நாங்க ரொம்ப பொறுமையா டீல் பண்ணோம்! மாணவர் போராட்டம் குறித்து டெல்லி போலீஸ் சொன்னதை பாருங்க

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜூலை.20ம் தேதி கரப்பான் ஜனதா கட்சியின் சார்பில் மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தியிருந்தனர். அப்போது மாணவர்கள் மீது பெல்லட் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், டெல்லி போலீஸ் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மாணவர்களை காயப்படுத்தினார்கள் என்றும் குற்றச்சாட்டு எழுந்து. ஆனால், அதை டெல்லி போலீஸ் மறுத்துள்ளது.

இன்று டெல்லி போலீஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாணவர்கள் மீது அதிக அளவில் தாக்குதல் நடத்தப்பட்டதாக முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

Delhi Police

மேலும் அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "ஜூலை.20 அன்று ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது 30,000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் தடுப்புகளை உடைத்துக்கொண்டு நாடாளுமன்றத்தை நோக்கி செல்ல முயன்றனர். அப்போது வன்முறை வெடித்தது. நிலைமையை கடடுப்படுத்தவே படிப்படையாக பலப்பிரயோகம் செய்யப்பட்டது.

சுமார் 5000 காவலர்கள் 30,000க்கும் அதிகமான மக்களை கையாள வேண்டியிருந்தது. அந்த மோதலில் 240க்கும் மேற்பட்ட காவலர்களும், சுமார் 200 போராட்டக்காரர்களும் காயமடைந்தனர். நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த அனுமதி வழங்கப்படாததால் அந்த போராட்டம் சட்டவிரோத கூட்டம் என்பதே காவல்துறையின் நிலைபாடு. காவல்துறைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், ஒருதலைப்பட்சமான புகைப்படங்கள் மற்றும் சரிபார்க்கப்படாத சமூக ஊடகத் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது" என்று காவல்துறை கூறியிருக்கிறது.

டெல்லி போராட்டத்தில் என்ன நடந்தது?

நாடாளுமன்றம் நோக்கி மாணவர்களும், இளைஞர்களும் பேரணி நடத்த முயன்றனர். அப்போது போலீசார் கடுமையான தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன. இது தவிர மின் அதிர்வு லத்திகளும், பெல்லட் குண்டுகளும் மாணவர்களுக்கு எதிராக பயன்படுத்தியதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பெல்லட் குண்டு தாக்குதலில் 10 மாணவர்கள் காயமடைந்திருக்கின்றனர். இதில் ஒரு மாணவருக்கு பார்வை பரிபோகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. கலவரத் தடுப்பு பிரிவான ரேபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ் பிரிவினர் போராட்டக்காரர்களை கலைக்க 7 முறை பெல்லட் ரவுண்டுகளை சுட்டதாக டெல்லி காவல் நிலையத்தின் பொது நாட்குறிப்பு மற்றும் CRPF உள் விசாரணை அறிக்கைள் மூலம் தெரிய வந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+