தர்மேந்திர பிரதான் இன்று பதவி விலகுவதாக அறிவிப்பு! கரப்பான்பூச்சி கட்சியினரின் போராட்டம் வெற்றி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

delhi neet

இவர்களது போராட்டம் நாளுக்கு நாள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. டெல்லியில் போராடும் கரப்பான்பூச்சி கட்சியினருக்கு ஆதரவாக தமிழகத்திலும் ஆங்காங்கே மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் பதவி விலகக் கோரி சமூகஆர்வலர் சோனம் வான்சுக் 26 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு அந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்து கரப்பான்பூச்சி கட்சியினருடன் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா சில நாட்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

ஆனால் இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த நிலையில் நேற்று 2ஆவது முறையாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை இரு தரப்பினருக்கும் பொதுவான ஒரு இடத்தில் நடந்தது.

அப்போது மத்திய அமைச்சர் ஜேபி நட்டா, பிரதமர் அலுவலக விவகாரங்கள் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். கரப்பான்பூச்சி ஜனதா தரப்பில் இருந்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடந்தது. கூட்டம் நடந்து முடிந்ததும் ஜேபி நட்டா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: கூட்டத்தில் நாங்கள் அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தோம். அவர்கள் 3 முக்கிய கோரிக்கைகளை முன் வைத்தநர்.

இது தொடர்பாக மத்திய அரசுடன் ஆலோசனை நடத்திவிட்டு நாளை (இன்று) மீண்டும் 3ஆவது கட்ட பேச்சுவார்த்தையை நடத்த போகிறோம். அப்போது நாங்கள் மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் என்னென்ன முடிவுகள் எட்டப்பட்டது என்பதை தெரிவிப்போம் என தெரிவித்திருந்தார்.

அது போல் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் தேசிய செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா கூறியிருப்பதாவது: மத்திய அரசு கால அவகாசம் கேட்டுள்ளது.

தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு நாளை (இன்று) மதியம் வரை மத்திய அரசு அரசு அவகாசம் கேட்டுள்ளது. அவரை விரைவில் அரசு பதவியில் இருந்து நீக்கும் என நம்புகிறோம். தற்கொலை செய்து கொண்ட நீட் தேர்வர்களின் குடும்பங்களுக்கு ரூ 1 கோடி இழப்பீடு வழங்குவது மற்றும் மாணவர்கள் மீதான முதல் தகவல் அறிக்கைகள், சட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவது ஆகிய இரு கோரிக்கைகளுக்கும் கொள்கை ரீதியாக குறிப்பிடத்தக்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

எங்களின் 3 முக்கிய கோரிக்கைகளில் 2-க்கு அரசாங்கம் மிகவும் சாதகமாான பதிலை அளித்துள்ளது. ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் மட்டுமில்லாமல் எதிர்காலத்தில் போராட்டக்காரர்கள் மீது எஃப்ஐஆர் அல்லது எந்த வழக்கும் பதிவு செய்யப்படாது என்ற உத்தரவாதத்தையும் கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் தற்போது தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+