ஒர்க் ஃப்ரம் ஹோமா? போதும் போதும் எல்லாம் ஆபிஸ் வாங்க..ஊழியர்களுக்கு அழைப்பு விடுக்கும் நிறுவனங்கள்.!
டெல்லி : கூகுள் போன்ற பெரு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி இடங்களுக்கு வர அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த உத்தரவின்படி வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் அலுவலகத்திற்குச் சென்று பணியாளர்கள் பணி புரியவேண்டி இருக்கும்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த ஜனவரி மாதத்தில் திடீரென உயர்ந்தது. கொரோனா மூன்றாவது அலை தொடங்கிய சமயத்தில் நாளொன்றுக்கு லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து ஜனவரி 3ஆம் தேதி மத்திய அரசு அனைத்து துறைகளிலும் துணைச் செயலாளர் நிலைக்குக் கீழே உள்ள அனைத்து ஊழியர்களின் வருகையை 50 சதவீதமாக குறைத்ததோடு பிப்ரவரி 15ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடு இருக்கும் என அறிவித்தது.

கொரோனா பாதிப்பு
தற்போது இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடந்த பிப்ரவரி மாதம் ஆய்வு கூட்டம் நடத்தினார். வீடியோ கான்ஃபரன்ஸ் முறையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்கள் உடனும் சோதனை செய்து கொண்டவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

புதிய அறிவிப்பு
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி 100% பணியாளர்களுடன் அலுவலகங்களை திறப்பதாக மத்திய பணியாளர்கள் பொதுமக்கள் குறை மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் தெரிவித்திருந்தது. தற்போது மத்திய மாநில அரசு அலுவலகங்கள் வழக்கம் போல செயல்பட்டு வரும் நிலையில் ஐடி துறை, உள்ளிட்ட பல துறைகளில் ஊழியர்கள் ஒர்க் ஃப்ரம் ஹோம் எனப்படும் வீட்டிலிருந்தே வேலை செய்து வருகின்றனர். பணியாளர்களுக்கான வசதிகள் ,பராமரிப்புச் செலவு, மின்சார கட்டணம், வாடகை உள்ளிட்ட செலவுகள் குறைந்ததால் பல நிறுவனங்களும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

கூகுள் அழைப்பு
இந்த நிலையில் கூகுள் போன்ற பெரு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி இடங்களுக்கு வர அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த உத்தரவின்படி வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் அலுவலகத்திற்குச் சென்று பணியாளர்கள் பணி புரியவேண்டி இருக்கும் என கூகுள் நிறுவனத்தின் உலகளாவிய நன்மைகளை துணைத் தலைவரான ஜான் கே சி ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இரு வருடங்களாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்த பலருக்கும் இந்த செய்தி மகிழ்ச்சிகரமாக இருந்ததாக கூறி வருகின்றனர்.

குறையும் கொரோனா
கொரோனா நோய்த்தடுப்பு மற்றும் தடுப்பூசி செயல் திட்டங்கள் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக சரிந்து வருவதால் பல நிறுவனங்களும் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஒட்டு மொத்தமாக பணியாளர்களை பணியில் அமர்த்தாமல் சுழற்சி முறையில் ஊழியர்கள் பணி புரியும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டு உள்ளதாகவும், வேலை நாட்களில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஊழியர்கள் தங்கள் பணியிடத்திற்கு வகையிலும் அல்லது மூன்று நாட்கள் அலுவலகத்திலும் மற்ற நாட்களில் வீட்டில் இருந்து வேலை செய்யும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications