டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டாடாகூட உதவுவார்.. உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு ஆக்சிஜனை உறுதி செய்யுங்கள்.. டெல்லி ஹைகோர்ட்

Google Oneindia Tamil News

டெல்லி: தலைநகரில் 1400 கொரோனா நோயாளிகள் உள்ள ஆறு மேக்ஸ் மருத்துவமனைகளுக்கு அவசரமாக தேவைப்படும் ஆக்சிஜன் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Recommended Video

    Corona நோயாளிகளுக்கு எப்படியாவது Oxygen கொண்டு வந்து கொடுங்க.. மத்திய அரசை வெளுத்த Delhi Highcourt

    தேசிய தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா நோயாளிகள் அதிகரித்துள்ளதால் மருத்துவமனைகளும் நிரம்பி வழிகின்றன.

    இந்நிலை தங்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளிகளுக்கு சில மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் மட்டுமே உள்ளதால் தேவையான நடவடிக்கையை உத்தரவிடும்படி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்தியாவில் புதிதாக பரவும் மும்முறை மரபணு மாறிய கொரோனா.. எந்தளவு ஆபத்து? தடுப்பூசிக்கு கட்டுப்படுமா?இந்தியாவில் புதிதாக பரவும் மும்முறை மரபணு மாறிய கொரோனா.. எந்தளவு ஆபத்து? தடுப்பூசிக்கு கட்டுப்படுமா?

    மத்திய அரசின் பொறுப்பு

    மத்திய அரசின் பொறுப்பு

    அவசர வழக்காக இரவு எட்டு மணிக்கு இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் கூறுகையில், "தற்போது மருத்துவமனையில் இருக்கும் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளின் வாழ்க்கை எப்படியாவது மத்திய அரசு காக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்.. ஆக்சிஜன் விநியோகத்தை உறுதி செய்யும் பொறுப்பு மத்திய அரசுடையது. மருத்துவமனைகளுக்கு அவசரமாக தேவைப்படும் ஆக்சிஜன் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்

    மத்திய அரசு பதில்

    மத்திய அரசு பதில்

    தேவைப்பட்டால், தொழிற்சாலைகளுக்கு அனுப்பும் ஆக்சிஜனை ஒட்டுமொத்தமாக மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு அனுப்பலாம். மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவை பல மடங்கு அதிகரித்து விட்டது. ஆனால் தேவைக்கு ஏற்றப்படி ஆக்சிஜன் விநியோகம் இல்லை" என்று கூறினர். டெல்லிக்குத் தேவையான ஆக்சிஜனை அளிக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டதாகவும், இப்போதுகூட அது நடைபெறுவதாகவும் மத்திய அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

    டாடா கூட உதவுவார்

    டாடா கூட உதவுவார்

    இருப்பினும் நீதிபதிகள் மத்திய அரசின் பதிலில் திருப்தி அடையவில்லை, இது தொடர்பாக மேலும் கூறுகையில், "மத்திய அரசுக்கு அனைத்து அதிகாரங்களும் வளங்களும் உள்ளன. இந்த இக்கட்டான நிலையில் டாடா கூட உதவத் தயாராக இருப்பார். இந்த நேரத்தில் அவர் மட்டுமில்லை அனைவரும் உதவத் தயாராக இருக்க வேண்டும்,.

    போக்குவரத்து

    போக்குவரத்து

    ஆக்சிஜன் சிலிண்டர்களின் சாலை வழியாக எடுத்து வர தடை இருந்தால் அதற்கான மாற்று வழிகள் குறித்தும் அதற்கென தனிப் பாதையை ஏற்படுத்துவது குறித்தும், தேவைப்பட்டால் விமானங்கள் மூலம் எடுத்து வருவது குறித்தும் மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும்" என்றனர். மேலும், தற்போதைய சூழ்நிலையில் நீதிமன்றத்தால் அறிவுறுத்தப்பட்டுமே முடியும் என்பதையும் நீதிபதிகள் ஒப்புக்கொண்டனர்.

    English summary
    Delhi high court latest about the supply of Oxygen at six Max hospitals
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X