டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா நோயாளிகளுக்கு ரத்தம் உறைய வாய்ப்பு.. மாரடைப்பு, பக்க வாதம் ஏற்படலாம்.. தடுக்க என்ன செய்யலாம்?

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா பாதித்தவர்களுக்கு நுரையீரல் மட்டுமின்றி ரத்த உறைதல் பிரச்சினையும் பக்க விளைவாக ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும், இது மாரடைப்பு உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்தக் கூடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

Recommended Video

    எச்சரிக்கை : Corona நோயாளிகளுக்கு Blood Clot, மாரடைப்பு, பக்க வாதம் ஏற்படலாம் | Oneindia Tamil

    கோவிட் -19 நுரையீரல் நோய் மட்டுமல்ல, ஆபத்தான இரத்த உறைதலை ஏற்படுத்தக்கூடும் என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்தபடி உள்ளன.

    Global Studies Reveal Covid-19 Can Cause Dangerous Blood Clots

    சில சந்தர்ப்பங்களில் ரத்த உறைதல் காரணமாக பக்க வாதம் ஏற்பட்டு கை கால்களை முடக்க வாய்ப்பு உள்ளது. எனவே, ரத்த உறைதல் ஏற்படாமல் இருக்க தேவையான சிகிச்சையையும் கொரோனா சிகிச்சையின்போதே மேற்கொள்ள வேண்டியது நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

    மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கொரோனா நோயாளிகளில் நரம்பு த்ரோம்போசிஸ் (டி.வி.டி) எனப்படும் இரத்த உறைவு உருவாக்கம் 14-28 சதவிகிதம் மற்றும் தமனி த்ரோம்போசிஸ் பிரச்சினை ஏற்பட 2-5 சதவிகிதம் வாய்ப்பு இருப்பதாக உலகளாவிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    இந்தியாவிலும் நிலைமை அப்படித்தான் உள்ளதாம். கொரோனா நோய்த்தொற்று நுரையீரலைப் போலவே இரத்த நாளங்களையும் பாதிக்கிறது. "வாரத்திற்கு சராசரியாக ஐந்து-ஆறு கேஸ்களை இதுபோல நாங்கள் கையாள்கிறோம்" என்று டெல்லியின் சர் கங்கா ராம் மருத்துவமனையின் வாஸ்குலர் மற்றும் எண்டோவாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அம்பரிஷ் சாட்விக் கூறியுள்ளார்.

    உலக நாடுகளில் குறையும் பாதிப்பு.. இந்தியாவில் மீண்டும் 4 லட்சத்தை கடந்து கொரோனா உச்சம்!உலக நாடுகளில் குறையும் பாதிப்பு.. இந்தியாவில் மீண்டும் 4 லட்சத்தை கடந்து கொரோனா உச்சம்!

    இரத்த உறைவு உருவாகும் தன்மை டைப் -2 நீரிழிவு நோய் போன்ற நோயாளிகளில் அதிகமாக உள்ளது என்கிறார், தென்மேற்கு டெல்லியின் ஆகாஷ் ஹெல்த்கேர், கார்டியோ-தொராசிக் வாஸ்குலர் துறையின் ஆலோசகர் டாக்டர் அம்ரிஷ் குமார் கூறியுள்ளார்.

    தமனிகள் என்ற ரத்த நாளங்கள் ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை இதயத்திலிருந்து உடலுக்கு எடுத்துச் செல்கின்றன. ரத்த உறைதல் ஏற்பட்டால் போதிய அளவுக்கு உடலுக்கு ஆக்சிஜன் கிடைக்காது.

    இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு பிளட் தின்னர் என்று அழைக்கப்படும் ஊசிகளை செலுத்துகிறார்கள். இதன் மூலம் ரத்த உறைதல் தடுக்கப்படுகிறது. குணமாகி வீட்டுக்கு வந்த பிறகும் சுமார் 1 அல்லது 1.5 மாதங்கள் ரத்த உறைதலை தடுக்கும் மருந்துகளை சாப்பிட வேண்டும். இதன் மூலம், ரத்த உறைதலை தடுக்கலாம். நீங்களும் உங்கள் மருத்துவரிடம் இதுகுறித்து ஆலோசிக்கவும்.

    English summary
    corona side effects: There is increasing evidence to suggest that Covid-19 is not just a disease of the lungs as initially thought but can also cause dangerous blood clots which need to be immediately removed to save limbs in some cases, say experts.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X