டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பா.ஜ.க ஆளும் குஜராத் மாநிலத்தில் அதிகம்.. தமிழகத்துக்கு குறைவான தடுப்பூசிகள்.. மத்திய அரசு பாரபட்சம்!

Google Oneindia Tamil News

டெல்லி: மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு பாகுபாடு காட்டுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்தியா முழுவதும் தொடர்ந்து அச்சறுத்தி வரும் கொரோனா தினம், தினம் உட்ச பாதிப்புகளை கொண்டு வருகிறது.

தினமும் 3,50,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகளும், 2,500-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

அரசை எதிர்பார்த்தது போதும்.. 100 கோடிக்கு தடுப்பூசி வாங்க காங்கிரஸ் ரெடி.. டி.கே.சிவகுமார் அறிவிப்புஅரசை எதிர்பார்த்தது போதும்.. 100 கோடிக்கு தடுப்பூசி வாங்க காங்கிரஸ் ரெடி.. டி.கே.சிவகுமார் அறிவிப்பு

தடுப்பூசிகள் எனும் ஆயுதம்

தடுப்பூசிகள் எனும் ஆயுதம்

கொரோனவை ஒடுக்கும் வகையில் நாடு முழுவதும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. கோவொக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. மாநிலங்களுக்கு மத்திய அரசு தடுப்பூசியை விநியோகம் செய்து வருகிறது. இந்த நிலையில் மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு பாகுபாடு காட்டுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

பாகுபாடு காட்டுகிறது

பாகுபாடு காட்டுகிறது

மே 11-ம் தேதி நிலவரப்படி, 7.9 கோடி மக்கள் தொகை கொண்ட ராஜஸ்தானுக்கு 1.5 கோடி டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. இதே அளவு மக்கள் தொகையுடன், ராஜஸ்தானை விட தொற்று பாதிப்பு அதிகம் உள்ள தமிழகத்துக்கு ராஜஸ்தானை விட 76 லட்சம் அளவுகளுக்கு குறைவான தடுப்பூசிகளே வழங்கப்பட்டது. இதே போல் தமிழகத்தை விட குறைவான மக்கள் தொகையும், குறைவான பாதிப்பும் கொண்ட குஜராத்துக்கு 1.5 கோடி தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

தமிழக அரசு புகார்

தமிழக அரசு புகார்

இது தொடர்பாக புகார் தெரிவித்த தமிழகம் இதே போல் மருத்துவ ஆக்சிஜனும் தமிழகத்துக்கு குறைவாக ஒதுக்கப்படுகிறது என்று கடந்த வாரம் குற்றம்சாட்டியது. 470 மெட்ரிக் டன் தேவை என்று கேட்கப்பட்ட நிலையில் 220 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை மட்டுமே ஒதுக்கியுள்ளதாக தமிழகம் கடந்த வாரம் புகார் கூறியது, அதே நேரத்தில் சென்னையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜனை ஆந்திராவுக்கு மத்திய அரசு அனுப்பியதாகவும் தமிழக அரசு ஏற்கனவே குற்றம்சாட்டியது.

ஒற்றுமை இல்லை

ஒற்றுமை இல்லை

ஆக்சிஜன் விநியோகம் தொடர்பாக மாநிலங்களுக்கு இடையே ஒற்றுமை இல்லை என்று மத்திய அரசு கூறியது. இது தொடர்பாக மத்திய குழுவினர் கூறுகையில், ' கேரளாவின் எல்லை மாவட்டமான பாலக்காட்டில் உள்ள ஐனாக்ஸ் ஆக்சிஜன் தயாரிப்பு ஆலையில் இருந்து தமிழகம் 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் பெற்றது. கடந்த மே 10 அன்று கேரள முதல்வர் மாநிலத்திலிருந்து ஆக்ஸிஜனை வெளியேற்ற அனுமதிக்க மாட்டேன் என்று கூறினார். இதேபோல் பல மாநிலங்கள் ஒற்றுமை இல்லாமல் செயல்படுவதாக அவர்கள் கூறினார்கள்.

English summary
Complaints have been raised that the federal government is discriminating in providing vaccines to states
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X