டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா பாதிப்பு.. தமிழகத்தில் எங்கெல்லாம் சோதனை செய்யலாம்.. சென்னையில் என்ன வசதி உள்ளது?

இந்தியாவில் மொத்தம் 52 இடங்களில் கொரோனா பாதிப்பு தொடர்பான சோதனைகளை மேற்கொள்ள முடியும்.

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று தமிழகத்தில் மொத்தம் 5 இடங்களில் சோதனை செய்யலாம். இந்தியாவில் மொத்தம் 52 இடங்களில் கொரோனா பாதிப்பு தொடர்பான சோதனைகளை மேற்கொள்ள முடியும்.

இந்தியாவில் வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவில் மொத்தம் 177 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. இதில் இத்தாலியை சேர்ந்த பயணிகள் 16 பேர் அடக்கம்.மகாராஷ்டிராவில்தான் இந்த வைரஸ் தாக்குதல் அதிக பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளது. கேரளா (27), மகாராஷ்டிரா (49), உத்தர பிரதேசம் (16), டெல்லி (10), கர்நாடகா (15), தமிழ்நாடு (2), ஆகியோருக்கு வைரஸ் தாக்கியுள்ளது .

இந்த நிலையில் இந்தியாவில் எங்கெல்லாம் கொரோனா சோதனைகளை மேற்கொள்ளலாம் என்ற பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் எங்கு சோதனை என்ற பட்டியலும் தற்போது வெளியாகி உள்ளது.

தமிழகம்

தமிழகம்

தமிழகத்தில் கொரோனா சோதனைக்கு பின் வரும் மருத்துவமனைக்கு சொல்லலாம்,

சென்னை கிங்ஸ் நோய் தடுப்பு மருத்துவமனை - (044) 22501520, 22501521
சென்னை தொற்றுநோய் மருத்துவமனை - (044) 25912686/ 87/88
பொது அரசு மருத்துவமனை, சென்னை (044) 25305000, 25305723
கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை -(0422) 2301393, 2301394
திருச்சி அண்ணல் காந்தி நினைவு மருத்துவமனை -0431-2771168

வேறு எங்கு

வேறு எங்கு

இது இல்லாமல் மற்ற மாநிலங்களில் எங்கு சோதனை மையங்கள் இருக்கிறது என்று பார்க்கலாம், ஆந்திர பிரதேசத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரி, திருப்பதி, ஆந்திரா மருத்துவ கல்லூரி, விசாகப்பட்டினம், ஜிஎம்சி, அனந்தபூர் ஆகிய இடங்களில் சோதனை செய்யலாம். அந்தமான் & நிக்கோபாரில் ரிஜினல் மருத்துவ ஆராய்ச்சி மையம் ஆகிய இடங்களில் சோதனை செய்யலாம்.

மத்திய பிரதேசம் எப்படி

மத்திய பிரதேசம் எப்படி

மத்திய பிரதேசத்தில் அகில இந்திய நிறுவனம் மருத்துவ அறிவியல், போபால், பழங்குடி ஆரோக்கியத்தில் தேசிய ஆராய்ச்சி நிறுவனம் (NIRTH), ஜபல்பூர் ஆகிய இடங்களில் சோதனை செய்யலாம். கேரளாவில் தேசிய வைராலஜி பிரிவு, அரசு மருத்துவக் கல்லூரி, திருவனந்தபுரம், அரசு மருத்துவக் கல்லூரி, கோழிக்கோடு ஆகிய இடங்களில் சோதனை செய்யலாம்.

குஜராத் நிலை

குஜராத் நிலை

குஜராத்தில் பிஜே மருத்துவக் கல்லூரி, அகமதாபாத், எம்.பி.ஷா அரசு மருத்துவக் கல்லூரி, ஜாம்நகர் ஆகிய இடங்களில் சோதனை செய்யலாம்.புதுச்சேரியில் ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி, புதுச்சேரியில் சோதனை செய்யலாம்.தெலுங்கானாவில் காந்தி மருத்துவக் கல்லூரி, செகந்திராபாத்தில் சோதனை செய்யலாம்.

கர்நாடகா நிலை

கர்நாடகா நிலை

கர்நாடகாவில் பெங்களூர் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பெங்களூர், தேசிய வைராலஜி புலம் பிரிவு பெங்களூர், மைசூர் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மைசூர், ஹாசன் இன்ஸ்ட். மெட். அறிவியல், ஹாசன், ஷிமோகா இன்ஸ்ட். மெட். அறிவியல், சிவமோகா ஆகிய இடங்களில் சோதனை செய்யலாம்.

அசாம் எப்படி

அசாம் எப்படி

அசாமில் கவுகாத்தி மருத்துவ கல்லூரியில் சோதனை செய்யலாம். டெல்லியில் அரசு மருத்துவ கல்லூரி, எய்ம்ஸ், தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் ஆகிய இடங்களில் சோதனை செய்யலாம். மஹாராஷ்டிராவில் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி, நாக்பூர், கஸ்தூர்பா நோய் தோற்று மருத்துவமனை, மும்பை ஆகிய இடங்களில் சோதனை செய்யலாம்.

 ராஜஸ்தான் நிலை

ராஜஸ்தான் நிலை

ராஜஸ்தானில் சாவாய் மான் சிங், ஜெய்ப்பூர், டாக்டர் எஸ்.எஸ் மெடிக்கல் காலேஜ், ஜால்வர், எஸ்பி மருத்துவ கல்லூரி ஆகிய இடங்களில் சோதனை செய்யலாம். உத்தர பிரதேசத்தில், கிங்ஸ் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகம், லக்னோ, மருத்துவ அறிவியல் நிறுவனம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், வாரணாசி, ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி, அலிகார் ஆகிய இடங்களில் சோதனை செய்யலாம்.

மேற்கு வங்கம்

மேற்கு வங்கம்

உத்தராகண்டில் அரசு மருத்துவக் கல்லூரி, ஹல்த்வானியில் ஆகிய சோதனை செய்யலாம்.மேற்கு வங்கத்தில் கொல்கத்தாவின் தேசிய காலரா மற்றும் நுரையீரல் நோய்கள் நிறுவனம், IPGMER, கொல்கத்தா ஆகிய இடங்களில் சோதனை செய்யலாம்.

English summary
Coronavirus: Where we can test, Places in Tamilnadu and other parts of India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X