இந்தியாவை தாக்கிய 3வது அலை? வெளிவந்த ரிப்போர்ட்.. அடுத்து என்னவாகும்?
டெல்லி: உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இந்த வாரம் உலகம் மூன்றாவது கோவிட் -19 அலைகளின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக கூறினார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) உட்பட பல ஆய்வுகள், ஆகஸ்ட் இறுதிக்குள் மூன்றாவது அலை இந்தியாவைத் தாக்கக்கூடும் என்று கண்டறியப்பட்டது. ஆனால் கோவிட் தரவை ஆழமாகப் பார்த்தால், மூன்றாவது அலை ஏற்கனவே இந்தியாவைத் தாக்கியுள்ளது என்பதைக் காட்டுகிறது.
ஜூலை 7 ஆம் தேதியில் அன்று இந்தியாவில் 55 நாட்களுக்குப் பிறகு நாட்டில் ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தது. ஒரே நளில் 784 கேஸ்கள் அதிகரித்து மொத்த ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை 460,704 ஆக உயர்ந்தது என்று மத்திய சுகாதார அமைச்சகத்திலிருந்து வெளியிடப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக அதிகரித்துள்ளது. ஜூலை 14 நிலவரப்படி , ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை 2,095 வரை அதிகரித்துள்ளன.

73 மாவட்டங்கள்
சுகாதார அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட தரவுகளின் படி பார்த்தால் 73 மாவட்டங்களில் இன்னும் 10% க்கும் அதிகமான பாசிட்டிவ் விகிதம் உள்ளது. இதன் பொருள் என்னவென்றால். சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 100 பேரில் 10 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் புள்ளி விவரப்படி இந்த 100 பேரில் 10 பேருக்கு பாதிப்பு என்ற நிலை வடகிழக்கு இந்தியாவில் உள்ள 47 மாவட்டங்களில் காணப்படுகிறது.

சிகிச்சையில் உள்ளோர்
முன்னதாக மே 27 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் (சிகிச்சையில் உள்ளோர்) விகிதம் 22.61% குறைந்து இருந்தது. அடுத்த இரண்டு வாரங்களில் இந்த வீழ்ச்சி முறையே 30.18% மற்றும் 31.44% குறைந்தது. மே 28-ஜூன் 3 மற்றும் ஜூன் 4-10 வரையிலான வாரங்களுக்கு இடையிலும் கேஸ்கள் குறைந்தது. ஆனால் அதன்பிறகு தான் ஆக்டிவ் கேஸ்களின் வீழ்ச்சி விகிதம் கடகடவென சரிய தொடங்கி ஆபத்தின் சமிக்கை தெரிய தொடங்கியது.

வீழ்ச்சி அடைந்தது
ஜூன் 24 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் கொரோனா ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை வீழ்ச்சி விகிதம் 23.26% என்று ஆனது. இது ஜூலை 1 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 16.84% ஆக சரிந்தது. ஜூலை 8 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 10% ஆகவும், ஜூலை 15 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 6.17% ஆகவும் சரிந்தது. அதாவது கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தும் நோயில் இருந்து மீள்பவர்களின் எண்ணிக்கை குறையவும் ஆரம்பித்தது. இந்தியாவில் தற்போது 4,30,422 ஆக்டிவ் கேஸ்கள் ( மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர்) உள்ளனர்.

வழக்குகள் உயர்வு
குறிப்பாக கடைசி ஏழு நாட்களில் கொரோனா பாதிப்பு மேல் நோக்கி உயர தொடங்கியது. ஜூலை 12 அன்று 32,906 என்ற அளவில் மிகக் குறைந்த அளவைக் கண்டன, ஆனால் அதன் பின்னர் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா கேஸ்கள் தினசரி 40,000 கேஸ்கள் (பாதிப்பு) வரம்பிலேயே நிலைகொண்டுள்ளன.

ஏழு நாளில் மாற்றம்
கடந்த மே 8 அன்று 3,91,232 என்று இந்தியாவில் உச்சத்தில் இருந்த கொரோனா தினசரி பாதிப்பு, மே 31 அன்று இது 1,75,167 ஆக குறைந்தது, மேலும் ஜூன் 30 அன்று 46,979 ஆக குறைந்தது. ஆனால் ஜூன் மாதத்தின் கடைசி நாட்களில் குறையும் விகிதம் பெரிதாக மாறவில்லை. ஏழு நாளில் சராசரியாக ஆயிரம் என்கிற அளவிற்கே வீழ்ச்சி. அடைந்து வருகிறது. ஜூலை 12 அன்று தினசரி பாதிப்பு 36,349 என்ற குறைவான நிலையை இந்தியா அடைந்தது. ஆனால் அதன் பிறகு, ஒவ்வொரு நாளும் சராசரி அதிகரிக்கத் தொடங்கியது . தற்போதைய சராசரி ஒரு நாளைக்கு 39,125 உறுதிப்படுத்தப்பட்ட கேஸ்கள் என்பதாக உள்ளது.

3வது அலை வந்துவிட்டது
தினசரி குணம் அடைபவர்களின் எண்ணிக்கை விரைவாக குறைந்துவிட்டது. மே 20 அன்று 3,57,295 கோவிட் நோயாளிகள் மீட்கப்பட்டனர். ஆனால் அன்றைக்கு 2,59,551 பேருக்குத்தான் புதிய பாசிட்டிவ் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் ஜூலை 15 உடன் ஒப்பிடுகையில், நாடு முழுவதும் 38,949 பேர் நோயில் இருந்து மீண்டுள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40,226 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்படுபவர்களைவிட குணம் அடைபவர்கள் அதிகமாக இருந்தால் தான் அங்கு நோய் பாதிப்பு குறைந்து வருவதாக அர்த்தம். ஆனால் நோய் பரவல் வீழ்ச்சி அடைவது, குணமடைவோர் விகிதம், புதிய பாதிப்பு என எதுவே இப்போது சரியாக இல்லை. எனவே இப்போது உள்ள டேட்டாக்களை பார்த்தால் இந்தியாவில் மூன்றாவது கோவிட் அலையின் வருகைக்காக இரட்டை எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறார்கள் .

அதிகரிப்பு
ஆர்-மதிப்பு என்பது ஒரு நபரிடமிருந்து அடுத்த நபருக்கு கொரோனா வைரஸ் எவ்வளவு வேகமாக பரவுகிறது என்பதைக் குறிப்பதாகும். தொற்றுநோய் முடிவுக்கு வர R- மதிப்பு 1 க்கும் குறைவாக இருக்க வேண்டும். இந்தியாவில், ஆர்-மதிப்பு மே மாதத்தில் மிகக் குறைவாக இருந்தது, இப்போது வேகமாக அதிகரித்து வருகிறது, இதன் பொருள் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கிவிட்டதை காட்டுகிறது.

இந்தியாவில் எப்படி
சென்னை (ஐ.எம்.எஸ்.சி) கணித அறிவியல் கழகத்தைச் சேர்ந்த சீதாப்ரா சின்ஹா தலைமையிலான ஆய்வாளர்கள் குழு பகுப்பாய்வு செய்ததில், இந்தியாவின் ஆர்-மதிப்பு 1 க்கு கீழே, 0.98 க்கு, மே 11 இல் வந்தது பின்னர் தொற்றுநோய்களின் தொடக்கத்திலிருந்து மிகக் குறைந்த நிலைக்கு சரிந்தது. மார்ச் 9 முதல் ஏப்ரல் 11 வரை 1.37 என்ற உச்சநிலையிலிருந்தது. ஆனால் ஜூன் 16 இல் 0.78 ஆக குறைந்தது, ங ஆனால் ஆர்-மதிப்பு மீண்டும் ஊரடங்கு தளர்வு நடவடிக்கைகள் மற்றும் மக்கள் அலட்சியம் காரணமாக மீண்டும் உயரத் தொடங்கியது. என்.டி.டி.வி பகுப்பாய்வின்படி, ஜூன் 20 முதல் ஜூலை 7 வரை ஆர்-மதிப்பு 0.78 முதல் 0.88 வரை உயர்ந்துள்ளது. இது ஜூலை 16 அன்று 0.95 என்ற புதிய உயர்வைத் தொட்டது.

கேரளா அதிகம்
இங்கே மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இந்தியா முழுவதும் ஆர்-மதிப்பு இன்னும் 1 க்கும் குறைவாக இருந்தாலும், சில மாநிலங்களில் இது அந்த எல்லை தாண்டி விட்டது. அப்படிப்பட்ட மாநிலங்களுக்கு கோவிட் பொருத்தமான நடத்தைகளை செயல்படுத்த அழுத்தம் கொடுக்குமாறு உள்துறை அமைச்சகம் எச்சரித்தது. ஐ.எம்.எஸ்.சி பகுப்பாய்வின்படி, சில வடகிழக்கு மாநிலங்கள் (திரிபுரா 1.15), அருணாச்சல பிரதேசம் (1.14) மற்றும் மன்பூர் (1.07) ஆகியவற்றுடன் கேரளாவின் ஆர்-மதிப்பு 1.10 ஆக உள்ளது. மகாராஷ்டிராவில் 1க்கு மேல் உள்ளது. நாட்டின் பெரிய மாநிலங்களிலும் 1க்கு நெருக்கி வந்துள்ளது, நாட்டின் பெரிய மாநிலங்களில் இரண்டாவது கோவிட் அலை முழுமையாகக் குறையவில்லை என்றாலும், லாக்டவுன் தளர்வு மற்றும் கோவிட் பொருத்தமான நடத்தை இல்லாதது காரணமாக நாட்டில் மூன்றாவது கோவிட் அலையின் ஆரம்ப கட்டம் தொடங்கி உள்ளது,

ஆலோசனை
கோவிட் கேஸ்கள் அதிகரித்து வருவது தொடர்பாக கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஒடிசா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய ஆறு மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு நடத்தினார். இந்த ஆறு மாநிலங்களும் மொத்த கேஸ்களில் 80% மற்றும் கோவிட் இறப்புகளில் 84% ஆகும். கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தான் இதில் பாதிக்கும் மேலானவை. மேலும், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, இந்த ஆறு மாநிலங்களும் சமீபத்திய காலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் ஆகும். கொரோனா நடத்தை விதிகளை பின்பற்றாதது, அலட்சியம் போன்றவை காரணமாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications