"உயிரோடு திரும்பி வந்தேனே".. பிரதமர் மோடி சொன்னாரா?.. ஏன் அஃபிஷியலா உறுதிப்படுத்தலை?.. காங். கேள்வி
டெல்லி: பஞ்சாப்பில் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்ட நிலையில் விமான நிலையத்தில் தன்னை உயிரோடு செல்ல அனுமதித்த பஞ்சாப் முதல்வருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்ததாக செய்தி நிறுவனங்கள்தான் கூறுகின்றனவே தவிர இதை பாஜக அமைச்சர்களோ பிரதமர் அலுவலகமோ, பிரதமரோ உறுதி செய்யாதது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பெராஸ்பூரில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரதமர் மோடி வான்வழியாக செல்லவிருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக விமான பயணம் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து சாலை மார்க்கமாக பதிண்டா விமானநிலையத்திலிருந்து பெராஸ்பூருக்கு பிரதமர் தனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் புறப்பட்டார்.

20 நிமிடங்கள் பாலத்தில் சிக்கிய பிரதமர்
அப்போது ஒரு முக்கிய பாலத்தில் 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் பிரதமரின் கான்வாய் 15 முதல் 20 நிமிடங்கள் வரை அங்கேயே ஸ்தம்பித்தது. இதையடுத்து பிரதமர் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு பதிண்டா விமான நிலையத்திற்கே திரும்பி சென்றார்.

பஞ்சாப் முதல்வருக்கு நன்றி
அங்கு பஞ்சாப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் விமான நிலையத்திற்கு நான் உயிருடன் திரும்பி இருக்கிறேன். அதற்காக உங்கள் முதல்வருக்கு நன்றி சொன்னேன் என சொல்லிவிடுங்கள் என பிரதமர் நரேந்திர மோடி அதிருப்தி தெரிவித்ததாக செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன. பிரதமர் கூறியதாக சொல்லப்படும் இந்த வார்த்தைகள் அவரது பாதுகாப்பில் எந்த அளவுக்கு குறைபாடு இருந்திருக்கும் என பலரை நினைக்க வைத்தது.

காங்கிரஸ் கட்சி கேள்வி
இந்த நிலையில் பிரதமர் கூறியதாக சொல்லப்படும் இந்த வார்த்தை குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுரேஜ்வாலா, தான் உயிரோடு திரும்பி வந்ததற்கு பஞ்சாப் முதல்வருக்கு பிரதமர் நன்றி கூறியதை பிரதமரோ, பிரதமர் அலுவலகமோ பாஜக அமைச்சர்களோ ஏன் உறுதிப்படுத்தவில்லை?

பயங்கரவாதிகளா நக்ஸல்களா
பிரதமரின் கான்வாய் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டதா? பிரதமர் இருந்த இடத்தில் பயங்கரவாதிகளோ நக்ஸலைட்டுகளோ இருந்தனரா? வானிலை காரணமாக விமான பயணத்தை ரத்து செய்து விட்டு கடைசி நேரத்தில் சாலை மார்க்கமாக அவர் பயணித்தது ஏன் என்பன உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகள் எழும்பியுள்ளன.












Click it and Unblock the Notifications