ஞானேஷ் குமாரை காப்பாற்ற சொந்த நாட்டு மக்கள் மீதே போரை நடத்துகிறார் மோடி கரப்பான் பூச்சி கட்சி சாடல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பாதுகாப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அரசு இயந்திரத்தை பயன்படுத்துவதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் தீப்கே குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி போராடும் இளைஞர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் குறிவைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நேஹா போரா, நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோருடன் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தீப்கேவும் கலந்து கொண்டார். தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

Cockroach Janata Party Modi Government Gyanesh Kumar

கரப்பான் பூச்சி கட்சி

கரப்பான் பூச்சி கட்சியின் முக்கிய நிர்வாகிகளான சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் நீதிமன்ற காவலில் திகார் சிறைக்கு அடைக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்தும் கேள்வி எழுப்பினார். அவர் மேலும் பேசுகையில், "டெல்லி இளைஞர்கள் அனைவரும் வீதிகளில் இறங்கி போராடுகிறார்கள். அப்படி போராடும் இளைஞர்கள் வீதிகளில் இழுத்து செல்லப்படுகிறார்கள். நேஹா, ஆயிஷா, விலாஜ், ஈஷா என பலரும் இழுத்து செல்லப்பட்டுள்ளனர். யாருக்காக இதெல்லாம்? ஒரே ஒரு ஞானேஷ் குமாரை காப்பாற்றவே அரசு இதுபோல ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் மக்களுக்கு எதிராக களமிறக்கியிருக்கிறது?

சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக போர்

மேலும், அரசு தனது சொந்த நாட்டு மக்களுக்கு எதிராகவே போர் நடத்துகிறது. தலைமை தேர்தல் ஆணையர் என்ற ஒற்றை நபரை பாதுகாக்க ஏன் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன 2024 லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் சுமார் 2 சதவீதம் மட்டுமே இருந்தது. ஆனால், அதன் பிறகு நடந்த தேர்தல்களில் என்ன ஆனது என்பது உங்களுக்கே தெரியும். தேர்தல்களில் ஞானேஷ் குமார் பாஜகவுக்கு உதவுவதாக மக்கள் ஏன் சந்தேகிக்கக் கூடாது?" என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், "சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின்போது 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. இந்த பணிகளில் இறந்துவிட்டதாக கூறி பலரது பெயர்கள் நீக்கப்பட்டன. ஆனால், அவர்கள் உயிருடன் தான் இருந்தனர். அவர்களை நேரிலேயே நான் சந்தித்தேன். இப்படி பல சிக்கல்கள் உள்ளன" என்றார்.

ஒரே நாடு ஒரே கட்சி

மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை விமர்சித்த தீப்கே, மத்திய அரசின் உண்மையான நோக்கம் 'ஒரே நாடு, ஒரே கட்சி' என்பதுதான் என்று குற்றம்சாட்டினார். இவ்வளவு கட்டுப்பாடுகளை மறைமுகமாக விதிப்பதற்கு பதிலாக பிரதமர் மோடி நேரடியாக எமர்ஜென்சி நிலையை அறிவித்துவிடலாம் என்றும் சாடினார்.

போராட்டங்களின்போது மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் கூட குறிவைக்கப்பட்டதாகவும் தீப்கே கூறினார். போராட்டங்களை சமாளிக்க ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாகவும், நக்சல் பாதிப்புள்ள பகுதிகளில் இருந்து பாதுகாப்புப் படையினர் அவசர அவசரமாக டெல்லிக்கு அழைத்து வரப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

எஸ்ஐஆர்

எஸ்ஐஆர் உள்ளிட்ட பல விவகாரங்களில் தலைமை தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக செயல்பட்டார் என்பதே பிரதான குற்றச்சாட்டு. இதை கண்டித்து ஒரு பக்கம் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தீவிர போராட்டத்தில் இறங்கியுள்ளது. இன்னொரு பக்கம் எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் இறங்கியுள்ள நிலையில், சட்ட ரீதியாகவும் இந்த விவகாரத்தை எடுத்து செல்லும் முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+