மோடி தலைமையிலான பாஜகவின் 7 ஆண்டுகால ஆட்சியில் 9.50 லட்சம் பேர் தற்கொலை: காங். பொளேர் தாக்கு
டெல்லி: மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் 7 ஆண்டுகால ஆட்சியில் நாடு முழுவதும் 9.50 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்; 7 ஆண்டுகளில் விவசாயிகள் தற்கொலை 139% அதிகரித்துள்ளது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ரந்தீர்ப் சுர்ஜிவாலா சாடியுள்ளார்.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையை முன்வைத்து ரந்தீப் சுர்ஜிவாலா இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2014-ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டுவரை இந்தியாவில் தற்கொலை செய்துகொண்டோர் மொத்த எண்ணிக்கை 9,58,275. நாட்டில் மாணவர்களின் தற்கொலை விகிதம் 55% அதிகரித்துள்ளது.

விவசாயிகள் தற்கொலைகள்
வேலை வாய்ப்பு கிடைக்காத இளைஞர்களின் தற்கொலை விகிதம் 58% ஆக அதிகரித்திருக்கிறது. இந்த வரிசையில் நாட்டில் விவசாயிகள் தற்கொலை சம்பவங்களானது 139.37% அதிகமாக பதிவாகி இருக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசினால் இதுவரை 78,303 விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டு போயுள்ளனர். இதில் 35,122 பேர் விவசாய கூலிகள்.

தற்கொலைகள் அதிகரிப்பு
2019 மற்றும் 2020 ஆண்டுகளை ஒப்பிடுகையில் விவசாயிகளின் தற்கொலை 19% அதிகரித்துள்ளது. மோடியின் ஆட்சியில் 69,407 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். 2014-2020-ம் ஆண்டில் 1,52,127 பெண்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். இந்த நாட்டின் இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைவருக்குமே அவர்களின் எதிர்காலம் இருள் சூழ்ந்த ஒன்றாகத்தான் தெரிகிறது.

வேலைவாய்ப்பும் வருமான அதிகரிப்பும்
ஆக்ஸ்பாம் அறிக்கையின்படி 12 லட்சம் இந்தியர்கள் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். ஆனால் நாட்டின் 100 பணக்காரர்களின் சொத்து மதிப்பு மட்டும் 13 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்கள், தனியாருக்கு தாரை வார்க்கப்பட்ட பயிர் காப்பீடு திட்டம், விவசாயத்துக்கான செலவினங்கள் அதிகரிப்பு ஆகியவைதான் விவசாயிகளின் தற்கொலை முடிவுகளுக்கு காரணம்.

தற்கொலைக்கான காரணம் என்ன?
ஆனால் இந்த தற்கொலைகளை மூடி மறைக்கும் பல நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு மேற்கொண்டும் வருகிறது. மத்திய பாஜக அரசானது மக்கள் மீது அக்கறை இல்லாமல் இருப்பதால் தற்கொலை முடிவை எடுக்க நேரிடுகிறது. விவசாயத்தில் உள்ளீட்டுச் செலவு அதிகரிப்பு, ஆதரவு விலைக் குறைவு, பயிர்க் காப்பீடு திட்டத்தில் தனியார் நிறுவனங்கள் அதிகமாகப் பலன் பெறுதல், இறுதியாக கறுப்பு வேளாண் சட்டங்கள் போன்றவற்றால், விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டனர்
-
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
ஷாக்கில் அதிமுக! விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அந்த சரவணனா? பாஜக விஐபிகள் போட்ட மெகா ஸ்கெட்ச் -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக!












Click it and Unblock the Notifications