பாஜகவின் மனைவி காங்கிரஸ்.. ஆம் ஆத்மியை கண்டால் பயம்! குஜராத் தேர்தல் பற்றி கெஜ்ரிவால் பரபர கருத்து

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கணவன் மனைவி அல்லது சகோதர சகோதரி போன்ற உறவு தொடர்ந்து வருவதாக டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.

குஜராத்தில் வரும் டிசம்பர் மாதம் 2 கட்டங்களாக நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.

தற்போது வெளியான கருத்துக்கணிப்புகளின் முடிவில் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் எனவும், ஆம் ஆத்மி காங்கிரஸை விட அதிக இடங்களில் வெற்றிபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

அர்விந்த் கெஜ்ரிவால்

அர்விந்த் கெஜ்ரிவால்

குஜராத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி வந்த ஆம் ஆத்மி கட்சி, பாஜக காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் பேசிய அர்விந்த் கெஜ்ரிவால், பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கணவன் - மனைவி, சகோதரன் - சகோதரி என்பதைபோன்ற உறவு உள்ளது.

பாஜகவின் மனைவி காங்கிரஸ்

பாஜகவின் மனைவி காங்கிரஸ்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜக - காங்கிரஸ் இடையில்தான் போட்டி என்று சொல்கிறார். காங்கிரஸ் கட்சியும் இதே மனநிலையில்தான் இருக்கிறது. காங்கிரஸ் பாஜகவின் மனைவிபோல் நடந்துகொள்கிறது. அந்த கட்சி பாரதிய ஜனதாவின் பாக்கெட்டுகளில் இருக்கிறது.

 பாஜக மிரட்டல்

பாஜக மிரட்டல்

குஜராத்தில் 27 ஆண்டுகளாக நடந்துகொண்டு இருக்கும் பாஜக ஆட்சியால் அம்மாநில மக்கள் தளர்ந்துபோய் இருக்கிறார்கள். மாநிலத்தில் மாற்றத்தை அவர்கள் எதிர்பார்க்கின்றனர். பாஜகவை சேர்ந்தவர்கள் தொலைக்காட்சி விவாதங்களுக்கு ஆம் ஆத்மி கட்சியினரை அழைக்கக் கூடாது என்று ஊடகங்களை மிரட்டுகின்றனர்.

உறவு அம்பலம்

உறவு அம்பலம்

மணிஷ் சிசோடியா குறித்து விவாதம் நடத்துவார்கள். ஆனால், ஆம் ஆத்மியை சேர்ந்தவர்களை பேச அழைக்க மாட்டார்கள். காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சியினருக்கே அங்கு இடம் உள்ளது. இரு கட்சிகள் இடையே கணவன் - மனைவி, சகோதரன் - சகோதரிபோன்ற உறவு தற்போது அம்பலமாகி உள்ளது.

பாஜகவுக்கு பயம்

பாஜகவுக்கு பயம்

டெல்லி மாநகராட்சி தேர்தலுடன் குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலை அறிவித்து இருக்கிறார்கள். அர்விந்த் கெஜ்ரிவாலை இதன் மூலம் பாஜக குறிவைத்துள்ளதை அனைவரும் புரிந்துகொள்ளலாம். ஆம் ஆத்மி மீது பாரதிய ஜனதா கட்சிக்கு இருக்கும் பயத்தைதான் இது காட்டுகிறது.

2 தேர்தல்

2 தேர்தல்

பாஜக 2 தேர்தல்களிலும் தங்களால் வெற்றிபெற முடியும் என்று நினைத்து இருந்தால் இவ்வாறு செய்திருக்காது. ஆனால், குஜராத் சட்டசபை மற்றும் டெல்லி மாநகராட்சித் தேர்தலில் தோல்வியடைந்துவிடுவோம் என்று அந்த கட்சி அஞ்சுகிறது. ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கு காரணம் இதுதான்.

என் மீது குறி

என் மீது குறி

முதலமைச்சர் பதவி தருவோம் என்று என்று மணிஷ் சிசோடியாவிடம் கூறி அவரை ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வெளியேற சொன்னார்கள். ஆனால், அவர் அதை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தார். தற்போது என் மீது அவர்களின் கவனம் திரும்பி இருக்கிறது.

 பேரம்

பேரம்

குஜராத் சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடாமல் விலகினால் மணிஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிப்பதாக கூறியுள்ளனர். நேரடியாக பாஜக என்னிடம் அணுகாமல் நண்பர்கள் மூலமாக அச்செய்தி எனக்கு வந்தது." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+