ஆல்பா முதல் டெல்டா வரை..எல்லா உருமாறிய கொரோனாவையும் தடுக்கும் இந்திய வேக்சிகன்.. ஆனால் டெல்டா பிளஸ்?
டெல்லி: ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என அனைத்து உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராகவும் கோவாக்சின், கோவிஷீல்டு என இரண்டு இந்தியா வேக்சின்களும் பலன் அளிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அதன் பிறகு பல முறை உருமாற்றம் அடைந்துள்ளது. புதிய உருமாறிய கொரோனா பல நாடுகளிலும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தது.
இதுவரை உலக சுகாதார அமைப்பு ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா ஆகிய நான்கு வகைகளைக் கவலைக்குரிய கொரோனா வகைகளாக பட்டியலிட்டுள்ளது. அதாவது இவை சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனாவை விட வேகமாகப் பரவும், அல்லது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.

ஐசிஎம்ஆர் இயக்குநர்
கொரோனா தடுப்பூசிகள் உருவாக்கப்பட்ட பின்னரே இந்த உருமாறிய கொரோனா வகைகளுக்குத் தோன்றியதால் வேக்சின்கள் இவற்றைக் கட்டுப்படுத்துமா என்பது தான் பலருக்கும் சந்தேகமாக உள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஐசிஎம்ஆர் இயக்குநர் பால்ராம் பார்கவா, "அனைத்து உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராகவும் கோவாக்சின், கோவிஷீல்டு என 2 தடுப்பூசிகளும் வேலை செய்கின்றன.

இந்தியா வேக்சின்கள்
ஆனால், ஒவ்வொரு உருமாறிய கொரோனாவுக்கு எதிராகவும் தடுப்பூசிகளின் செயல்திறன் மாறலாம். ஆல்பா உருமாறிய கொரோனாவகுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பாற்றல் மாற்றமடையவில்லை. ஆனால் கோவாஷீல்டு தடுப்பாற்றல் சற்றே குறைந்துள்ளது. இதேபோல டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராகவும் இரண்டு வேக்சின்களின் தடுப்பாற்றல் குறைகிறது. ஆனால், ஒன்றை மட்டுமே தெளிவாகச் சொல்கிறேன். இரண்டு வேக்சின்களும் அனைத்து உருமாறிய கொரோனாவுக்கு எதிராகவும் வேலை செய்கிறது.

டெல்டா பிளஸ் கொரோனா
டெல்டா பிளஸ் கொரோனா தற்போது 12 நாடுகளில் பரவியுள்ளது. டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு எதிராக வேக்சின் தடுப்பாற்றல் எந்தளவு உள்ளது உள்ளது என்பது பற்றி ஆய்வு நடத்தி வருகிறோம். இன்னும் ஏழு முதல் 10 நாட்களில் இது குறித்து முழு தகவல்களும் நமக்குக் கிடைத்துவிடும். அதன் பிறகு டெல்டா பிளஸ் கொரோனாவை எதிர்கொள்ள புதிய திட்டம் தேவை என்பது தெரிய வரும்.

2ஆம் அலை முடியவில்லை
நமது நாட்டில் இன்னும் கொரோனா 2ஆம் அலை முடியவில்லை. இதை நாம் தெளிவாக உணர வேண்டும். நாடு முழுவதும் 90க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 5% மேல் உள்ளது. நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வரவில்லை, எனவே நாம் மாஸ்க் அணிவது, ஒரே இடத்தில் அதிகம் ஒன்றுகூடுவது போன்ற நடவடிக்கைகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசி
வேக்சின் பணிகளை நாம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். அதேநேரம் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருக்கும் கொரோனா வைரசை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஏதேனும் ஒரு வகை கொரோனாவுக்கு தடுப்பூசி பயன் அளிக்காமல் போகும்பட்சத்தில் தேவைப்பட்டால், தடுப்பூசி கலவையிலும் மாற்றம் செய்யப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications