ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலை யாருக்கு? உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சொன்ன பதில் இதுதான்!
ஈரோடு கிழக்கில் இரட்டை இலை சின்னம் கேட்கப்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை விவரித்துள்ளது தேர்தல் ஆணையம்.
டெல்லி: ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலை சின்னம் யாருக்கு ஒதுக்கப்படும் என்பது தொடர்பாகவும் உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தமது பதில் மனுவில் தெரிவித்துள்ளது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தம்மை அங்கீகரிக்க கோரியும் இரட்டை சிலை சின்னம் கோரியும் இபிஎஸ் தாக்கல் செய்த மனுவுக்கு எதிராக தேர்தல் ஆணையம் பதில் மனுத் தாக்கல் செய்திருக்கிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதியில் அதிமுக இபிஎஸ் அணியின் சார்பாக தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக உச்சநீதிமன்றத்தில் அதிமுக இபிஎஸ் தரப்பில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதாவது 2022-ம் ஆண்டு ஜூலை 11-ல் அதிமுக இபிஎஸ் அணி நடத்திய பொதுக்குழு தொடர்பான தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அவ்வழக்கில் ஒரு இடையீட்டு மனுவாக இபிஎஸ் தரப்பு தாக்கல் செய்தது. அந்த இடையீட்டு மனுவில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் தம்மை அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும்; அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தையும் ஒதுக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார் இபிஎஸ்.

அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இடையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான பெஞ்ச் விசித்திரமான வழக்கு என குறிப்பிட்டது. அத்துடன் இடையீட்டு மனு மீது மட்டும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். இந்த உத்தரவுக்கும் அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் திட்டவட்டமாக கூறினர். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ், தேர்தல் ஆணையம் ஆகியவை இபிஎஸ்-ன் இடையீட்டு மனு மீது 3 நாட்களில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் ஓபிஎஸ் தரப்பு, பதில் மனுவைத் தாக்கல் செய்தது. அதில், இபிஎஸ்-ன் இந்த இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கோரும் மனுவை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் இன்று உச்சநீதிமன்றத்தில் பதில் மனுவைத் தாக்கல் செய்தது. இந்த பதில் மனுவில், அதிமுக இபிஎஸ் கோஷ்டி 2022 ஜூலை 11-ல் நடத்திய அதிமுக பொதுக்குழுவின் தீர்மானங்களை தேர்தல் ஆணையம் இன்னமும் ஏற்கவில்லை. அந்த பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட விதம் கேள்விக்குறியானது. ஆகையால் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க முடியாது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக உரிமை கோரும் எடப்பாடி பழனிசாமியின் மனுவை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
மேலும் இரட்டை இலை சின்னம் தொடர்பான தமது நிலைப்பாட்டையும் இந்த மனுவில் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தி இருந்தது. அதாவது, உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு வழக்குதான் நிலுவையில் உள்ளது. இப்போது வரை இரட்டை இலை சின்னம் தொடர்பாக யாரும் யாருக்கும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. ஆகையால் இரட்டை இலை சின்னம் குறித்த பிரச்சனையே எழவில்லை. அத்துடன் (ஈரோடு கிழக்கு தொகுதி) இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தால் அதை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள்தான் முடிவு செய்வார்கள். இதில் தேர்தல் ஆணையம் முடிவு செய்யாது எனவும் விவரிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவின் இபிஎஸ், ஓபிஎஸ் இரு தரப்புமே வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இந்த இருதரப்புமே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கோரும். இந்த இரு அணிகளுக்குமே இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படாமல் தேர்தல் அதிகாரி அதை முடக்கி வைக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
உதிருது இரட்டை இலை! 4 இல்ல.. 10 பேர்! தவெகவுக்கு தாவும் 6 சமஉ.க்கள்? தனிப்பெரும்பான்மை நோக்கி விஜய் -
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
தேன்கூட்டில் கல்லெறிந்ததா தவெக? வேலுமணி கிட்ட சிவி சண்முகம் கேட்ட அந்த கேள்வி? அப்ப எடப்பாடி முடிவு? -
அதிமுக எம்எல்ஏக்கள் தவெக இணைவது நாகரிகம் அற்றது.. அமைச்சர் வன்னியரசு பேட்டி -
சிவி சண்முகத்துக்கு கடைசி சான்ஸ் இதுதான்! எடப்பாடியின் முன் மண்டியிடும் 14 பேர்! பின்னணி காரணம் என்ன -
கொக்கு போல் காத்திருந்த எடப்பாடி.. சீனியர்களை சின்னாபின்னாம்மாக்கி மாஸ்! இப்படி ஒரு ப்ளானா? சூப்பர்! -
சிரித்து சமாளித்த எடப்பாடி.. வேலையைக் காட்டிய வேலுமணி! வெறுப்பில் சிவி சண்முகம்! இனிமே தான் ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications