்சுறுத்துவதோடு கல்வான் பள்ளத்தாக்கின் இரு எல்லை தன் வசப்படுத்த விரும்புகிறது. ஆனால்- தற்போதைய நிலையில் கால்வான் பள்ளத்தாக்கு என்பது இந்திய இராணுவம் "துணைத் துறை வடக்கு" என்று அழைக்கும் தெற்குப் பகுதியாகும்.

சீனாவின் திடீர் பல்லவி

சீனாவின் திடீர் பல்லவி

சீனா இப்படி செய்ய விரும்ப காரணம் அக்சய் சீன் வழியாக செல்லும் பொருளாதார வழித்தடம். சீனா உண்மையில் ஜின்ஜியாங்கிலிருந்து, காரகோரம் பாஸைக் கடந்து, சியாச்சின் பனிப்பாறை மற்றும் பாகிஸ்தானுக்குச் செல்லும் பொருளாதார வழித்தடத்தை பாதுகாக்கவே இத்தனை சேட்டைகளையும் செய்து வருகிறது. இந்த பொருளாதார வழித்தடம் பலூசிஸ்தானின் குவாடரில் முடிகிறது. இந்த வழித்தடம் முடிக்கப்பட்டால், எதிர்காலத்தில் மீண்டும் இந்தியாவுக்கு எதிராக சீனர்கள் திரும்பி வருவார்கள். அதனால்தான் சீனா திடீரென தனது பல்லவியை மாற்றி இப்போது முழு கால்வான் பள்ளத்தாக்கையும் உரிமை கோருகிறது. தற்போதைய நிலையில் கல்வான் பள்ளத்தாக்கின் ஒரு பகுதியை சீனா கட்டுப்படுத்துகிறது, மீதமுள்ள பகுதி இந்தியா வசம் உள்ளது.

திசைதிருப்பல்

திசைதிருப்பல்

சீனா ஒரு பக்கம் இந்தியா தனது எல்லைப்பகுதியில் சாலையை அமைத்ததை எதிர்க்கும் சீனா, டெப்சாங்கில் மிக வலிமையாக சாலை கட்டமைப்பை உருவாக்கி வைத்து உள்ளது. திடீரென இந்தியா சாலை திட்டங்களை உருவாக்கியதால், அச்சுறுத்தலாக பார்க்கும் சீனா, அதற்கான பரிசாகவே கால்வானில் மோதலை நடத்தியதாக ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 நியோமா விமான நிலையம்

நியோமா விமான நிலையம்

மொத்தத்தில் டார்புக்-ஷியோக்-டிபிஓ சாலை சீனாவின் பார்வையில் அச்சுறுத்தலாக தெரிகிறது. அத்துடன் 2008 ஆம் ஆண்டில் டிபிஓ மற்றும் புக்கே ஆகியவற்றில் மேம்படுத்தப்பட்ட தரையிறங்கு ஓடுதளத்தையும், நியோமா விமானநிலையத்தையும் இந்தியா மீண்டும் தொடங்கியது. இதையும் சீனா விரும்பவில்லை. இது சீனாவிடம் இருந்து நிலப்பரப்பில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இந்தியாவுக்கு அதிக வலிமையை அளிக்கிறது. மிக முக்கியமாக, இது சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தை இந்தியாவால் தொட்டுவிட முடியும் என்று சீனா நினைக்கிறது.

எல்லை எது

எல்லை எது

இமயமலையில் இந்தியா சீனாவுடனான தனது எல்லையைத் தொடங்கும் இடம் கால்வான் பள்ளத்தாக்கு எல்லை. ஆனால் இங்கு எல்லை எங்கு தொடங்கியது என்பது குறித்து சீனா தெளிவில்லாமல் இருக்கிறது. எல்லை முறையாக பிரிக்கப்படவில்லை என்றும் அது ஒரு "பாரம்பரிய வழக்கமான எல்லைக் கோடு" மட்டுமே (கற்பனை கோடு) என்று சீனா தெரிவித்து வருகிறது. எனவே சீனா நம்மை அடிக்கடி அச்சுறுத்தி எல்லை நிலையை மாற்றவே முயற்சிக்கும் என எதிர்பார்க்கலாம்.

Recommended Video

    India - க்கு ஆதரவாக களமிறங்கிய America... மிரண்டு போன China
    சீனாவிற்கு என்ன பதிலடி

    சீனாவிற்கு என்ன பதிலடி

    சீனாவிற்கு தக்க பதிலடியாக இந்தியா ஒரு மாபெரும் உத்தியை உருவாக்கி, அண்டை நாடுகளுடன் எல்லை ஒப்பந்தகைளை புதுப்பிக்க வேண்டும். இப்போதைய சீனாவின் எதிர்வினைக்கு இன்னொரு காரணம், கடந்த ஆகஸ்ட் 2019-ல் ஜம்மு-காஷ்மீரை இந்தியா மறுவரையரை செய்து லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவித்தது. இதை, சீனா கடுமையாக விமர்சித்தது. ‘சீனாவின் எல்லைப்புற இறையாண்மையைக் குறைத்து மதிப்பிடும் செயல்' என்றும் கூறியது.

    English summary
    china standoff with india: The disengagement may happen, but the problem will not go away. beacuse The Chinese are trying to secure a key route of communication and trade, the flagship project of Chinese President Xi Jinping’s Belt and Road Initiative.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X