ம்ஹூம்.. சரியில்லை.. ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை சீரமைக்க வேண்டும்.. மோடி அதிரடி அட்வைஸ்
டெல்லி: ஊரக வேலை உறுதி திட்டத்தில் பல முரண்பாடுகள் இருப்பதாகவும், அதனை மறுசீரமைக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
குறைந்தபட்ச வேலை வாய்ப்பு என்பதை உறுதி செய்யும் வகையில் கடந்த 2005 ஆம் ஆண்டு அப்போது ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி 'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதிச்சட்டத்தை' கொண்டு வந்தது.
இந்த சட்டத்தின் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

ஊரக வேலை வாய்ப்பு
'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு' திட்டத்தின் கீழ் ஊரக பகுதிகளில் பல்வேறு பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். நீர் வள பாதுகாப்பு, நீர் சேமிப்பு, வறட்சி எதிர்ப்பு திறன் ஏற்படுத்துதல், காடு வளர்ப்பு உள்ளிட்ட வேலைகளில் ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியம் மற்றும் வேலைநாட்களும் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது.

முரண்பாடுகளை களைய குழு
இதனிடையே, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி சட்டத்தின் சில முரண்பாடுகள் இருப்பதை அண்மையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பிரதமர் மோடி சுட்டிக்காட்டியுள்ளார். இதையடுத்து, இந்த திட்டத்தில் உள்ள சில முரண்பாடுகளை களைவது தொடர்பாக மத்திய அரசு குழு அமைத்துள்ளது. முன்னதாக இந்த ஆலோசனைக்கூட்டத்தின் போது, ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியின் பயன்பாடு வசதிபடைத்த மாநிலங்களுக்கு சாதகமாக மாற்றப்பட்டுள்ளது.

ரூ.17,814 கோடி நிதியை..
ஏழை மாநிலங்களுக்கு உரிய பங்கு சேரவில்லை. வறுமையை ஒழிக்க கிராமப்புற வேலை உறுதி திட்டத்தை மறு சீரமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த திட்டத்தை மறுஆய்வு செய்ய முன்னாள் ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமர்ஜித் சின்ஹா தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. பீகார், சத்தீஷ்கர், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், ஒடிசா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் நடப்பு நிதியாண்டில் மொத்தம் ரூ.17,814 கோடி நிதியை செலவிட்டுள்ளது.

வறுமை ஒழிப்பு திட்டம்
மொத்தம் ரூ. 45,770 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் 17 ஆயிரம் கோடியை செலவிட்டுள்ளது. இதை இன்னும் எளிதாக சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவில் உள்ள மொத்த ஏழை மக்களில் 64.5 சதவீதம் மேற்கூறிய 6 மாநிலங்களில் தான் உள்ளன. இந்த மாநிலங்கள் 38.9 சதவீத ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதியை மட்டுமே செலவிட்டுள்ளன. எனவே, வறுமை ஒழிப்பு திட்டம் என்பது முக்கிய விவகாரங்களில் கவனம் செலுத்துவதாக இருக்க வேண்டும் என்ற சரியான வாதத்தை பிரதமர் மோடி முன்வைத்தார். எனவே, இந்த பிரச்சினைகளை தீர்க்க நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஊதியங்களில் உள்ள வேறுபாடு
இந்த வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியங்களில் உள்ள வேறுபாடு என்பது மாநில அளவில் உருவாக்கப்பட்டதாக உள்ளது. சில மாநிலங்களில் பயனாளிகள் தங்கள் ஊதியத்தை பெற குறைந்த அளவு வேலை மட்டுமே செய்ய வேண்டியது உள்ளது. இதுபோன்ற பிரச்சினைகளை நாங்கள் அறிந்துள்ளோம். இந்த பிரச்சினைகளை மாநில அரசுகளுடன் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் எடுத்துச்சென்றுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications