நீதிமன்றம் கூறியும்.. லுக்அவுட் நோட்டீஸை வாபஸ் பெறாத சிபிஐ! அம்னெஸ்டி ஆகார் பட்டேல் அவமதிப்பு வழக்கு
டெல்லி: அம்னெஸ்டி மாஜி தலைவர் ஆகார் பட்டேல் பெங்களூரு விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை பின்பற்ற தவறியதாக கூறி சிபிஐக்கு எதிராக அவர் இன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா எனும் மனித உரிமைகள் அமைப்பின் முன்னாள் தலைவர் ஆகார் பட்டேல். இந்த அமைப்பில் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை (எப்சிஆர்ஏ) மீறி முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுபற்றி சிபிஐ விசாரித்து வருகிறது. பெங்களூரு, டெல்லியில் சோதனைகள் நடத்தப்பட்டு வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. தற்போது இந்த அமைப்பு செயல்படாமல் உள்ளது.

லுக்அவுட் நோட்டீஸ்
இதற்கிடையே குஜராத் சூரத் பாஜக எம்எல்ஏ ஒருவர் தொடர்ந்த வழக்கு தொடர்பாக ஆகார் பட்டேலின் பாஸ்போர்ட் முடக்கம் செய்யப்பட்டது. சிபிஐயும் விசாரணை நடைபெறுவதால் ஆகார் பட்டேலுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அமெரிக்கா பல்கலைக்கழகங்களுக்கு ஆகார் பட்டேல் செல்ல வேண்டி இருந்தது.

விமான நிலையத்தில் நிறுத்தம்
இதையடுத்து ஆகார் பட்டேல் குஜராத் நீதிமன்றத்தை அணுகி பாஸ்போர்ட்டை திரும்ப பெற்றார். மேலும் வெளிநாடு செல்லவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து ஏப்ரல் 6ல் ஆகார் பட்டேல் அமெரிக்கா செல்ல பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றார். அப்போது சிபிஐ சார்பில் அவருக்கு லுக்அவுட் நோட்டீஸ் இருப்பதை காரணம் காட்டி குடியுரிமை அதிகாரிகள் அவரை அனுமதிக்க மறுத்தனர்.

டெல்லி நீதிமன்றம் உத்தரவு
இதையடுத்து அவர் தனது விமான நிலையத்தில் இருந்து வீடு திரும்பினார். இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தை நாடினார். இதையடுத்து ஆகார் பட்டேலுக்கு எதிரான லுக்அவுட் நோட்டீசை திரும்ப பெற நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், குஜராத் நீதிமன்றத்தின் உத்தரவை பின்தொடராமல் இருந்த சிபிஐயை நீதிமன்றம் கண்டித்தது. மேலும் தவறுக்கு ஆகார் பட்டேலிடம் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியது. இந்த உத்தரவை எதிர்த்து சிபிஐ சார்பில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
இந்நிலையில் தான் ஆகார் பட்டேல் சார்பில் சிபிஐக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு இன்று தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பான மனுவில், " நீதிமன்ற உத்தரவை மீறியும் லுக்அவுட் நோட்டீஸை சிபிஐ வாங்காமல் உள்ளது. 24 X 7 என்ற அடிப்படையில் செயல்பட வேண்டிய சிபிஐ நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படுவதை என்னால் நம்ப முடியவில்லை'' என கூறியுள்ளார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications