தேர்தல் நேரத்தில் டூர்.. தோற்றுவிட்டு கூப்பாடு போடுவதே வேலையா போச்சு.. டெல்லியில் முளைத்த பேனர்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் புதிய போஸ்டர் போர் வெடித்துள்ளது. கூட்டணி தலைவர்களை குறிவைத்து வைக்கப்பட்டுள்ள இந்த விளம்பரப் பதாகைகளில் எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடும் வகையில் உள்ளன.

தேர்தல் ஆணையம் தொடர்பாக கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகவே சர்ச்சை தொடர்கிறது. தலைமை தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக முடிவெடுத்தாக எதிர்க்கட்சிகள் சாடி வருகிறது. இதை தேசியளவில் மிக பெரியளவில் எடுத்து செல்ல வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் திட்டமாக இருக்கிறது.

Delhi banner War INDIA Bloc Meeting Election Commission SIR

இந்தியா கூட்டணி

இது தொடர்பாக இன்றைய தினம் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை நடத்தவுள்ளது. இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்துக்கு முன்பாக பல்வேறு பகுதிகளில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு, எஸ்ஐஆர் நடைமுறை மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள நிலையில், இந்த பேனர்கள் கவனம் பெற்றுள்ளன.

வெளிநாட்டு பயணம்

ஒரு பேனரில் ராகுல் காந்தி பேக் ஒன்றுடன் நடந்து செல்லும் படம் இடம்பெற்றுள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது அவர் வெளிநாட்டில் இருப்பதாக விமர்சிக்கப்பட்டுள்ளது. அவர் மேலும், "தேர்தல் சமயத்தில் வெளிநாட்டில் மகிழ்ச்சியாக இருந்தார்.. பீகார் தேர்தல் பிரசாரத்தில் 59 நாட்கள் ஆளையே காணோம். ஆனால் மக்கள் தீர்ப்பை வழங்கிய பிறகு தேர்தல் ஆணையம் மீது கேள்வி எழுப்பினார். லேட்டாக வந்துவிட்டு கடிகாரத்தை குறை கூறினார்" என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பேனரில் காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா இடம்பெற்றுள்ளார். அதில் தேர்தல் வெற்றி பெறும்போது அமைதியாக இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள், தோல்வி அடைந்தால் மட்டும் தேர்தல் ஆணையத்தை குறைசொல்வதாக வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. 2026 மே மாத கேரள தேர்தல் முடிவுகளை குறிப்பிட்டு, வெற்றி கிடைத்தபோது தேர்தல் ஆணையத்தில் தவறில்லை என சொல்லும், 2024ல் மகாராஷ்டிர தோல்வியை மோசடி என சொல்வது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளது.

மம்தா

இன்னொரு பேனரில் மம்தா பானர்ஜி மற்றும் அபிஷேக் பானர்ஜி இடம்பெற்றுள்ளனர். "HYPOCRISY AT ITS PEAK" என்ற வாசகம் இடம்பெற்றுள்ள அந்த பேனரில், தேர்தலில் வெற்றி கிடைத்தபோது தேர்தல் ஆணையத்தை குறை சொல்லாதவர்கள், தோல்வி அடையும் போது தலைமை தேர்தல் ஆணையரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகே வைக்கப்பட்டுள்ள மற்றொரு சிவப்பு நிற பேனரில்.. "இந்தியா" கூட்டணியின் ஒட்டுமொத்த நிலைப்பாட்டையே விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளது. "இந்தியா கூட்டணியின் இரட்டை நிலைப்பாடு" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. அதில் அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி, உத்தவ் தாக்கரே, மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன.

அடுத்தகட்ட ஆலோசனை

இந்த பேனர் போர் ஒரு பக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், தேர்தல் ஆணையம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க இந்தியா கூட்டணி கட்சிகள் டெல்லியில் கூடுகின்றன. எஸ்ஐஆர் தொடர்பான சர்ச்சை, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு, வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட விவகாரங்களில் கூட்டு நடவடிக்கை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

குறிப்பாக தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் எஸ்ஐஆர். தொடர்பான சில முடிவுகளில் ஆட்சேபனை தெரிவித்ததாக வெளியான தகவல்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்திற்கு முன்பு வைக்கப்பட்ட இந்த பேனர்களால் சர்ச்சை வெடித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+