டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரூ.500 இருந்தால் போதும்.. பிரதமர் மோடிக்கு வந்த பரிசு பொருட்களை ஏலம் எடுக்கலாம்.. முழு விவரம்!

Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த ஓராண்டாக பிரதமர் மோடிக்கு வந்த பரிசு பொருட்கள், நினைவு பரிசுகள் ஏலம் விடும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏராளமான பரிசு பொருட்கள் வருகின்றன.

பிரதமர் மோடிக்கு வரும் ஏராளமான பரிசுகளை மத்திய கலாச்சார துறை அமைச்சகம் ஏலம் விட்டு வருகிறது. இதன் மூலம் கிடைக்கும் பணத் தொகை பல்வேறு திட்டங்களுக்காக செலவழிக்கப்பட்டு வருகிறது.

மோடி 2014-ம் ஆண்டு பிரதமர் ஆனதில் இருந்து 2 முறை ஏலம் நடத்தப்பட்டு இருக்கிறது. கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி முதல் அக்டோபர் 24-ம் தேதி ஏலம் நடைபெற்றன.

அடடே.. ஆளுநர் ரவி பொறுப்பேற்றதும் முதல்வர் ஸ்டாலின் கொடுத்த 2 புத்தகங்களை கவனித்தீர்களா? அடடே.. ஆளுநர் ரவி பொறுப்பேற்றதும் முதல்வர் ஸ்டாலின் கொடுத்த 2 புத்தகங்களை கவனித்தீர்களா?

ஏலம் விடும் பணிகள்

ஏலம் விடும் பணிகள்

இதில் பிரதமருக்கு பரிசாக வந்த ஓவியங்கள், சிற்பங்கள், சால்வைகள் மற்றும் பாரம்பரிய இசைக்கருவிகள் உட்பட 2,770 பொருட்கள் ஏலத்தில் வைக்கப்பட்டன. இதன்மூலம் 15.11 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. இந்த வருவாய் கங்கை நதியை தூய்மைபடுத்தும் மற்றும் பாதுகாக்கும் திட்டத்துக்காக வழங்கப்பட்டது. இந்த நிலையில் பிரதமர் மோடியின் பிறந்த தினத்தையொட்டி கடந்த ஓராண்டாக பிரதமருக்கு வந்த பரிசு பொருட்கள், நினைவு பரிசுகள் ஏலம் விடும் பணிகள் தற்போது தொடங்கி இருக்கின்றன.

1300 பொருட்கள்

1300 பொருட்கள்

இந்த ஏலம் நேற்று முதல் தொடங்கி இருக்கிறது. அக்டோபர் 7-ம் தேதி வரை ஏலம் நடைபெறுகிறது. https://pmmementos.gov.in என்ற இணையதளம் வாயிலாக மின்னணு முறையில் மட்டுமே ஏலம் ஏலத்தில் பங்கேற்க விரும்பும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மேற்கண்ட இணையதளம் வாயிலாக மட்டுமே ஏலம் கேட்க முடியும். இந்த ஆண்டு ஏலத்தில் மொத்தம் 1300 பொருட்கள் இடம்பெற்றுள்ளன. சமீபத்தில் ஜப்பானில் நடந்துமுடிந்த ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் போட்டிகளில் தாங்கள் பயன்படுத்திய உபகரணங்களை பிரதமர் மோடிக்கு வழங்கினார்.

நீரஜ் சோப்ரா பயன்படுத்திய ஈட்டி

நீரஜ் சோப்ரா பயன்படுத்திய ஈட்டி

இந்த பொருட்கள் அனைத்தும் ஏலத்தில் வைக்கப்பட்டுள்ளன. ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா தான் பயன்படுத்திய ஈட்டியை மோடிக்கு பரிசாக வழங்கினார். இந்த ஈட்டி ஏலத்தில் இடம்பெற்றுள்ளது. இதன் அடிப்படை விலையாக 1.20 கோடிக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பாராலிம்பிக் பாட்மிட்டனில் தங்கம் வென்ற கிருஷ்ணா நாகர் பயன்படுத்திய ராக்கெட் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற சுகால் யெதிராஜன் பயன்படுத்திய ராக்கெட் ஆகியவை 10 கோடி வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பவானிதேவி பயன்படுத்திய வாள்

பவானிதேவி பயன்படுத்திய வாள்

ஆவணி லக்கேரா அணிந்த டி-ஷர்ட்டின் அடிப்படை விலை ரூ .15 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா பயன்படுத்திய போர்கோஹெய்ன் கையுறை 1.80 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது. பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற மணிஷ் நர்வால் பயன்படுத்திய கண்ணாடி ரூ.95. 94 லட்சத்துக்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது. வாள் வீச்சு வீராங்கணை சி.ஏ பவானிதேவி பயன்படுத்திய வாளின் ஏல மதிப்பு குறைந்தபட்ச விலை ரூ.60 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயிலின் மாதிரி வடிவம்

அயோத்தி ராமர் கோயிலின் மாதிரி வடிவம்

இதேபோல் டோக்கியோ ஒலிம்பிக் வீரர்களின் கையொப்பங்கள் கொண்ட ஒரு பதாகை ரூ.90 லட்சம் அடிப்படை விலையை கொண்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமருக்கு வழங்கிய அயோத்தி ராமர் கோயிலின் மாதிரி வடிவம், சுற்றுலாத் துறை அமைச்சர் சத் பால் மகாராஜா வழங்கிய சதாமின் மாதிரி ஆகியவையும் ஏலத்தில் வைக்கப்பட்டுள்ளது இது தவிர ஏராளமான பொருட்கள் ஏலத்தில் இடம் பெற்றுள்ளன.

ரூ.200 பொருட்களும் உண்டு

ரூ.200 பொருட்களும் உண்டு

ஏலத்தில் லட்சக்கணக்கான, ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பு கொண்ட பொருட்கள் மட்டுமின்றி ரூ.200 மதிப்பு கொண்ட பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. எனவே உங்களிடம் ரூ.500 இருந்தாலும் போதும், பிரதமருக்கு வந்த பரிசு பொருட்களை நீங்கள் ஏலம் எடுக்கலாம். இந்த ஏலத்தில் கிடைக்க பெறும் தொகை கங்கை நதியின் தூய்மை திட்டத்துக்கு பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The auction of gift items and souvenirs for Prime Minister Modi has begun in the last one year . It has been announced that the proceeds from the auction will be used to clean up the Ganges
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X