கண்சிவந்த ராகுல்.. திடீரென கொத்து கொத்தாக காங்கிரஸில் இளம் நிர்வாகிகள் சஸ்ணெ்ட்! என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்குவதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. ஆனால் அந்த விஷயத்தில் மேலிடம் சொல்வதை கேட்காமல் அலட்சியமாக செயல்பட்ட கட்சியின் இளைஞர் பிரிவை சேர்ந்த இளம் நிர்வாகிகள் கொத்து கொத்தாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு வரும் நிலையில் அதன் பின்னணி பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

congresss-youth-wing-suspends-215-office-bearers-for-failing-to-attend-november-1-india-bloc-rally

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்பட 'இந்தியா' கூட்டணி கட்சியினர் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

கடந்த ஒன்றாம் தேதி டெல்லியில் பிரமாண்ட ஊர்வலம் மற்றும் ராம்லீலா மைதானத்தில் ராகுல் காந்தி தலைமையில் மத்திய அரசை கண்டித்து பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ், சமாஜ்வாதி, 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மம்தா பானர்ஜி அணியினர் உள்பட 'இந்தியா' கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். சமீபத்தில் நடந்த 'இந்தியா' கூட்டணியின் மிகப்பெரிய பொதுக்கூட்டமாக இது அமைந்தது.

இந்நிலையில் தான் இந்த டெல்லி பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தேசிய, மாநில, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் பலரும் இதனை பின்பற்றவில்லை. இந்நிலையில் தான் தற்போது நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி தனது இளைஞர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளை சஸ்பெண்ட் செய்து வருகிறது. தற்போது வரை 8 மாநிலங்களில் 256 இளம் நிர்வாகிகள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 60 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கு அடுத்து குஜராத்தில் 49 நிர்வாகிகளும், ஜார்கண்ட்டில் 32 பேரும், மேற்குவங்கத்தில் 26 பேரும், தெலங்கானாவில் 14 பேரும், இமாச்சல பிரதேசத்தில் 13 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் உத்தர பிரதேசத்தின் சென்ட்ரலில் 11 பேரும், ஹரியானாவில் 10 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. இதில் குஜராத்தை எடுத்து கொண்டால் அகமதாபாத், அம்ரேலி, ஆனந்த், ஆரவள்ளி, பனஸ்கந்தா, காந்தி நகர், ஜூனாகத், மேஷானா, படான், பஞ்சமஹால் உள்ளிட்ட மாவட்டங்களில் இளைஞர் காங்கிரஸ் தலைவர்களே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 3ம் தேதி இந்த சஸ்பெண்ட் நோட்டீஸ் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது. மறுஅறிவிப்பு வரும் வரை இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கேட்டபோது, ''டெல்லி பேரணி, பொதுக்கூட்டத்திற்கு வருகை பதிவை கண்காணிக்க இந்திய இளைஞர் காங்கிரஸ் செல்போன் செயலியை பயன்படுத்தினர். பேரணி நடைபெறும் இடங்கள், நேரம் மற்றும் பிற விவரங்களை பகிர்ந்துகொள்ள இந்த மொபைல் செயலி பயன்படுத்தப்பட்டது. இதில் பதிவு செய்யாத மற்றும் செயலியில் உள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குறிப்பாக டெல்லி பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கட்டாயம் கலந்து கொள்ள அறிவுரை கூறியும் நிர்வாகிகள் அலட்சியமாக பங்கேற்கவில்லை. இதனால் ஒழுங்கு நடவடிக்கையாக அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்." என கூறியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் இளம் நிர்வாகிகளின் இந்த செயல்பாட்டால் ராகுல் காந்தி கடும் அதிருப்தியடைந்த நிலையில் அவரது பரிந்துரையின்படி நிர்வாகிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+