டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சட்டசபை தேர்தல்.. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை அறிய ஏப்.29ம் தேதி வரை காத்திருக்கணும்

Google Oneindia Tamil News

டெல்லி: அஸ்ஸாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழகம், கேரளா, புதுச்சேரியில் தேர்தல் நடைபெற்று முடிந்தாலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை உடனடியாக வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 29ம் தேதி தான் தேர்தல் முடியும் என்பதால் அதுவரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளைஊடகங்கள் வெளியிட முடியாது.

Elections to be Over in 3 States, 2 Lok Sabha Seats; EC Says Wait Till April 29 for Exit Polls

அதாவது தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின் படி, மார்ச் 27 முதல் ஏப்ரல் 29, இரவு 7:30 மணி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை ஐந்து மாநிலங்களுக்கு வெளியிட தடை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தல் 234 சட்டமன்றத் தொகுதிகள், கேரளாவில் 140 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் 30 தொகுதிகளுககு ஒரே கட்டமாக தேர்தல் இன்று நடக்கிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் மூன்றாம் கட்டமாக தேர்தல் நடக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும், கேரளாவின் மலப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல்களும் ஒரே நேரத்தில் இன்று தேர்தல் நடக்கிறது.

தேர்தல் முடிந்த உடன் 48 மணி நேரத்திற்கு கருத்துக் கணிப்புகளை வெளியிட முடியாது. ஆனால் மேற்கு வங்க தேரத்தில் இம்மாத இறுதியில் முடிவதால் அதுவரை ஐந்து மாநிலங்களுக்கும் கருத்துக்கணிப்புகளை ஊடங்கள் வெளியிட தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம். எனவே ஏப்ரல் 29 வரை கணிப்புகளை அறியவும், மே2 வரை உண்மை நிலவரம் அறியவும் வாக்காளர்கள் காத்திருக்க வேண்டும்.

English summary
“Election Commission has notified the period between 7:00 am on March 27, 2021 and 7.30pm on April 29, 2021 as the period during which conducting any exit poll and publishing or publicizing the result of exit poll by means of the print or electronic media or in any other manner shall be prohibited in the ongoing General Elections to the Legislative Assemblies of Assam, Kerala, Tamil Nadu, West Bengal and Puducherry,” the poll body had said in an earlier statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X