“மாணவர்களிடம் மத்திய அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்”.. கரப்பான்பூச்சி ஜனதா கட்சி திட்டவட்டம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டத்தில் கொடூரத் தாக்குதல்களுக்கு உள்ளான மாணவர்களிடம் மத்திய அரசு பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என கரப்பான்பூச்சி ஜனத கட்சி உறுதியாக உள்ளது. மத்திய அரசிடம் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி வழங்கிய கோரிக்கை கடிதம் வெளியாகியுள்ளது.

டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள், இளைஞர்கள் ஏராளமானோர் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், 26 நாட்களுக்குப் பிறகு தனது உண்ணாவிரத போராட்டத்தை இன்று முடித்துக் கொண்டார்.

CJP

இந்நிலையில், மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சௌரவ் தாஸ் மற்றும் தேசிய செய்தி தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர். நீட் தேர்வு குறித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி பிரதிநிதிகளை சந்தித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி நட்டா, அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கும் என உறுதியளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி குழு, மூன்று முக்கிய கோரிக்கைகளும், ஐந்து பரிந்துரைகளையும் முன்வைத்ததாகவும், நாளை மதியம் அவர்களை மீண்டும் சந்தித்து, அரசு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்த விவரங்களை தெரிவிப்பதாக கூறியுள்ளோம் என்றும் தெரிவித்தார்.

அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது மற்றும் நீட் தேர்வு முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்குப் போதுமான இழப்பீடு ஆகிய இரண்டு நிபந்தனையுடன் கூடிய கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது.

இருப்பினும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி உறுதியாக உள்ளது. இது குறித்து அரசுடன் பேசி நாளை 3ஆம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில், மத்திய அமைச்சர்களிடம் அளிக்கப்பட்டுள்ள கடிதம் வெளியாகியுள்ளது. அதில், இரு தரப்பினருக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒரு தீர்வைக் காண அரசாங்கம் காட்டும் ஆர்வத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். கடந்த சில நாட்களாக, நாடு முழுவதும் உள்ள எங்கள் ஆதரவாளர்கள், ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடனும் நாங்கள் விரிவான ஆலோசனைகளை நடத்தினோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா, நீட் தேர்வர்களுக்கு மறுதேர்வு நடத்துதல், தற்கொலை செய்துகொண்டவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு, மற்றும் போராட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது ஆகிய எங்களின் கோரிக்கைகள் சமரசம் செய்ய முடியாதவை என்பதில் நாங்கள் ஒரு தெளிவான உடன்பாட்டிற்கு வந்துள்ளோம்" என்று கூறப்பட்டிருந்தது.

மேலும், மத்திய அரசு, விரைவு அதிரடிப் படையின் தலைவர் மற்றும் டெல்லி காவல்துறை ஆணையர் ஆகியோர், ஜந்தர் மந்தரில் காவல்துறையினரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட மாணவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் " என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

"இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் கூடிய விரைவில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இல்லையெனில், இந்த இயக்கம் மேலும் பெரிதாக வளர்ந்து நாடு முழுவதும் பரவிவிடும். மேலும், தேர்வு சீர்திருத்தங்கள் குறித்த எங்களின் ஐம்பெரும் கோரிக்கை சாசனத்திற்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும். கல்வி அமைப்பில் தேவைப்படும் பெரிய கட்டமைப்பு சீர்திருத்தத்தைக் கொண்டுவருவதில் இந்த சாசனம் முக்கியப் பங்கு வகிக்கும். விரைவில் ஒரு தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்" என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+