குப்புன்னு வியர்திருக்கும்.. கேரள பாஜக போட்ட போடு.. மோடியை டென்சன் பண்றாங்களே
டெல்லி: லோக்சபா தேர்தல் முடிவு நேற்று வெளியான நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. அதேவேளையில், இந்தியா கூட்டணியின் ஆட்சி அமைக்க வியூகம் வகுத்து வருகிறது. இத்தகைய பரபரப்பு சூழலில் மோடியை கலாய்த்து காங்கிரஸ் பதிவு ஒன்றை பொட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டிக்கு தேவையான 272 இடங்கள் கிடைக்கவில்லை. இதனால், பாஜக இந்த முறை கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் தயவு தற்போது பாஜகவுக்கு தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 292 இடங்கள் உள்ளன.

காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு 234 இடங்கள் உள்ளன. பிற கட்சிகள் 17 இடங்கள் பெற்றுள்ளன. இந்தியா கூட்டணிக்கு ஆட்சி அமைக்கக் கூடிய அளவிற்கு எண்ணிக்கை இல்லை என்றாலும் கூட பாஜகவை ஆட்சி அமைக்க விட மாட்டோம் என்றும் அதற்கான வியூகங்கள் எங்களிடம் உள்ளன என்றும் கூறிவருகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவை தங்கள் பக்கம் இழுக்க இந்தியா கூட்டணி முயற்சிக்கலாம் என்று சொல்லப்படுவதால் வாக்கு எண்ணிக்கை முடிந்ததில் இருந்து தேசிய தலைநகரில் உச்ச கட்ட பரபரப்பு நிலவுகிறது. மோடி வரும் 8 ஆம் தேதி பதவியேற்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விரைவில் ஜனாதிபதியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் டெல்லியில் மோடி இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
முன்னதாக பீகாரில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் நிதிஷ் குமாரும், இந்தியா கூட்டணியில் உள்ள தேஜஸ்வி யாதவும் அருகருகே அமர்ந்து பயணித்தனர். இது பல்வேறு யூகங்களுக்கும் வழி வகுத்தது. இந்த நிலையில் கேரள காங்கிரஸ் தனது எக்ஸ் தளத்தில் அகிலேஷ் யாதவுடம் சந்திரபாபு நாயுடுவும சந்தித்து பேசிய பழைய புகைப்படத்தை பதிவிட்டு உள்ளது.
இந்த படத்திற்கு கேப்ஷனாக, மோடி பயப்படாதீங்க.. இது பழைய புகைப்படம்.. என்று பதிவிட்டுள்ளது. கேரள காங்கிரசின் இந்த பதிவு எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது. அரசியல் டிரெண்டிற்கு ஏற்ப பாஜகவை கலாய்க்கும் விதமாக காங்கிரஸ் இந்த புகைப்படத்தை பதிவிட்டு இருப்பதாக நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications