டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குறையுது..கூடுது..ரிப்பீட்டு! இந்தியாவில் ஆட்டம் காட்டும் கொரோனா! இன்று திடீரென அதிகரித்த பாதிப்பு!

Google Oneindia Tamil News

டெல்லி : இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் நேற்று பாதிப்பு 6500 என்ற அளவுக்கு வெகுவாக குறைந்து இருந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் பாதிப்பு 9 ஆயிரத்தை நெருங்கி உள்ளது மருத்துவ நிபுணர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சீனாவின் வூகான் மாகாணத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக அளவில் பலத்த பொருளாதார இழப்புகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி கோரத்தாண்டவம் ஆடியது.

சுமார் மூன்று வருடங்களாக கொரோனாவின் தாக்கம் நீடித்து வரும் நிலையில் மூன்றாவது அலை நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.

 கடுகடு முகத்தோடு போன ஓபிஎஸ்! பின்னாடியே போன 2 கார்.. உள்ளே 3 பேர்! இரவோடு இரவாக நடந்த அந்த சம்பவம் கடுகடு முகத்தோடு போன ஓபிஎஸ்! பின்னாடியே போன 2 கார்.. உள்ளே 3 பேர்! இரவோடு இரவாக நடந்த அந்த சம்பவம்

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

கடந்த சில நாட்களாக பாதிப்பு 8 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் இருந்த நிலையில், நேற்று பாதிப்பு திடீரென சரிந்தது. அதாவது நேற்று 6594 பேருக்கு பாதிப்பு குறைந்தது. அதிரடி மாற்றமாக தினசரி பாதிப்பு 7 ஆயிரத்துக்கு கீழே வந்த நிலையில், இன்று பாதிப்பு 9 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இந்தியாவில் இன்று ஒரே நாளில் 8,822 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

பாதிப்பு உயர்வு

பாதிப்பு உயர்வு

நேற்று முன் தினம் 8,084 என்ற எண்ணிக்கையில், நேற்று 6,594 ஆகவும் கொரோனா பாதிப்பு இருந்தது குறிப்பிடதக்கது. இதன் காரணமாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 கோடியே 32 லட்சத்து 36 ஆயிரத்து 695ல் இருந்து 4 கோடியே 32 லட்சத்து 45 ஆயிரத்து 517 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 5,718 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

பலி எண்ணிக்கை

பலி எண்ணிக்கை

இதனால் இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 61 ஆயிரத்து 370லிருந்து 4 கோடியே 26 லட்சத்து 67 ஆயிரத்து 88 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 15 பேர் பலியாகியுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 5 லட்சத்து 24 ஆயிரத்து 792 பேர் உயிரிழந்தனர்.

தடுப்பூசி எண்ணிக்கை

தடுப்பூசி எண்ணிக்கை

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 50 ஆயிரத்து 548ல் இருந்து 53 ;லட்சத்து 637 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 195.50 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், ஒரே நாளில் 13,58,607 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

English summary
The incidence of corona in India has been on the rise for the past few days and yesterday the incidence was as low as 6500. Today, the incidence is again close to 9 thousand, which has shocked medical experts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X