பாகிஸ்தானுடன் பெரிய போர்? போர்க்கால ஒத்திகையை தொடங்க அனைத்து மாநிலங்களுக்கும் அதிரடி உத்தரவு
டெல்லி: நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பெரும் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் தான் வரும் 7 ம் தேதி அனைத்து மாநிலங்களிலும் போர்க்கால ஒத்திகையை நடத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் அதிரடியான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் பின்னணி என்ன? எப்படி நடக்கும்? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
கடந்த மாதம் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கவராதிகள் தாக்குதல் நடத்திய 26 சுற்றுலா பயணிகளை கொன்றனர். இந்த கோர தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' பொறுப்பேற்றுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்க நம் படை வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

பிரதமர் மோடி முப்படையின் தளபதிகளுடன் அடுத்தடுத்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். முப்படைகளும் போர் பயிற்சிகளை தொடங்கி உள்ளன. அதோடு பாகிஸ்தான் - காஷ்மீர் எல்லையில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் விரைவில் பாகிஸ்தானுக்கு உரிய முறையில் பதிலடி கொடுப்பது உறுதி.
இந்நிலையில் தான் மத்திய அரசு சார்பில் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் இன்று முக்கிய அறிவுரை என்பது வழங்கப்பட்டுள்ளது. அதாவது வரும் 7 ம் தேதி நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.
வரும் 7 ம் தேதி போர்க்கால ஒத்திகை பணிகளை மேற்கொள்ள வேண்டும். வான்வெளி தாக்குதல் தொடர்பான சைரன் ஒலி எழுப்புவது சரியாக வேலை செய்கிறதா? என்பதை சோதித்து பார்க்க வேண்டும். போர் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி மக்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். கிராஷ் பிளாக் அஷட் நடைமுறை பற்றி சொல்லி கொடுக்க வேண்டும். அவசரகால மீட்பு திட்டங்கள் தொடர்பான ஒத்திகைகளை மேற்கொள்ள வேண்டும். அவசர காலங்களில் விரைவான, ஒருங்கிணைந்த செயல்பாடுகளை உறுதி செய்யும் வகையில் இந்த ஒத்திகை என்பது இருக்க வேண்டும்.
மின்தடையை சமாளிப்பது தொடர்பாக மக்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும். அதேபோல் முக்கிய உள்கட்டமைப்புகளை மறைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த போர் ஒத்திகை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும்'' என்பன உள்ளிட்ட விபரங்கள் இடம்பெற்றுள்ளது.
பொதுவாக போர்க்கால ஒத்திகை என்பது இருநாடுகள் இடையேயான மோதல் மோசமாகும் போது அரசு சார்பில் வெளியிடப்படும் அறிவிப்பாகும். இதன் முக்கிய நோக்கம் என்பது போர் என்பது ஏற்படும்போது எதிரி நாடு நம்மை தாக்கலாம். இப்படியான தாக்குதலில் இருந்து மக்கள் தப்பிக்க வேண்டும். அதற்கு மக்களிடம் அதுபற்றிய விழிப்புணர்வு என்பது வேண்டும். இதனை வழங்குவதற்காக தான் மத்திய அரசு சார்பில் அனைத்து மாநிலங்களிலும் போர்க்கால ஒத்திகையை மேற்கொள்ள வேண்டும் என்பது உத்தரவிட்டுள்ளது.
இதன்மூலம் பாகிஸ்தானுக்கு மத்திய அரசு முக்கிய மெசேஜை அனுப்பி உள்ளது. அதாவது பாகிஸ்தானுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம். இதனை எதிர்த்து தாக்கினால் போர் புரியவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்ற மெசேஜை இந்த உத்தரவு மூலம் பாஸ் செய்துள்ளது. இதனால் நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பெரிய போர் வெடிக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications