டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லேசான தொற்றுடன்.. வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு 6 நிமிட நடைபயிற்சி அவசியம்.. டாக்டர்கள் அட்வைஸ்

Google Oneindia Tamil News

டெல்லி: லேசான தொற்றுடன் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள கொரோனா நோயாளிகள் தங்கள் நுரையீரலின் செயல்பாட்டை சரிபார்க்க ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறை ஆறு நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

நாடு முழுவதும் ஏறக்குறைய அனைத்து மாநிலங்களும் கொரோனாவுடன் கடுமையாக போராடி வருகிறது. கொரோனா உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அதிகளவிலான மூச்சுத் திணறல் காரணமாகவே உயிரிழக்கின்றனர். மூச்சுத்திணறல் அதிகமுள்ள நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் வென்டிலேட்டர் மற்றும் சுவாசக் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை பெறுகின்றனர்.

 ம.பி.யில் மூட நம்பிக்கையின் உச்சக்கட்டம்... கொரோனாவை விரட்ட தீப்பந்தம் ஏந்திய கிராம மக்கள்..! ம.பி.யில் மூட நம்பிக்கையின் உச்சக்கட்டம்... கொரோனாவை விரட்ட தீப்பந்தம் ஏந்திய கிராம மக்கள்..!

நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள்

நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள்

ஆனால் லேசான தொற்றுடன் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள கொரோனா நோயாளிகள் அல்லது தொற்று இருப்பதாக சந்தேகம் உள்ளவர்கள் தினமும் கண்டிப்பாக தங்கள் உடலின் ஆக்ஸிஜன் அளவை சரிபார்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதாவது லேசான தொற்றுடன் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள கொரோனா நோயாளிகள் தங்கள் நுரையீரலின் செயல்பாட்டை சரிபார்க்க ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறை ஆறு நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஆக்சிஜன் அளவு தெரிய வேண்டும்

ஆக்சிஜன் அளவு தெரிய வேண்டும்

மகாராஷ்டிராவின் புனே, கோலாப்பூர் நகர சுகாதாரத்துறை அதிகாரிகள் நுரையீரலின் செயல்பாட்டை சரிபார்க்க மாநில மக்களிடம் இந்த நடைபயிற்சியை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக டெல்லி அப்பல்லோ மருத்துவமனை ஆலோசகர், டாக்டர் சுரஞ்சித் சாட்டர்ஜி கூறுகையில் ''வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்ட அனைவரும் தங்கள் ஆக்ஸிஜன் அளவை தவறாமல் சரிபார்க்க வேண்டும். ஏனெனில் குறைந்த ஆக்ஸிஜன் அளவைக் கொண்டவர்களுக்கு முதலில் எந்த உடல் நலக்குறைவுக்கான அறிகுறிகளும் தெரிவதில்லை. ஆனால் இவை பின்னால் பெரும் விளைவுகளை ஏற்படுத்தி விடும். குறைந்த ஆக்சிஜன் அளவை கொண்டவர்களின் இந்த நிலை 'மகிழ்ச்சியான ஹைபோக்ஸியா' என்று அழைக்கப்படுகிறது.

ஹைப்போக்ஸியா' என்றால் என்ன?

ஹைப்போக்ஸியா' என்றால் என்ன?

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் உடலில் வைரஸ் கிருமி நுரையீரலுக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவைக் குறைத்து சுவாசப் பாதையில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. உடலில் உள்ள திசுக்களில் ஆக்ஸிஜன் அளவு குறைந்துவிடுகிறது. உடலில் போதிய அளவு ஆக்சிஜன் இல்லாமல் போகும் பட்சத்தில் நோயாளிகள் மூச்சுத்திணறி இறுதியில் உயிரிழக்கின்றனர். இந்த நிலையைத்தான் நாம் ஹைப்போக்ஸியா' என்கிறோம். ஆக்ஸிஜன் அளவை ஒரு ஆக்சிமீட்டரில் கண்டறியலாம்.

ப்ரோனிங் சிகிச்சை முறை

ப்ரோனிங் சிகிச்சை முறை

இது கொரோனாவுடன் தொடர்புடைய ஹைபோக்ஸியாவைக் கண்டறிய உதவுகிறது. ஆக்ஸிமீட்டரில் பிரதிபலிக்கும் ஆக்சிஜன் அடிப்படை செறிவு 94 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால் ப்ரோனிங்' சிகிச்சை முறை மூலம் ஆக்சிஜன் அளவை மேம்படுத்திக் கொள்ளளலாம். அபப்டியும் ஆக்சிஜன் அளவில் முன்னேற்றமில்லை இல்லை என்றால் மருதத்துவமனைக்குதான் செல்ல வேண்டும்'' என்று டாக்டர் சுரஞ்சித் சாட்டர்ஜி கூறினார்.

 வென்டிலேட்டர் உதவியின்றி சிகிச்சை

வென்டிலேட்டர் உதவியின்றி சிகிச்சை

மருத்துவர் குறிப்பிட்ட ப்ரோனிங்' சிகிச்சை முறை பற்றி இப்போது காண்போம். மனிதர்கள்-கொரோனாவுக்கு எதிரான போரில் 'ப்ரோனிங்' எனப்படும் சிகிச்சை முறைக ஓரளவு நம்பிக்கையளிக்கின்றன. ப்ரோனிங் முறையில் வென்டிலேட்டர் மற்றும் சுவாசக் கருவிகளின் உதவி இல்லமாலே மூச்சுத்திணறலை சீராக்க முடியும். தீவிர ஹைப்போக்ஸியா பாதிப்பு நிலையில் இருக்கும் கொரோனா நோயாளிகளின் வயிற்றுப் பகுதியில் அழுத்தம் உண்டாக்கும் வகையில் அவர்கள் குப்புறப் படுக்க வைக்க படுகின்றனர்.

ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும்

ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும்

அவ்வாறு படுப்பதன் மூலம் அவர்களின் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கிறது. மேலும் குப்புறப்படுத்த நிலையில் ஏற்படும் அழுத்தம் அவர்களின் உடலில் ஆக்ஸிஜன் ஓட்டத்தைத் துரிதமாகத் தூண்டி திசுக்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து சுவாசக் கோளாறுகளை சரிசெய்கிறது என்று டாக்டர்கள் குறிப்பிட்டனர்.

English summary
Doctors say corona patients who isolate themselves at home with a mild infection should take a six-minute walk at least twice a day to check the function of their lungs
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X