வா செல்லம் குப்பை கொட்டப் போலாம்.. மகளை மகிழ்வித்த சூப்பர் டாடி.. அப்பான்னா சும்மா இல்லடா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இது எந்த ஊர் என்று தெரியவில்லை..ஆனால் பார்க்க அத்தனை அழகாக இருக்கிறது. மகள்கள் அழகு என்றால்.. அவர்களை மகிழ்விக்கும் அப்பாக்கள் கொள்ளை அழகு.

Recommended Video

    Father and Daughter with different costumes to throw trash

    கொரோனா ஊரடங்கு உலகின் பல நாடுகளிலும் தொடர்கிறது. காரணம், கொரோனா இன்னும் அடங்குவதாக இல்லை. உலக நாடுகள் எல்லாம் இந்த கொரோனா கொடூரனிடமிருந்து தப்ப என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து பார்த்து வருகின்றன. மருந்துகள் என்று இதுவரை எதையும் கண்டுபிடிக்கவில்லை.

    இப்போது நம்மிடம் உள்ள மருந்துகளையே மாற்றி மாற்றிக் கொடுத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். பல உயிரிழப்புகளுக்கு கொரோனா காரணமில்லை, மாறாக நோயாளிகளின் உடலில் உள்ள வேறு உபாதைகள்தான் என்று சொல்கிறார்கள். இந்த நிலையில் மக்களும் கொரோனாவால் ரொம்பவே அயர்ச்சியாகி விட்டனர்.

     மனச் சோர்வு

    மனச் சோர்வு

    இந்த சோர்விலிருந்து மீளுவது என்பதுதான் பெரும் சவாலாக உள்ளது. விதம் விதமாக, தினுசு தினுசாக நம்மை நாமே தினசரி புதுப்பித்துக் கொள்ள வேண்டியுள்ளது. அப்படிப்பட்ட ஒரு வீடியோதான் இது. டிவிட்டரில் இது வைரலாகி வருகிறது. இதில் உள்ளவர்கள் எந்த நாடு என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் பார்க்க படு க்யூட்டாக இருக்கிறது.

     அப்பா மகள் கதை

    அப்பா மகள் கதை

    இது ஒரு அப்பா மகளின் குட்டிக் கதை. இந்தக் கதையில் வரும் மகளுக்கு லாக்டவுன் ரொம்பப் போரடித்து விட்டது. வெளியில் போக முடியவில்லை. விளையாட முடியவில்லை. ஜாலியாக பீச் பார்க் என்று போக முடியவில்லை. கடுப்பாகிப் போன மகளைக் கூப்பிட்டு அப்பா ஒரு ஐடியாவைச் சொல்கிறார்.. அதைக் கேட்ட மகளுக்கு செம ஹேப்பி.. !

     ஜாலி கான்செப்ட்

    ஜாலி கான்செப்ட்

    கான்செப்ட் சிம்பிள்தான்.. தினசரி வீட்டில் சேரும் குப்பையை கொண்டு நாம ரெண்டு பேரும் எடுத்துக் கொண்டு போய் வெளியில் கொட்டி விட்டு வருவோம்.. அப்படிப் போகும்போது ஒவ்வொரு நாளும் ஒரு விதமான உடையுடன் போகிறோம்.. டீலா நோ டீலா என்று கேட்க, மகளுக்கும் குஷி.. ஓகே டாடி என்று சொல்ல.. பிறகென்ன தினசரி ஒரு காஸ்ட்யூம் கலக்கலுடன் மகளைக் கூட்டிக் கொண்டு அப்பா குப்பையைக் கொட்டி விட்டு வருகிறார்.

     அழகு மகளும் பாசக்கார அப்பாவும்

    அழகு மகளும் பாசக்கார அப்பாவும்

    ஒரு நாளைக்கு பூனை வேடம்,, ஒரு நாளைக்கு முயல் குட்டி வேடம், ஒரு நாள் பேட்மேன் வேடம் என்று தந்தை போட, மகளுக்கும் க்யூட்டான கெட்டப் சேஞ்ச் கொடுக்க.. இருவரும் ஜாலியாக குப்பையை எடுத்துக் கொண்டு போய் போட்டு விட்டு வருகிறார்கள். இருவரும் டிசைன் டிசைன் கெட்டப்புடன் தெருவில் நடமாடும் இந்த வீடியோ இப்போது வைரலாகியுள்ளது. மகளை மகிழ்விக்க என்று மட்டும் இல்லாமல், அவளது மனதில் சோர்வு வந்து விடக் கூடாது என்ற கவனத்தில் இப்படி ஒரு ஜாலியான முடிவை எடுத்த அந்த அப்பாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும் இல்லையா!

    அப்பான்னா சும்மா இல்லடா..!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+