MRI ஸ்கேன் எடுக்க 2 வருஷம் ஆகுமாம்.. டெல்லி அரசு மருத்துவமனையின் அவலம்! நீதிமன்றத்தை நாடிய நோயாளி
டெல்லி: டெல்லியில் உள்ள 'லோக் நாயக்' அரசு மருத்துவமனையில் MRI ஸ்கேன் எடுக்க நோயாளி ஒருவரை இரண்டு ஆண்டுகள் காத்திருக்குமாறு மருத்துவமனை நிர்வாகம் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்த்து நோயாளி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
டெல்லியில் உள்ள இம்மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். ஆனால் இங்கு அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் வசித்து வரும் மெகபூப் என்பவர் சிகிச்சைக்காக இந்த மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். இவரது பூர்வீகம் பீகார் மாநிலமாகும்.

நோயாளி
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இவர் டெல்லியில்தான் வசித்து வருகிறார். கடந்த ஓராண்டுக்கு முன்னர் விபத்து ஒன்றில் கீழே விழுந்த போது இவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சில நாட்கள் நடக்காமல் இருந்திருக்கிறார். இவர் கூலி தொழிலாளி என்பதால் வேலைக்கு போனால்தான் நிம்மதியாக சாப்பிட முடியும். எனவே வலியை பொருட்படுத்தாமல் தொடர்ந்து வேலைக்கு சென்றிருக்கிறார். ஆனால் உடல் வேலைக்கு ஒத்துழைக்கவில்லை. நாட்கள் செல்ல செல்ல கால் வலி அதிகமாகிக்கொண்டே இருந்துள்ளது. இதனால் வேலை தொடர முடியாமல் அவதிப்பட்டுள்ளார். அடிக்கடி விடுப்பு எடுத்திருக்கிறார்.

அரசு மருத்துவமனை
சரி இந்த கால் வலிக்கு ஒரேயடியாக தீர்வு கண்டுவிடலாம் என 'லோக் நாயக்' மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். மருத்துவர்கள் பரிசோதித்து சில மருந்துகளை கொடுத்துள்ளனர். இந்த மருந்தால் எந்த பலனும் ஏற்படவில்லை. எனவே மீண்டும் மருத்துவமனையை நாடியுள்ளார். மருத்துவர்கள் MRI ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். தனியார் ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் எடுத்துக்கொண்டு தங்களை வந்து பார்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் மெகபூப் கூலி தொழிலாளி என்பதால் இவரால் தனியார் ஸ்கேன் சென்டரில் பணம் கட்டி ஸ்கேன் எடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.

தேதி
இதனையடுத்து 'லோக் நாயக்' மருத்துவமனையில் உள்ள இலவச ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் எடுத்துக்கொள்ள அவருக்கு ஒரு தேதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இங்குதான் சிக்கல் எழுந்துள்ளது. அதாவது இவருக்கு ஒதுக்கப்பட்ட தேதி 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் ஆகும். எனவே இரண்டு ஆண்டுகள் கழித்து வந்து ஸ்கேன் செய்துகொள்ளுமாறு அவரை மருத்துவமனை நிர்வாகம் திருப்பி அனுப்பியுள்ளது. இதனையடுத்து அவர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளார். ஆனால் மருத்துவர்கள் தேதி ஒதுக்கி கொடுத்த ரசீதை மெகபூப் தனது நண்பர்களின் உதவியுடன் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார்.

நோயாளிகள் எண்ணிக்கை
இது பெரும் சர்ச்சையான நிலையில் இது தொடர்பாக மெகபூப்க்காக அசோக் அகர்வால் எனும் வழக்கறிஞர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் லோக் நாயக் மருத்துவமனை நிர்வாகத்தை எதிர்த்து மனுதாக்கல் செய்துள்ளார். இது குறித்து மருத்துவமனை தரப்பி எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. ஆனால், மருத்துவமனையில் சில மூத்த மருத்துவர்கள் இது தொடர்பாக பேசியுள்ளனர். அவர்கள் கூறியதாவது, "லோக் நாயக் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு இலவச MRI ஸ்கேன் வசதி இருக்கிறது. ஆனால் இங்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகம். சராசரியாக நாள் ஒன்றுக்கு சில ஆயிரம் நோயாளிகள் வந்து செல்கிறார்கள்.

விமர்சனம்
இவர்களில் 20-30% பேருக்கு எப்படியாயினும் MRI ஸ்கேன் எடுக்க வேண்டியது இருக்கும். அப்படி இருக்கையில் உடனே எப்படி ஸ்கேன் எடுக்க முடியும்? அதனால்தான் தனியார் ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் எடுத்துக்கொள்ளுங்கள் என்று நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். சில நேரங்களில் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 5 ஆண்டுகள் வரை கூட நோயாளிகளை இழுத்தடிப்பதுண்டு. ஆனால் டெல்லியில் வசிப்பதாக ஆதார் அட்டை இருந்தால் உடனடியாக ஸ்கேன் எடுத்துக்கொள்ளலாம். வெளி மாநில ஆட்களுக்குதான் இந்த நிலைமை" என்று கூறியுள்ளார். தேசிய அளவில் டெல்லி மாடல் என்று கூறப்பட்டு வரும் நிலையில் டெல்லியில் உள்ள மருத்துவமனையிலேயே போதிய அடிப்படை வசதிகள் இல்லாதது பெரும் விமர்சனத்தை உருவாக்கி வருகிறது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications