டெல்லியின் பல எல்லைகள் மூடல்... திகிரி எல்லையில் தேசியக்கொடியுடன் விவசாயிகள் அரைநிர்வாண போராட்டம்!
டெல்லி: காசிப்பூர் பகுதியை போன்று திகிரி எல்லையிலும் ஏராளமான விவசாயிகள் கையில் தேசியக்கொடி விவசாய சங்க கொடிகளுடன் அரை நிர்வாண போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அசம்பாவிதங்களை தவிர்க்க காசிப்பூர், சிங்கு, ஆச்சந்தி உள்ளிட்ட முக்கிய எல்லைகள் மூடப்பட்டு வருகின்றன.
போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் எல்லை பகுதிகளில் பாதுகாப்பு பணிகளுக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

டெல்லியில் பதற்றம்
உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி சந்திக்கும் பகுதியான காசிப்பூர் பகுதியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் குவிந்து விட்டனர். இந்த காசிப்பூர் உத்தரபிரதேச எல்லையில் உள்ளதால் டெல்லியை போன்று இங்கும் சம்பவம் நடந்து விடக்கூடாது என்பதில் உத்தரபிரதேச அரசு உறுதியாக உள்ளது.

ஆர்.எல்.டி தலைவர் ஆதரவு
பாரதிய கிசான் யூனியன் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் ராகேஷ் திகைத் அங்கு வந்து விவசாயிகளுடன் முகாமிட்டு உள்ளார். அவர் போலீசாரிடம் சரணடைய தொடர்ந்து மறுத்து வருகிறார். அங்கு இருந்து பின்வாங்க மறுத்து வருகிறார். இந்த நிலையில் ராஷ்ட்ரிய லோக் தளம் (ஆர்.எல்.டி) தலைவர் ஜெயந்த் சவுத்ரி காசிப்பூர் எல்லைக்கு வந்து விவசாயிகளுக்கு ஆதரவு கொடுத்துள்ளார்.

தேசியக்கொடியுடன் போராட்டம்
இதனால் உ.பி.-டெல்லி காசிப்பூர் எல்லையில் பதற்றம் மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. இதேபோல் திகிரி எல்லையிலும் ஏராளமான விவசாயிகள் திரண்டு வந்து போராட்டம் நடத்த தொடங்கி உள்ளனர். ஏராளமான விவசாயிகள் அங்கு கையில் தேசியக்கொடி விவசாய சங்க கொடிகளுடன் அரை நிர்வாண போராட்டம் நடத்தி வருகின்றனர்.
|
எல்லைகள் மூடல்
இதனால் அசம்பாவிதங்களை தவிர்க்க காசிப்பூர், சிங்கு, ஆச்சந்தி, மங்கேஷ், சபோலி, பியாவ் மன்யாரி எல்லைகள் மூடப்பட்டன. அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் எல்லை பகுதிகளில் பாதுகாப்பு பணிகளுக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications