டெல்லியை அதிர வைத்த பூஜாவின் லவ் ஸ்டோரி.. கட்டிலுக்கு அடியில் பார்த்து ஷாக்கான போலீஸ்!
டெல்லி: டெல்லியில் தன்னை கைவிட்டு முதல் மனைவியுடன் காதலன் சேர்ந்து கொண்டதால், காதலனின் மகனை கொன்று உடலை கட்டிலில் மறைத்து வைத்திருக்கிறார் இளம் பெண். இந்த கொடூர சம்பவத்தை கண்டுபிடித்த போலீசார், அந்த இளம் பெண்ணை கைது செய்தனர்.
டெல்லி இந்தர்புரியைச் சேர்ந்த ஜிதேந்திரா. இவருடைய மனைவி நீலு. இவர்களுக்கு 11 வயதில் திவ்யான்ஷ் என்ற மகன் இருந்தான். நன்றாக சென்று கொண்டிருந்த குடும்பத்தில் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஜிதேந்திராவுக்கும், நீலுவுக்கும் ஒரு கட்டத்தில் சேர்ந்து வாழவே முடியாத அளவிற்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஜிதேந்திரா நீலுவை பிரிந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஜிதேந்திராவுக்கு 24 வயதாகும் பூஜாகுமாரி என்ற இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் டெல்லியில் உள்ள கோவிலில் அவர்கள் கல்யாணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அத்துடன் தனியாக வீடு எடுத்தும் தங்கி வசித்து வந்துள்ளார்கள்.
ஆனால் முதல் மனைவியை முறைப்படி விவாகரத்து செய்யவில்லை. இதனால் திருமணத்தை பதிவு செய்ய முடியாத நிலை பூஜாகுமாரிக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக முதல் மனைவி நீலுவை சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்யுங்கள். அப்போது தான் நம்முடைய 2-வது திருமணத்தை பதிவு செய்ய முடியும் என்று பூஜாகுமாரி வற்புறுத்தி உள்ளார். ஆனால் ஜிதேந்திரா ஏதாவது சாக்கு போக்கு சொல்லி தள்ளிப்போட்டுக் கொண்டே வந்துள்ளார்.
இப்படியே 3 ஆண்டுகள் உருண்டோடி இருக்கிறது. இது ஒருபுறம் எனில் பூஜாகுமாரிக்கு தெரியாமல், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜிதேந்திரா, தன் முதல் மனைவியுடன் சேர்ந்து கொண்டார். முதல் மனைவியை விவாகரத்து செய்ய மறுத்து வந்த ஜிதேந்திரா, ஒருகட்டத்தில் பூஜாகுமாரியை விட்டு விலகி செல்ல தொடங்கி உள்ளார். தன்னை கைவிட ஜிதேந்திரா முடிவு செய்துவிட்டதை ஒருகட்டத்தில் உணர்ந்து கொண்ட பூஜாகுமாரிக்கு அவரது செயல்கள் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஜிதேந்திரா அவருடைய ஒரே மகன் திவ்யான்ஷ் மீது அளவற்ற பாசம் வைத்திருந்தார். இதனால் திவ்யான்ஷை கொன்று அவரை பழிவாங்க பூஜாகுமாரி முடிவுசெய்தார்.
இதற்கிடையே பூஜாகுமாரி, ஜிதேந்திராவுக்கு 'போன்' செய்து உங்கள் விலைமதிப்பற்ற பொருளை உங்களிடம் இருந்து பறிக்க போகிறேன் என்கூறி உள்ளார். இதனிடையே திவ்யான்ஷ் கட்டிலுக்கு அடியில் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பார்த்த போது, யாரோ கழுத்தை நெறித்து கொன்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசில் ஜிதேந்திரா நீலு தம்பதி புகார் அளித்தனர். இந்தர்புரி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது ஜிதேந்திரா வீட்டுக்கு பூஜாகுமாரிதான் கடைசியாக வந்து போனது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் 3 நாட்களாக அவரைத் தேடி கைது செய்தனர். அவர் ஜிதேந்திராவை பழிவாங்க அவரது ஆசை மகனை கழுத்தை நெரித்து கொன்றதை ஒப்புக்கொண்டார்.உடலை கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்ததையும் ஒப்புக்கொண்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. பூஜாகுமாரியின் இந்த லவ் ஸ்டோரி டெல்லியை அதிர வைத்துள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications