மனரீதியாக துன்புறுத்தல்.. காமன்வெல்த்தில் விளையாட விடக் கூடாது என சதி.. கதறும் வீராங்கனை
டெல்லி: இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் தான் பங்கேற்கக்கூடாது என்கிற நோக்கத்தில் தன்னை மன ரீதியான துன்புறுத்தலுக்கு சிலர் ஆளாக்கியுள்ளதாக பிரபல குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன் தெரிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்று ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்திய குத்துச்சண்டை வீராங்கனை என்ற பெருமையை பெற்றவர் லவ்லினா போர்கோஹெய்ன். இவர் பல்வேறு சாம்பியன்ஷிப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ளார். மேலும் 2018-ஆம் ஆண்டு நடந்த தொடக்க இந்திய ஓபனில் தங்கம் வென்றபோது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன் பிறகு, ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பாக விளையாடினார்.

வடகிழக்கு மாநிலமான அசாமில் பிறந்த 24 வயதான லவ்லினா, தனது இரண்டு மூத்த சகோதரிகளிடமிருந்து கிடைத்த உத்வேகத்தால் குத்துச்சண்டை வீராங்கனையாக உருவாகினார்.
இந்நிலையில் அவர் நடப்பு காமன்வெல்த் போட்டியில் பங்கேற்ற இங்கிலாந்து சென்றிருக்கிறார். ஆனால் அங்கு தனது பயிற்சியாளர் தன்னுடன் அனுமதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, "இந்த பயிற்சி முகாமில் நான் ஏராளமான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. நான் மனதளவில் துன்புறுத்தப்பட்டேன். எனது பயிற்சியாளர் சந்தியா குருங்ஜி காமன்வெல்த் கிராமத்திற்கு வெளியே உள்ளார். அவர் இங்கு வர அனுமதிக்கப்படவில்லை. போட்டி நடைபெறுவதற்கு 8 நாட்களுக்கு முன்னரே எனது பயிற்சி நிறுத்தப்பட்டுள்ளது.
எனது இரண்டாவது பயிற்சியாளரும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளார். இதனால் எனது பயிற்சி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக என்னால் போட்டியில் கவனம் செலுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. எனக்கு எதிரான அரசியலை நான் உடைத்தெறிவேன். அதன் மீது நான் பதக்கம் வெல்வேன் என்று நம்புகிறேன்." என்று கூறியுள்ளார்.
போட்டி இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில், சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற வீராங்கனை ஒருவர் இவ்வாறு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications