ஒரே நாளில் 243 பேர் பலி..24 மணி நேரத்தில் 10273 பேருக்கு பாதிப்பு,நம்பிக்கை அளிக்கும் அரசின் அறிக்கை
டெல்லி : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,273 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ள நிலையில், நேற்றைய பாதிப்பை விட குறைவாகும். தடுப்பூசி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பாதிப்பும் வெகுவாக குறைந்து வருகிறது.
2019ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் பரவத் தொடங்கியது. இதன் காரணமாக 7 மாதங்களுக்கு மேலாக பாதிப்பு இருந்தது. இந்த வருடம் மூன்றாவது அலை பாதிப்பு உறுதி செய்யப்பட்ட போதும் கடந்த ஆண்டைவிட உயிரிழப்புகள் சற்று குறைவாகவே இருந்தது.
டெல்டா, டெல்டா ப்ளஸ் , ஆல்பா என அடுத்தடுத்து புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரான் என்ற உருமாறிய புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டது.

கொரோனா 3வது அலை
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10.273 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ள நிலையில், நேற்றைய பாதிப்பை விட சுமார் 11 சதவீதம் குறைவாகும். நேற்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட சுமார் ஆயிரம் குறைவாகும். அதே நேரத்தில் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 4,29,16,117 ஆக உயர்ந்துள்ளது ஆக உயர்ந்து உள்ளது.

பலி எண்ணிக்கை
கொரோனா காரணமாக ஒரே நாளில் 20439 பேர் குணமடைந்து உள்ளதாகவும், இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கையானது 4,22,90,921 ஆக உயர்வடைந்து உள்ளதாக மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கொரோனாவுக்கு 243 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், இதனால் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,13,724ஆக உயர்ந்து உள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையும் 1,11,472 ஆக குறைந்துள்ளது.

தடுப்பூசி எண்ணிக்கை
1,77,36,15,488 டோஸ் தடுப்பூசி இதுவரை செலுத்தப்பட்டுள்ளதாகவும், 96,55,16,594 என்ற எண்ணிக்கையில் முதல் டோஸ் தடுப்பூசியும், 78,92,83,059 என்ற எண்ணிக்கையில் 2வது டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. மேலும் 1,88,15,835 பூஸ்டர் அதாவது முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளதாக கோவின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் குறிப்பிட்ட சதவீதம் பேர் இன்னும் முதல் டோஸ் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளாத நிலையில் அந்த எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நிபுணர்கள் கருத்து
பிப்ரவரி மாதம் கொரோனா மூன்றாவது அலை நிறைவடையும் வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கணித்துள்ள நிலையில் , பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதே எண்ணிக்கையில் தொடர்ந்து குறைந்து வந்தால் மார்ச் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட்டு விட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் மூன்றாவது அலை சரிவை நோக்கிச் செல்வது அரசின் அறிக்கைகளில் இருந்து தெரியவருவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications