டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேட்புமனுவை வாபஸ் பெறத் தயார்.. அவமானமாக உணர்கிறேன்.. கொந்தளிக்கும் கவுதம் கம்பீர்

Google Oneindia Tamil News

Recommended Video

    Gautam Gambhir: ஆம் ஆத்மி பெண் வேட்பாளர் கூறிய புகாருக்கு கவுதம் கம்பீர் பதிலடி- வீடியோ

    டெல்லி: தன் மீது ஆம் ஆத்மி பெண் வேட்பாளர் கூறிய புகாருக்கு பாஜக வேட்பாளர் கவுதம் கம்பீர் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.

    டெல்லி கிழக்கு தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் களமிறக்கப்பட்டுள்ளார். அவரது முக்கிய போட்டியாளராக ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி களமிறக்கப்பட்டுள்ளார்.

    Gautam Gambhir throw challenge to Arvind Kejriwal and Atishi

    இதனிடையே டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார், அதிஷி. அப்போது அவர் கூறுகையில், பெண் என்றும் பாராமல் என்னை பற்றி மிகவும் மோசமான வார்த்தைகளில் விமர்சனம் செய்து துண்டு பிரசுரங்களை கம்பீர் சார்பில் தொகுதியில் வினியோகித்து வருகின்றனர் என்று தெரிவித்ததோடு, உடைந்து அழுதார்.

    தேர்தல் ரிசல்ட்டை கணித்த முதலீட்டாளர்கள்? பங்குச் சந்தை தொடர்ந்து சரியும் பின்னணி தேர்தல் ரிசல்ட்டை கணித்த முதலீட்டாளர்கள்? பங்குச் சந்தை தொடர்ந்து சரியும் பின்னணி

    அவர் பத்திரிக்கையாளர்களிடம் காண்பித்த துண்டு பிரசுரத்தில், மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன. இதனிடையே, இந்த குற்றச்சாட்டை ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால், திட்டமிட்டு அவரே உருவாக்கியிருப்பதாக கவுதம் கம்பீர் குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட தொடர் ட்வீட்டுகளை பாருங்கள்:



    ஒரு பெண்ணின் மாண்பை குலைக்கும் செயல்களில் அரவிந்த் கேஜ்ரிவால் ஈடுபட்டுள்ளார். அதுவும் அவரது சகாவையே இப்படி அவமானத்திற்கு உள்ளாக்கியுள்ளார். தேர்தல் வெற்றிக்காகவா இத்தனையும்? உங்களது அழுக்கு மனதை சரி செய்ய வேண்டிய தேவையுள்ளது.



    அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் அதிஷிக்கு எனது சவால் நம்பர் 2- நான்தான் இந்த துண்டு பிரசுரத்தை வினியோகித்தேன் என்று நிரூபித்தால், எனது வேட்புமனுவை நான் உடனே வாபஸ் பெறுகிறேன். அல்லது, நீங்கள், அரசியலில் இருந்து விலக தயாரா?

    அரவிந்த் கேஜ்ரிவால் மாதிரி ஒரு முதல்வரை பெற, நான் அவமானமாக உணர்கிறேன். இவ்வாறு கடுமையாக விளாசியுள்ளார் கவுதம் கம்பீர்.

    English summary
    I declare that if its proven that I did it, I will withdraw my candidature right now. If not, will u quit politics? Gautam Gambhir throw challenge to Arvind Kejriwal and Atishi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X