டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆம் ஆத்மிக்காக நாங்க தியாகம் பண்ணிட்டோம்.. அவங்க தான் ஜெயிப்பாங்க.. கெத்து காட்டும் காங்.!

Google Oneindia Tamil News

டெல்லி: ஆம் ஆத்மிக்காக விட்டுக் கொடுத்துவிட்டோம். களத்தில் தீவிரமாக இறங்கவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் நேற்றைய தினம் 70 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இதன் எக்சிட் போல் முடிவுகளும் நேற்று மாலை 6 மணிக்கு மேல் வெளியாகின.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மியே வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் என கணிக்கப்பட்டுள்ளது.

கருத்து கணிப்புகள்

கருத்து கணிப்புகள்

இந்த தேர்தல் கருத்து கணிப்புகள் குறித்து டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி கூறுகையில் அனைத்து கருத்து கணிப்புகள் வரும் 11-ஆம் தேதி பொய்யாகிவிடும். கருத்து கணிப்புகளில் கூறப்பட்டது போல் வெறும் 26 இடங்களில் பாஜக வெற்றி பெறாது. மாறாக டெல்லியில் 48 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்றார்.

வாக்குகள் சிதறும்

வாக்குகள் சிதறும்

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் கேடிஎேஸ் துளசியும் தாரிக் அன்வரும் கூறுகையில் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்படுவார். டெல்லியில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக இறங்கி பிரசாரம் செய்யவில்லை. ஆம் ஆத்மிக்காக நாங்கள் தியாகம் செய்துவிட்டோம். நாங்கள் மட்டும் இறங்கி வேலை பார்த்திருந்தா வாக்குகள் சிதறியிருக்கும்.

நல்ல பாடம்

நல்ல பாடம்

அது பாஜகவுக்குத்தான் சாதகமாக அமையும். எனவே பாஜகவை தோற்கடிக்க நாங்கள் தோற்றாலும் பரவாயில்லை. ஆம் ஆத்மி ஜெயிக்கட்டும் என விட்டுக் கொடுத்துவிட்டோம். இந்த தேர்தல் மூலம் பாஜக நல்ல பாடம் கற்றுக் கொண்டிருக்கும். வெறுப்பு அரசியல் வெற்றி பெறாது என்பதை உணர்ந்திருக்கும். வாக்குகள் மட்டும் பிரிந்தால் பாஜக நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்றனர்.

கெஜ்ரிவால்

கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி பல்வேறு அத்தியாவசிய இலவசங்களை அள்ளிக் கொடுத்துள்ளது. அதில் இலவச மின்சாரம், இலவச குடிநீர், இலவச வைபை சேவை, இலவச மெட்ரோ பயணம், இலவச பேருந்து பயணம் ஆகியவற்றை செய்ய வாக்குறுதி அளித்துள்ளது. காங்கிரஸ் கட்சியை பொருத்த மட்டில் டெல்லியில் ஷீலா தீட்சித் மறைவுக்கு பின்னர் நல்ல தலைவர் யாரும் இல்லை. இதைவைத்தே கெஜ்ரிவால் தனது பிரசாரத்தில் கேள்வி எழுப்பினார். கெஜ்ரிவாலுக்கும் யாருக்கும் போட்டி? என கேட்டார். இதுவே காங்கிரஸ் தோல்விக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் தலைவர்களோ விட்டு கொடுத்துவிட்டோம் என கூறுகின்றனர்.

English summary
Congress Senior leaders says that we admit AAP will win in Delhi. We sacrified our intensifying campaign.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X