இளைஞர்கள் கரப்பான் பூச்சிகள்? "நான் உண்மையில் என்ன சொன்னேன் தெரியுமா.." தலைமை நீதிபதி கருத்து

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீதிமன்ற விசாரணைகளின் போது நடக்கும் சம்பவங்களின் வீடியோக்கள் போதிய பின்னணி விளக்கம் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுவது குறித்து இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த் கவலை தெரிவித்துள்ளார். தனது வாய்மொழி கருத்துகள் தவறாக மேற்கோள் காட்டப்பட்டு, தீய நோக்கத்துடன் பயன்படுத்தப்பட்டதாகவும், இதன் மூலம் நாட்டின் இளைஞர்களை தவறாக வழிநடத்த முயற்சி நடந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீட் வினாத்தாள் லீக் விவகாரத்தை முன்வைத்து கரப்பான் பூச்சி கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்துக்கும் மேலாகப் போராட்டங்கள் நடைபெற்றன. ஜூலை 20ஆம் தேதி போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் சிலர் காயமடைந்தனர். இந்த போராட்டங்கள் மற்றும் மாணவர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

Cockroach Janta Party Supreme court Surya Kant

உச்ச நீதிமன்றம்

இவை அனைத்திற்கும் தலைமை நீதிபதி சொன்ன அந்த கருத்தே காரணம் என சொல்லப்பட்டது. அதாவது கடந்த மே 15ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணையின்போது, சில நபர்கள் தங்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தியும் அல்லது தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தியும் ஒட்டுமொத்த அமைப்பையும் தாக்குவதாக குறிப்பிட்டார். அப்போது தலைமை நீதிபதி சிலரை "கரப்பான் பூச்சிகள்" என ஒப்பிட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

தலைமை நீதிபதியின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற பெயரில் முதலில் சமூக வலைத்தளங்களில் பக்கங்கள் உருவாக்கப்பட்டன. அதுவே பின்னாட்களில் போராட்ட இயக்கமாகவும் மாறியது. இது தொடர்பாக தான் தலைமை நீதிபதி சூர்ய காந்த் சில கருத்துகளை கூறியிருக்கிறார்.

துரதிர்ஷ்டவசமானது

டிடி நியூஸுக்கு அளித்த பேட்டியில் இது குறித்து பேசிய தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிமன்ற விசாரணைகளின்போது தெரிவிக்கப்படும் கருத்துகளை முழுமையான பின்னணி இல்லாமல் சிறிய வீடியோ கிளிப்புகளாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுவது அதிகரித்து வருவதாகக் கூறினார். அவர் மேலும், "என் கருத்து தவறாக மேற்கோள் காட்டப்பட்டு, தவறாக பயன்படுத்தப்பட்டது. நான் சொல்லாத ஒரு கருத்தை சொன்னது போல காட்டுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. நாட்டின் இளைஞர்களை தவறாக வழிநடத்தும் தீய நோக்கம் கொண்ட முயற்சியாகவே இது இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.

பொறுப்புடன் கையாள வேண்டும்

இது போன்ற விவகாரங்களில் ஊடகங்கள் நீதிமன்ற நடவடிக்கைகளைப் பொறுப்புடன் செய்தியாக வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சமூக வலைத்தளங்கள், அச்சு ஊடகம் உள்ளிட்ட எந்த தளத்தில் இருந்தாலும், ஒவ்வொரு குடிமகனுக்கும் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கும் பொறுப்பு இருப்பதாக தலைமை நீதிபதி குறிப்பிட்டார். உரிமைகளை பற்றி பேசும்போது, அதற்கேற்ப தங்களது கடமைகளையும் நிறைவேற்றும் திறன் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அவர் மேலும், "சமூகத்தில் நல்லிணக்கம் நிலவுவதை உறுதி செய்ய நாம் அனைவரும் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்" என்றும் சூர்ய காந்த் தெரிவித்தார்.

நீதிபதி கருத்து

நீதிமன்ற விசாரணைகளின் ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளை அனுமதியின்றி சமூக வலைத்தளங்கள் பகிர்வது மற்றும் அவற்றை பணமாக்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவையும் தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார். நீதித்துறையில் வெளிப்படைத்தன்மை அவசியம் என்றும் அதற்காக உச்ச நீதிமன்ற விசாரணைகள் நேரடியாக ஒளிபரப்பப்படுவதாகவும் அவர் கூறினார். ஆனால், இந்த வெளிப்படைத்தன்மையைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் குறிப்பாக நீதிமன்ற விசாரணைகளின் கட் செய்து வணிக லாபத்துக்காக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+