டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வருங்கால வைப்பு நிதி... நிறுனங்களுக்கு செக் வைத்த நிதியமைச்சர்... செம குஷியில் ஊழியர்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு பிடித்தம் செய்யப்படும் தொகையை சில நிறுவனங்கள் சரியான நேரத்தில் டெபாசிட் செய்வதில்லை என்றும் இனி தாமதமாகத் தொகையை டெபாசிட் செய்யும் நிறுவனங்களுக்கு எவ்வித விலக்குகளும் அனுமதிக்கப்படாது என்றார்.

2021-22ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். கொரோனா பரவல் காரணமாகக் காகிதமில்லா பட்ஜெட்டாக இது தாக்கல் செய்யப்பட்டது.

Finance Minister Nirmala Sitharaman announcement on Provident Fund in Budget 2021

நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கியபோது, எதிர்க்கட்சி எம்பிகள் விவசாய சட்டங்கள் தொடர்பாக கோஷமிட்டனர். இருப்பினும், தனது பட்ஜெட் உரையை நிர்மலா சீதாராமன் தொடர்ந்து வசித்தார்.

தனது பட்ஜெட் உரையில் வருங்கால வைப்பு நிதி குறித்து நிர்மலா சீதாராமன், "வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கு ஊழியர்களின் ஊதியத்தில் குறிப்பிட்ட அளவு பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால், நாட்டிலுள்ள சில நிறுவனங்கள் அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகையைச் சரியான நேரத்தில் டெபாசிட் செய்வதில்லை.

பட்ஜெட்டில் தமிழகத்துக்கு என்னென்ன.. சென்னை, சேலம், மதுரைக்கு நிர்மலா சீதாராமன் கொடுத்த சர்ப்ரைஸ் பட்ஜெட்டில் தமிழகத்துக்கு என்னென்ன.. சென்னை, சேலம், மதுரைக்கு நிர்மலா சீதாராமன் கொடுத்த சர்ப்ரைஸ்

இதனால் நிறுவனம் ஏதேனும் நெருக்கடியில் சிக்கிக்கொண்டால் வருங்கால வைப்புத் தொகைக்கான வட்டி உள்ளிட்டவற்றைப் பெறுவதில் ஊழியர்களுக்கு சிரமம் ஏற்படும். வருங்கால வைப்பு நிதிக்கான பங்களிப்பு சரியான நேரத்தில் அனுப்பப்படுவதை உறுதி செய்யும் வகையில், தாமதமாகத் தொகையை டெபாசிட் செய்யும் நிறுவனங்களுக்கு எவ்வித விலக்குகளும் அனுமதிக்கப்படாது" என்றார்.

வருங்கால வைப்பு நிதியில் சரியான நேரத்தில் நிறுவனங்கள் டெபாசிட் செய்வதை உறுதி செய்யும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

English summary
On Provident Fund, Finance Minister Nirmala Sitharaman says, "Employers who are late in depositing employee contribution to pension, gratuity will not get deduction for this. Aim to deter companies that do not deposit on time."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X