சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை.. டெல்லி பாஜக அதிரடி முடிவு
டெல்லி: 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க திமுக தீவிரம் காட்டி வருகிறது. மறுபக்கம் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துள்ளனர். பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனித்து போட்டியிட நினைத்த நிலையில், கட்சி தலைமை வேறு முடிவை எடுத்தது. அண்ணாமலைக்கு தேசியளவு முக்கிய பதவி வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்க வேண்டாம் என்று பாஜக மேலிடம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டமன்றத் தேர்தல்
அண்ணாமலை கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் கோவை மக்களவை தொகுதியில் அண்ணாமலை போட்டியிட்டார். இரண்டு தேர்தல்களிலும் அவர் தோல்வியடைந்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் அவர் கரூர் மாவட்டத்தில் போட்டியிடுவாரா அல்லது கோவை மாவட்டத்தில் போட்டியிடுவாரா என்று விவாதம் நடைபெற்று வருகிறது.

அமித்ஷா வீட்டில் ஆலோசனை
இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, "தலைமை எங்கு செல்கிறதோ அங்கு நான் போட்டியிடுவேன்." என்று கூறியிருந்தார். அவருக்கு தேசியளவு முக்கியமான பொறுப்பு வழங்கப்படும், மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்க போகிறது என்றும் தகவல் வெளியாகி வருகிறது. டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா வீட்டில் 2026 தேர்தல் குறித்த ஆலோசனை நடைபெற்றது.
சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த ஆலோசனை நடத்தப்பட்டது. அதேநேரத்தில் அமித்ஷா வீட்டில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கவில்லை. இது பல்வேறு சந்தேகங்களையும், விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. அவரின் நடவடிக்கையை தேசிய தலைமை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாமலைக்கு வாய்ப்பு
இதுகுறித்து பாஜக நிர்வாகிகள் கூறுகையில்," தேசிய தலைவர் மாற்றம், மத்திய அமைச்சரவை மாற்றம் ஆகியவை அடுத்தடுத்து நிகழ போகின்றன. அதன் பிறகு பாஜகவில் அண்ணாமலைக்கு என்றும் அமித்ஷா சூசகமாக கூறியுள்ளார். முக்கியமாக 2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்கப்படாது. பாஜகவில் அவருக்கு தேசியளவு முக்கியத்துவம் வழங்கப்படும்
தேசியளவு வேறு முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பு வழங்கப்பட இருப்பதால் தான், அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளது. இந்த முடிவில் பாஜக தலைமையும் உறுதியாக இருக்கிறது. அண்ணாமலையும் 2026 தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டுவதில்லை. அதன் காரணமாக தான் அமித்ஷாவுடன் நடைபெற்ற முக்கிய ஆலோசனையில் அண்ணாமலை பங்கேற்கவில்லை." என்றனர்.
விமர்சனம்
இது அண்ணாமலையின் ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் திமுக மற்றும் அரசியல் விமர்சகர்கள் இதை விமர்சித்து வருகிறார்கள். அண்ணாமலையின் அரசியல் நகர்வு தமிழ்நாட்டுக்கு உகந்ததாக இல்லை. 2026 தேர்தலில் அதிமுகவின் கூட்டணி முக்கியம் என்பதால் அவருக்கு பொறுப்பு கொடுத்து தமிழ்நாடு அரசியலில் இருந்தே விலக்க பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக?












Click it and Unblock the Notifications