டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோவா, கர்நாடகாவில் பாடம் கற்ற காங்கிரஸ்.. சட்டீஸ்கர் தேர்தல் ரிசல்ட் நாளுக்காக பக்கா பிளான்

Google Oneindia Tamil News

டெல்லி: கோவா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பெற்ற பாடத்தின் விளைவாக, சட்டீஸ்கர் மாநிலத்தில் தங்கள் கட்சி எம்எல்ஏ கைகளை பாதுகாத்துக் கொள்வதில் காங்கிரஸ் மும்முரம் காட்டி வருகிறது.

சட்டீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் மாதம் 12 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. ஆளும், பாஜக விடமிருந்து ஆட்சியை பிடித்து விடுவோம் என்பதில் காங்கிரஸ் மிகவும் நம்பிக்கையோடு உள்ளது.

டிசம்பர் 11-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே தனது கட்சி எம்எல்ஏக்கள் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் அந்த கட்சி இறங்கிவிட்டது. காங்கிரஸ் கட்சியின் இந்த அதிரடிக்கு காரணம் இதற்கு முன்பாக கோவா மற்றும் கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் முடிவின் போது பாஜக நடந்துகொண்ட விதம்.

ஆலோசனை

ஆலோசனை

நவம்பர் 28ஆம் தேதி, சட்டீஸ்கரின், 90 தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்களும், மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாகலை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது தேர்தல் முடிவுகள் வெளியானதும் அனைத்து வேட்பாளர்களும் உடனடியாக தலைநகர் ராய்பூருக்கு வருமாறு கட்சித் தலைமையால் உத்தரவிடப்பட்டது.

குதிரை பேரம்

குதிரை பேரம்

தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் போது தங்களது வேட்பாளர்கள் அவரவர் தொகுதிகளில் இருந்தால் பாஜக குதிரை பேரம் செய்தவர்களை இழுத்து விடும் என்ற பயம் காங்கிரஸ் கட்சியின் மேலிடத்தில் உள்ளது.

கர்நாடகா நிலை

கர்நாடகா நிலை

கோவா மாநிலத்தில் பெரும்பான்மை தொகுதிகளை காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தாலும் கால தாமதத்தின் காரணமாக பாஜக ஆட்சி சென்றுவிட்டது கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் முடிவடைந்து எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குதிரை பேரம் மூலம் இழுப்பதற்கு பாஜக தலைவர்கள் முயற்சி செய்து அந்த ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

சட்டீஸ்கர் தேர்தல்

சட்டீஸ்கர் தேர்தல்

இருப்பினும், உடனடியாக ரிசார்ட்டுகளில் தங்கவைக்கப்பட்டு தங்களது எம்எல்ஏக்களை பாதுகாத்து கொண்ட காங்கிரஸ் கட்சி, மதசார்பற்ற ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துக் கொண்டது. இந்த அனுபவங்களின் அடிப்படையில் சட்டீஸ்கர் தேர்தலையும், காங்கிரஸ் மேலிடம் அணுகுகிறது.

ரகசிய இடம்

ரகசிய இடம்

சமீபத்தில் கிடைத்த தகவல்படி தலைநகர் ராய்ப்பூருக்கு, பதிலாக வேறு ஒரு இடத்திற்கு அனைத்து எம்எல்ஏக்களையும், அழைத்துச் செல்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியானதும் இந்த ரகசிய இடம் குறித்த தகவல் அனைத்து எம்எல்ஏக்களும் தெரிவிக்கப்பட்டு அங்கு அவர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் காங்கிரஸ் மேலிட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
Though the result of Chhattisgarh Assembly elections will be declared on December 11, 2018 but the Congress seems to be confident of winning in the state but appears more worried about poaching of their MLAs. So the party is working on the strategy that winning candidates of the Congress must not be left alone and a team of the party will be immediately attached with the winning MLAs. The state Congress and the high command would transport them to the safe places so they can't be poached.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X