சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பாஜக ஆதரவாளர்! கொலிஜியம் வேஸ்ட்! முன்னாள் நீதிபதி சொன்ன ஷாக் மேட்டர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் கொலீஜியம் முறை மிகப்பெரிய ஃபெயிலியர் என்றும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக வெளிப்படையாக பாஜக ஆதரவாளர் என அறியப்பட்டவர் ஏன் நியமிக்கப்பட்டார்? என்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ரேகா சர்மா சரமாரியாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.

உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிதிபதி சந்திரசூட் குறித்து, சமீபத்தில்தான் முன்னாள் நீதிபதி கவுல் கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார். அதன் மீதான விவாதங்கள் குறைவதற்கு முன்னர்.. தற்போது கொலீஜியம் மீது பஞ்சாயத்து வெடித்திருக்கிறது.

Madras High Court

கொலீஜியம் காலி

முன்பு அரசியல் சித்தாந்தங்கள், பரிந்துரைகள் மற்றும் வாரிசு அரசியல் அடிப்படையில் அரசு நீதிபதிகளை நியமிக்கிறது என்று குற்றச்சாட்டு இருந்தது. இதன் காரணமாகத்தான் 1993-1998 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் கொலீஜியம் முறை கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்த புதிய கொலீஜியம் முறை.. முந்தைய நோயை விட மோசமான மருந்தாக மாறிவிட்டது. தற்போதைய முறையில் வாரிசு அரசியலும், தங்களுக்கு சாதகமானவர்களை நியமிப்பதும் இன்னும் அப்பட்டமாகவம், அரசியல் ரீதியாகவும் நடக்கிறது. கொலீஜியம் தனது விருப்பப்படியே நீதிபதிகளை நியமித்து இடமாற்றம் செய்கிறது என முன்னாள் நீதிபதி ரேகா சர்மா விமர்சித்திருக்கிறார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக ஆதரவாளர்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக வழக்கறிஞர் எல்.விக்டோரியா கௌரியை கொலீஜியம் பரிந்துரைத்தது. அவர் பாஜக மகளிர் அணியை சேர்ந்தவர் என்பதும், சிறுபான்மையினருக்கு எதிராக சர்ச்சை கருத்துக்களை பேசியவர் என்பதும் தெரிந்திருந்தும் அவரது பெயரை ஏன் கொலீஜியம் அனுமதித்தது? என ரேகா சர்மா கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மருமகனுக்கு நீதிபதி பதவி

"அதேபோல முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயின் மருமகன் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதற்கான ஆலோசனையிலிருந்து தலைமை நீதிபதி விலகிக்கொண்டார் என்று சொல்லப்பட்டாலும், அது மற்ற உறுப்பினர்களுக்கு மறைமுகமான அடுத்தத்தை ஏற்படுத்தாதா? தலைமை நீதிபதி ஓய்வு பெறும் வரை, அந்த நியமனத்தை காத்திருப்பில் வைத்திருந்தால்தான் என்ன?

மூத்த நீதிபதியான அகில் குரேஷியை உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்த்த அரசு விரும்பவில்லை என்பதற்காக கொலீஜியம் 2 ஆண்டுகள் முடங்கியது. அவருக்கு ஆதரவாக நின்ற நீதிபதி நாரிமன் ஓய்வு பெற்ற 7 நாட்களுக்குள், அகில் குரேஷியின் பெயரை நீக்கிவிட்டு 9 பேரை கொலீஜியம் பரிந்துரைத்தது.

பழிவாங்கிய கொலீஜியம்

நியமனங்களில் இப்படி நடக்கிறது என்பது ஒருபக்கம் இருந்தாலும், நீதிபதிகளின் ஒருதலைப்பட்சமான செயல்பாடுகளும் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் யாதவ், நீதிமன்ற வளாகத்திலேயே முஸ்லீம்களுக்கு எதிராக அவதூறாக பேசியும் கொலீஜியம் அவரை மன்னிப்பு கேட்க சொல்லிவிட்டு, எந்தவித தண்டனையுமின்றி ஓய்வு பெற அனுமதித்தது. ஆனால்.. ஒரு அமைச்சருக்கு எதிராக FIR பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதி ஸ்ரீதரன் என்பவரை, அரசின் விருப்பத்திற்காகக சத்தீஸ்கர் மற்றும் அலகாபாத் என அடுத்தடுத்து கொலீஜியம் இடமாற்றம் செய்தது.

சிறையில் அப்பாவிகள்

இதையெல்லாம் கூட ஏதோ ஒரு கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், ஜாமீன் மற்றும் வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் நீதிமன்றங்களின் செயல்பாடு கடுமையான விமர்சனத்திற்குரியது. அதாவது ஜாமீன்தான் விதி, சிறை என்பது விதிவிலக்கு என்ற சட்ட விதியை.. நீதிபதிகள் காற்றில் பறக்கவிட்டு குப்பையில் வீசியுள்ளனர். பல ஆண்டுகளாக பல அப்பாவிகள் சிறையில் வாடுகிறார்கள்.

நீதித்துறையின் மௌனம்

வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார் 13 கோடி மக்களின் பெயர்கள் நீக்கப்பட்ட வழக்கு, பல மாதங்களாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. ஆனால், நீதிமன்றம் இதுவரை பயனுள்ள உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை. இதற்காக வீதியில் இறங்கி அமைதியாக போராடும் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீது காவல்துறை நடத்தும் வன்முறைகளை உச்சநீதிமன்றம் கண்டும் காணாமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது" என்று நீதிபதி ரேகா சர்மா குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+