வெயில்னு சொன்னா மழை வருது! வானிலை மையத்தில் எல்லாமே பழுதான கருவி! கேள்வி கேட்ட திமுக எம்பி வில்சன்!
டெல்லி : சென்னை மற்றும் காரைக்கால் வானிலை ஆய்வு மையங்களில் பயன்படுத்தப்படும் பழுதடைந்த கருவிகளால் வானிலை குறித்து தவறான தகவல் அறிவிக்கப்படுகிறது. வானிலை ஆய்விற்கு புதிய கருவிகளை பயன்படுத்தும் திட்டம் ஏதேனும் ஒன்றிய அரசிடம் உள்ளதா? என திமுக எம்பி வில்சன் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
வெயில் காலம், மழை, வெள்ளம் மற்றும் புயல் போன்ற காலங்களில் வானிலையை முன்கூட்டியே கணித்து மக்களுக்கு அலர்ட் செய்யும் முக்கியமான பணியை சென்னை வானிலை ஆய்வு மையம் செய்து வருகிறது. பெருமழை போன்ற காலங்களில் வானிலை ஆய்வு மையம் சொல்வது.
தற்போது கூட மாண்டஸ் புயல் மையம் கொண்டிருக்கும் நிலையில், புயல் மழை குறித்து அறிவிப்புகளை தெரிந்து கொள்வதற்கு வானிலை மைய அறிவிப்புகளையே மக்களும், ஏன் அரசும் ஊடகங்களும் கூட நம்பி இருக்கின்றன.

பேய் மழை
இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30-ம் தேதி சென்னையில் யாரும் எதிர்பாராதவிதமாக பேய் மழை கொட்டி தீர்த்தது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகள் மீண்டும் வெள்ளத்தில் மிதந்தன. அன்று இரவும் மட்டும் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதாவது மேக வெடிப்பு போன்று பெய்த மழையால் சென்னையே மொத்தமாக முடங்கியது .

திடீர் மழை
வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே இதுதொடர்பாக ஏதும் எச்சரிக்கை விடுக்காத நிலையில் திடீரென கொட்டிய பேய் மழையால் சென்னைவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர். சென்னையில் திடீர் பேய் மழை கொட்டி தீர்த்தது ஏன்? என்று அப்போது சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனராக இருந்த புவியரசனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

நவீன கருவிகள்
அப்போது பெரும் மழை, புயலை முன்கூட்டியே துல்லியமாக கணிக்கும் அளவுக்கு நவீன கருவிகள் சென்னை வானிலை ஆய்வு மையத்தில் இல்லை'' என்று அப்போது வானிலை ஆய்வு மைய இயக்குனராக இருந்த புவியரசன் கூறினார். மண்டல வானிலை ஆய்வு மையத்தின் 3 ரேடார்களில் சென்னை துறைமுகத்தில் உள்ள ரேடாரும் காரைக்காலில் உள்ள ரேடாரும் அதற்கு முன்னதாகவே பழுதுபட்டிருந்ததாகவும் அப்போது புகார் எழுந்தது.

ரேடியோசோண்டே
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஒரு வானிலை பலூனில் ரேடியோசோண்டே எனப்படும் கருவி வைக்கப்பட்டு, சென்னை, காரைக்காலில் பறக்கவிட்டு, வானிலை ஆய்வுத் துறை ஆராயும். இந்தக் கருவியே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறித்த தகவலைத் தரும். இந்தப் பரிசோதனை பல மாதங்களாகச் செய்யப்படவில்லை என்றும் கடந்த மாதங்களுக்கு கம்யூனிஸ்ட் எம்பி வெங்கடேசன் குற்றம் சாட்டியிருந்தார். அந்த நிலையில் தற்போது வரை தொடர்வதாகவும் கூறப்படுகிறது.

திமுக எம்பி வில்சன்
இந்நிலையில் சென்னை மற்றும் காரைக்கால் வானிலை ஆய்வு மையங்களில் பயன்படுத்தப்படும் பழுதடைந்த கருவிகளால் வானிலை குறித்து தவறான தகவல் அறிவிக்கப்படுகிறது. வானிலை ஆய்விற்கு புதிய கருவிகளை பயன்படுத்தும் திட்டம் ஏதேனும் ஒன்றிய அரசிடம் உள்ளதா? என திமுக எம்பி வில்சன் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவையில் இன்று குளிர்கால கூட்டத்தொடரில் கலந்து கொண்ட அவர் சில நாட்களாக வெயில் அடிக்கும் என கணித்தால் மழை பெய்கிறது எனவும் கூறினார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுமென மத்திய அரசு உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி












Click it and Unblock the Notifications