டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேரளாவில் மட்டுமல்ல; இந்த 8 குட்டி, குட்டி மாநிலங்களிலும் கொரோனா ஜெட் வேகம்.. ஷாக் தரும் ரிப்போர்ட்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை வந்து விட்டதோ என அச்சம் கொள்ளும் வகையில் பல்வேறு மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பல மாநில மக்களும் அச்சம் கொள்ள முதல் காரணம் கேரளாதான்.

கேரளாவில் 2-வது அலையில் அதிகரித்த கொரோனா இன்னும் கட்டுக்குள் வரவில்லை. அங்கு தினமும் 20,000-க்கும் மேல் பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. கேரளாவுக்கு ஆலோசனை வழங்கி உதவி புரிவதற்காக 6 பேர் கொண்ட குழு ஒன்றை அனுப்பி உள்ளது மத்திய அரசு.

கேரளாவில் மட்டும்தான் தற்போது கொரோனா அதிகரித்து வருகிறது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. ஏனெனில் தமிழ்நாட்டில் கொரோனா மீண்டும் வேகம் எடுக்க ஆரம்பித்து விட்டது. இது தவிர வட கிழக்கு மாநிலங்களிலும் தொற்று அதிகரித்து விட்டதாக புள்ளி விவரங்கள் அதிர்ச்சி காட்டுகின்றன.

தொல்காப்பியர் பூங்காவில் நடை பயிற்சி...அப்பா வைத்த மருத மரத்தை ஆசையோடு பார்த்த முதல்வர் ஸ்டாலின்தொல்காப்பியர் பூங்காவில் நடை பயிற்சி...அப்பா வைத்த மருத மரத்தை ஆசையோடு பார்த்த முதல்வர் ஸ்டாலின்

வடகிழக்கு மாநிலங்கள்

வடகிழக்கு மாநிலங்கள்

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்ததால் நாட்டின் மொத்த பாதிப்பில் 50% வைத்திருந்த கேரளாவில் கவனம் செலுத்தப்பட்டது. இருப்பினும் வடகிழக்கு மாநிலங்களும் அதிகரித்து வரும் தொற்றை எதிர்த்துப் போராடி வருகின்றன. மிசோரம், மணிப்பூர், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், அசாம், நாகாலாந்து மற்றும் திரிபுரா உள்பட 8 மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது.

ஆக்டிவ் கேஸ்கள் அதிகம்

ஆக்டிவ் கேஸ்கள் அதிகம்

இந்த எட்டு மாநிலங்களும் இந்தியாவின் மக்கள்தொகையில் 3.8% உள்ளன. ஆனால் இந்த மாநிலங்களில் உள்ள தற்போதைய தினசரி பாதிப்பு 14% ஆகும். இந்த மாநிலங்களில் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை ஜூலை 21-ல் 49,455 ஆக இருந்த நிலையில் ஜூலை 28-ம் தேதி அன்று 55,033 ஆக உயர்ந்துள்ளது. இதில் மிசோரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 1.6 மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது 6,571 -பாதிப்புகள் இருக்கும் நிலையில் 10,500 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன.

ஷாக் கொடுக்கும் புள்ளி விவரங்கள்

ஷாக் கொடுக்கும் புள்ளி விவரங்கள்

இந்தியா முழுவதும் 22 மாவட்டங்களில் கடந்த 4 வாரங்களில் ஒவ்வொரு நாளும் புதிய பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன,. இதில் 13 மாநிலங்கள் வடகிழக்கு பகுதியை சேர்ந்தவை என்று அரசு புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மணிப்பூரில் உள்ள இம்பால் கிழக்கு பகுதியில் கடந்த 6 வாரங்களில் தினமும் புதிய பாதிப்புகள் அதிகரித்துள்ளன. ஜூலை முதல் வாரத்தில் 907 ஆக இருந்த பாதிப்புகள் தற்போது 1,927 பாதிப்புகளாக உயர்ந்துள்ளன.

48 மாவட்டங்களில் ஆதிக்கம்

48 மாவட்டங்களில் ஆதிக்கம்

முக்கியமாக வட கிழக்கு மாநிலங்களில் உள்ள 57 மாவட்டங்களில் 48 மாவட்டங்கள் கடந்த 7 நாட்களில் தேசிய சராசரியை விட அதிக பாசிட்டிவ் ரேட் (TPR) பதிவு செய்துள்ளன. இவற்றில் 36 மாவட்டங்களில் 5%க்கும் அதிகமான TPR உள்ளது கவலையை எற்படுத்தி இருக்கிறது. 5% க்கும் குறைவான TPR என்பது நோய் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதற்கான அர்த்தமாகும்.

 உச்சத்தில் டிபிஆர் ரேட்

உச்சத்தில் டிபிஆர் ரேட்

மிசோரம், மணிப்பூர் மற்றும் சிக்கிம் மாநிலங்களின் TPR கள் கேரளாவின் 12%ஐ விட அதிகம் என்பது நமக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுக்கிறது. இம்பால் கிழக்கு பகுதியில் கடந்த 7 நாட்களின் டிபிஆர் 30.8% ஆக இருக்கிறது. மிசோராமின் சில பகுதிகளில் TPR 22.7% ஆக உள்ளது. இதேபோல் வடகிழக்கு மாநிலங்கள் கணிசமான உயிரிழப்புக்கு காரணமாகின்றன.

கேரளாவை விட அதிகம்

கேரளாவை விட அதிகம்

கடந்த இரண்டு வாரங்களில் உயிரிழப்பு அதிகரித்த 18 மாவட்டங்களில், 9 மாவட்டங்கள் வடகிழக்கைச் சேர்ந்தவை என்று புள்ளி விவரம் ஷாக் கொடுக்கின்றன. மேகாலயாவில் உள்ள கிழக்கு காசி மலை பகுதி கடந்த வாரத்தில் உயிரிழப்பு எண்ணிக்கையில் 49% அதிகரிப்பு கண்டுள்ளது. அசாமில் உள்ள கோலாகாட் மற்றும் மணிப்பூரில் உள்ள காங்போக்பியில் கடந்த வாரங்களில் 10% மற்றும் 25% ஆக இருந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை முறையே 63% மற்றும் 40% ஆக அதிகரித்து காணப்படுகிறது.

ஒடிசாவும் தப்பவில்லை

ஒடிசாவும் தப்பவில்லை

இருந்த போதிலும் தேசிய அளவில் கடந்த வாரம் 7,002 ஆக இருந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 50% குறைந்து 3,674 ஆக ஆறுதல் அளிக்கிறது. வடகிழக்கு மாநிலங்களை தவிர வேறு சில பகுதிகளிலும் பாதிப்பு வேகமெடுத்துள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த ஒரு வாரமாகவே பாதிப்பும், உயிரிழப்பும் அதிகமாக இருக்கிறது. ஒடிசாவில் உள்ள கோர்தாவில் 8.6% உடன் இறப்பு 164 ஆக அதிகரித்துள்ளது, இது அனைத்து மாவட்டங்களிலும் மிக அதிகமாகும். இது முந்தைய வாரத்தில் 57.3% மேல் என்ற வளர்ச்சியில் காணப்படுகிறது. கேரளாவில் உயிரிழப்புகள் 23.5% வளர்ச்சியைக் கண்டுள்ளன.

Recommended Video

    China on High Alert! variant spreads from Nanjing to Beijing | OneIndia Tamil
    தடுப்பூசி வேகம் எப்படி?

    தடுப்பூசி வேகம் எப்படி?

    கடந்த ஏழு நாட்களில் இந்தியா தடுப்பூசியின் வேகத்தை அதிகரித்துள்ளது. 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில், இமாச்சலப் பிரதேசம் தடுப்பூசி செலுத்துததில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இங்கு 1,000 பேருக்கு 680 டோஸ் கொடுக்கப்பட்டுள்ளது. கேரளா 1000 பேரில் 533 டோஸ்களும், டெல்லி 1000 பேரில் 526 டோஸ்களும், ​​மற்றும் குஜராத் 1000 பேரில் 504 டோஸ்களும் செலுத்தி இருக்கின்றன.

    மிக மோசம்

    மிக மோசம்

    நாம் மேற்கண்ட எட்டு வடகிழக்கு மாநிலங்கள் 1,000 மக்களுக்கு சராசரியாக 524 டோஸ்கள் கொடுத்துள்ளன. ஒருபுறம் சிக்கிம் 918 டோஸ்கள், திரிபுரா 738 டோஸ்கள் கொடுத்துள்ளன. மறுபுறம் நிலைமை தலைகீழாக உள்ளது. மணிப்பூர், நாகாலாந்து, மேகாலயா மற்றும் அசாம் ஒவ்வொன்றும் 1000 பேருக்கு 450 க்கும் குறைவான டோஸ்களையே வழங்கியுள்ளன. இந்த பிராந்தியத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மூன்று மாவட்டங்களான நாகான், கச்சார் மற்றும் பார்பேட்டா ஆகிய பகுதிகளில் 1,000 பேருக்கு 250 டோஸ்களுக்கு குறைவாகவே கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

    English summary
    The incidence of corona is increasing not only in Kerala but also in 8 districts in the North East. Of the 57 districts in the North Eastern States, 48 districts have recorded higher positive rates (TPRs) than the national average in the last 7 days
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X