அதெல்லாம் சரி.. இளையராஜா பாராட்டினாரே 'அம்பேத்கரும் மோடியும்' புத்தகம்.. அது யார் எழுதினது தெரியுமா?
டெல்லி: இளையராஜா முன்னுரை எழுதி மிகவும் சர்ச்சைக்குள்ளான அம்பேத்கரும் மோடியும் எனும் புத்தகத்தை எழுதியது யார் தெரியுமா? அதை வெளியிட்ட நிறுவனத்தின் சிஇஓ யார் போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
அம்பேத்கர் மற்றும் மோடி என்ற புத்தகத்தை ப்ளூகிராப்ட் டிஜிட்டல் பவுன்டேஷன் என்ற நிறுவனம் அமேசானில் விற்பனைக்கு வைத்துள்ளது. இந்த புத்தகத்தில் அம்பேத்கர் எனும் சீர்திருத்தவாதியின் திட்டங்களை நரேந்திர மோடி எப்படி செயல்படுத்தினார் என்பது குறித்து விவரமாக கூறப்பட்டதாக தெரிகிறது.
இந்த புத்தகத்திற்கு இளையராஜா முன்னுரை எழுதினார். பொதுவாக புத்தகத்தை எழுதுவோர்தான் சர்ச்சையில் சிக்கும் சூழல் எழுந்திருப்பதை பல சம்பவங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் முதல்முறையாக ஒரு நூலுக்கு முன்னுரை எழுதி சர்ச்சையில் சிக்கியவர் இளையராஜா என்றால் அது மிகையாகாது.

இளையராஜா முன்னுரை
இந்த புத்தகத்திற்கு கடந்த 9ஆம் தேதி இளையராஜா முன்னுரை எழுதினார். இந்த நிலையில் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா முன்னுரை எழுதியது பெரும்பாலானோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இளையராஜாவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் குவிகின்றன.

டெல்லியில் இயங்கும் அமைப்பு
இந்த நிலையில் இந்த புத்தகம் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ப்ளூகிராப்ட் டிஜிட்டல் பவுன்டேஷன் தயாரித்தது. இதன் தலைமை செயல் அதிகாரியான அகிலேஷ் மிஸ்ரா ஆவார். இவர் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை சமூகவலைதளங்களில் பிரபலப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.

எக்ஸாம் வாரியர்ஸ்
பிரதமர் நரேந்திர மோடி எழுதிய எக்ஸாம் வாரியர்ஸ் என்ற நூலை இந்தி, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 10 மொழிகளில் இந்த நிறுவனம் வெளியிட்டது. இதோடு அல்லாமல் பிரதமர் மோடி பொதுக் கூட்டங்களில் பேசிய முக்கிய பேச்சுகள், சுதந்திர தின விழா, குடியரசு தின விழாக்களில் பேசிய பேச்சுகள் உள்ளிட்டவை அடங்கிய 3 புத்தகங்களையும் வெளியிட்டுள்ளது.

இளையராஜாவிடம் முன்னுரை கேட்டது ஏன்?
பிரதமர் மோடிக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ப்ளூகிராப் நிறுவனம் எழுதிய இன்னொரு புத்தகம்தான் அம்பேத்கரும் மோடியும்!. இந்த நிறுவனம் இதுவரை மோடி குறித்து 4 புத்தகங்களை எழுதியிருந்தாலும் அதை எழுதியவர்கள் யார் என தெரியவில்லை. மோடி, அம்பேத்கர் போல இளையராஜாவும் மிகவும் கஷ்டப்பட்டு தனத வாழ்க்கையில் முன்னேறியுள்ளதாலேயே அவரிடம் முன்னுரை வாங்கியதாக அகிலேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications