டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா கேஸ்கள்: "இன்னும் 10 நாட்கள்தான்" கவனமாக இருங்க.. தமிழகத்திற்கு வார்னிங் கொடுத்த நிபுணர்!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா பரவல் குறித்து நாள்தோறும் ஒவ்வொரு செய்திகள் வெளியாகி வருகின்றன. முடிவுக்கு வரும் என எதிர்பார்த்தால் புதிய வேரியண்ட்களாக முளைக்கிறது.

இந்தியாவில் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.17 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. கொரோனா மூன்றாவது அலையில் இந்த எண்ணிக்கை மிக அதிகமாகும்.

தமிழகத்தில் கொரோனா தீவிரம் - ஐசியூ நோயாளிகள், ஆக்சிஜன் தேவைப்படுவோர் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரிப்பு தமிழகத்தில் கொரோனா தீவிரம் - ஐசியூ நோயாளிகள், ஆக்சிஜன் தேவைப்படுவோர் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரிப்பு

அது போல் தினசரி கொரோனா கேஸ்களில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. அது போல் இந்தியாவில் ஓமிக்ரானால் 9,287 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் இந்த ஓமிக்ரானோடு கொரோனா முடிவுக்கு வரும் என வைரலாஜிஸ்ட்கள் சொல்கிறார்கள்.

பெருநகரங்கள்

பெருநகரங்கள்

இந்த கொரோனா குறித்து கான்பூர் ஐஐடியின் மணீந்திர அக்ரவால் கூறுகையில் இந்தியாவில் வரும் 23 ஆம் தேதி முதல் கொரோனா கேஸ்கள் உச்சத்தை தொடும். ஆனாலும் 4 லட்சத்திற்கு கீழ் இருக்கும். மெட்ரோ நகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகியவற்றில் ஏற்கெனவே கொரோனா உச்சத்தில் இருக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி

சூத்ரா மாடலை கொண்டு எனது கணிப்பின்படி இந்த மாத இறுதியில் இந்தியாவில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கும். மக்கள்தொகையில் இரு பிரிவுகள் உள்ளனர். குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள், அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள். இதில் தற்போது குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்குத்தான் ஓமிக்ரான் பரவி வருகிறது.

தமிழகத்தில் கேஸ்கள் உயரும்

தமிழகத்தில் கேஸ்கள் உயரும்

மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், குஜராத், ஹரியானாவில் அடுத்த வாரம் கொரோனா தினசரி கேஸ்கள் அதிகரிக்கும். ஆந்திரா, அஸ்ஸாம், தமிழகத்தில் அடுத்த வாரத்தில் கொரோனா அதிகரிக்கும் என்றார். தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 26,981 ஆக உயர்ந்துள்ளது. அதாவது 27 ஆயிரத்தை நெருங்கிவிட்டது.

Recommended Video

    Omicrons 20 Symptoms Revealed! How Long They Last | OneIndia Tamil
    முழு ஊரடங்கு

    முழு ஊரடங்கு

    மருத்துவமனைகளில் 1,70,661 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அடுத்த வாரத்தில் தமிழகத்தில் கொரோனா உச்சம் பெறும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் கூடுதல் கட்டுப்பாடுகள் ஏதேனும் அமல்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கெனவே இந்த மாதம் 31 ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Kanpur IIT-ian Manindra Agrawal says that Tamilnadu may peak high cases in next week.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X