கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த தமிழக வீரர் பழனிக்கு வீர் சக்ரா விருது - நன்றி சொன்ன மனைவி
கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களுடனான மோதலில் உயிரிழந்த ராணுவ வீரர் பழனிக்கு அறிவிக்கப்பட்ட வீர் சக்ரா விருதை குடியரசுத்தலைவரிடம் இருந்து அவரது மனைவி பெற்றுக்கொண்டார்.
டெல்லி: சீன மோதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரர் பழனிக்கு ராணுவத்தின் உயரிய விருதான வீர் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது. குடியரசுத்தலைவரிடம் இருந்து வீர் சக்ரா விருதினை பழனியின் மனைவி வானதி பெற்றுக்கொண்டார்.
Recommended Video
இந்திய, சீன எல்லைப் பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் தொடர்ச்சியாகப் பதற்றம் நிலவிவந்தது. லடாக் பகுதியில் இந்தியக் கட்டுமானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா, தொடர்ந்து அங்கு படைகளைக் குவித்து வந்தது. முன்னதாக சீன ராணுவத்தின் ஹெலிகாப்டர்களும் லடாக் பகுதியில் பறந்ததால் கடும் பதற்றம் நிலவியது.

தொடர்ந்து இந்தியாவும் எல்லையில் படைகளைக் குவித்தது. இதனால் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில் இந்திய சீன, ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, எல்லையில் குவிக்கப்பட்ட சீனப் படைகள் சற்று பின்வாங்கின. இதனால் எல்லையில் நிலவி வந்த பதற்றமான சூழல் அடுத்த சில நாள்களில் குறைந்தது.
இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி இரவு கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய - சீன வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. கல், இரும்புக் கம்பிகள் கொண்டு இரு தரப்பினரும் மிகக் கடுமையாகத் தாக்கிக்கொண்டனர்.
இந்தத் தாக்குதலில் இந்தியா தரப்பில் மூத்த ராணுவ அதிகாரி உள்ளிட்ட 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூரைச் சேர்ந்த ஹவில்தார் பழனியும் மரணமடைந்தார்.இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர் வீரர் பழனி மட்டுமே. அதனையடுத்து வீரர் பழனியின் உடல் சொந்த கிராமத்திற்குக் கொண்டுவரப்பட்டு மத்திய, மாநில அரசுகள் சார்பில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
மத்திய, மாநில அரசுகள், தன்னார்வலர்கள் பழனியின் குடும்பத்திற்கு நிதியுதவி அளித்து ஆறுதல் கூறினர். தமிழக அரசு ரூ.20 லட்சம் நிவாரணமும், வீரர் பழனியின் மனைவிக்கு ராமநாதபுரம் மாவட்ட வருவாய்த்துறையில் இளநிலை உதவியாளர் பணியும் வழங்கியது.
இந்நிலையில் வீர மரணம் அடைந்த வீரர் பழனிக்கு ராணுவத்தின் உயரிய விருதான வீர் சக்ரா விருதை மத்திய அரசு அறிவித்தது. இன்றைய தினம் டெல்லியில் நடைபெற்ற விழாவில் பழனியின் மனைவி வானதி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து வீர் சக்ரா விருதினைப் பெற்றுக்கொண்டார்.
எனது கணவரின் வீர தீரச் செயலுக்கும், தியாகத்திற்கும் கிடைத்த மரியாதை. நாட்டிற்காக அவர் செய்த சேவைக்குக் கிடைத்த இவ்விருதை பெரிய அங்கீகாரமாகக் கருதுகிறேன். அவரது தியாகத்திற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளன. எனவே மத்திய, மாநில அரசுகளுக்கும், எனது கணவர் பணியாற்றிய 81 ஃபீல்ட் ராணுவப் பிரிவின் கமாண்டிங் ஆபீஸர் அஜய் மற்றும் விருது வழங்க வேண்டும் எனக் கடிதம் எழுதிய நல்ல உள்ளங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications