டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குஜராத்தில் வொர்க் அவுட்டாகும் மோடி மேஜிக்! காங். ஓட்டை பிரிச்சி! பாஜகவுக்கு உதவுகிறதா ஆம் ஆத்மி?

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தல், பஞ்சாப் சட்டசபை தேர்தல், டெல்லி மாநகராட்சி ஆகிய தேர்தல்களில் ஆம் ஆத்மி வென்று வந்த நிலையில் தற்போது குஜராத், ஹிமாச்சல் பிரதேசம் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்துவிடுமா. குறுகிய காலத்தில் ஆம் ஆத்மி இத்தனை எழுச்சிக்கு என்ன காரணம்?

முன்பெல்லாம் தேர்தல்களில் பாஜக வெர்சஸ் காங்கிரஸ் என டிரென்ட் இருக்கும். ஆனால் குஜராத் சட்டசபை தேர்தல், ஹிமாச்சல் சட்டசபை தேர்தல் ஆகிய தேர்தல்கள் முடிவுகள் தற்போது எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜகவுக்கும் ஆம்ஆத்மிக்கும் இடையே போட்டி என்பதையே இந்த முன்னிலை நிலவரங்கள் காட்டுகின்றன.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஜன்லோக்பால் மசோதாவை அமல்படுத்தக் கோரி அண்ணா அசாரேவின் ஊழலுக்கு எதிரான இந்தியா எனும் இயக்கம் தொடங்கப்பட்டது. இதை அரசியல் அமைப்பாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானதுதான் ஆம் ஆத்மி. இந்த கட்சி 2013 ஆம் ஆண்டு டெல்லி சட்டசபை தேர்தலில் அறிமுகமாகி 70 இடங்களில் 28 இடங்களை வென்றது. அப்போது 8 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சி வெளியே இருந்து ஆதரிப்பதாக கூறியிருந்த நிலையில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தது.

ஜாக்கிரதையா இருங்க! குஜராத் முடிவிற்கு முன்பே பாஜக மேலிடம் மீட்டிங்.. தமிழ்நாட்டிற்கு பறந்த மெசேஜ்! ஜாக்கிரதையா இருங்க! குஜராத் முடிவிற்கு முன்பே பாஜக மேலிடம் மீட்டிங்.. தமிழ்நாட்டிற்கு பறந்த மெசேஜ்!

ஜனலோக்பால் மசோதா

ஜனலோக்பால் மசோதா

பின்னர் ஜனலோக்பால் சட்டசபை நிறைவேற்ற சட்டசபையில் போதிய ஆதரவு இல்லாததால் முதல்வரும் அவரது அமைச்சரவையும் பதவி விலகியது. இதையடுத்து 2015 ஆம் ஆண்டு டெல்லி சட்டசபைக்கு தேர்தல் நடந்து. இந்த தேர்தலில் 67 இடங்களில் ஆம் ஆத்மி வென்றது. ஆனால் பாஜகவோ 3 இடங்களை மட்டும வென்றது. அது போல் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் 62 இடங்களில் இக்கட்சி வென்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. ஆனால் பாஜகவோ வெறும் 8 இடங்களில் மட்டுமே வென்றது.

பஞ்சாப் சட்டசபை தேர்தல்

பஞ்சாப் சட்டசபை தேர்தல்

அது போல் பஞ்சாப் சட்டசபை தேர்தலில் 117 சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தது. இந்த தேர்தலில் சுமார் 92 இடங்களில் இக்கட்சி வென்றது. காங்கிரஸ் கட்சி 18 இடங்களிலும் பாஜக 2 இடங்களிலும் வென்றது. அது போல் டெல்லி மாநகராட்சி தேர்தலில் 250 வார்டுகளில் 136 இடங்களில் ஆம் ஆத்மி வென்று மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது. அது போல் காங்கிரஸ் கட்சியோ , பாஜகவோ 104 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி வெறும் 9 வார்டுகளிலும் வென்றுள்ளது. பஞ்சாப் தேர்தலில் பாஜக தோல்விக்கு டெல்லியில் விவசாயிகள் போராட்டம் என சொல்லப்பட்டாலும் அந்த போராட்டத்திற்கு விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த காங்கிரஸ் கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பெற்ற 77 இடங்களில் 50 சதவீத்தைகூட இந்த ஆண்டு தேர்தலில் வெறவில்லை. ஆனால் ஆம் ஆத்மி கடந்த 2017 தேர்தலில் 20 இடங்களில் மட்டுமே வென்றது. ஆனால் இந்த ஆண்டு தேர்தலில் கூடுதலாக 72 இடங்களில் வென்று 92 இடங்களில் வென்றுள்ளது.

 2012 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி அசுர வளர்ச்சி

2012 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி அசுர வளர்ச்சி

இவ்வாறு 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி அசுர வளர்ச்சி அடைந்துள்ளதற்கு காரணம் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி என்பதை சொல்லலாம். மக்கள் பாஜகவுக்கு மாற்று தேடும் போது காங்கிரஸ் கட்சியை காட்டிலும் பல மாநிலங்களில் தைரியமாக களம் கண்டு இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மியை விரும்புகிறார்கள். ஒரு காலத்தில் டெல்லி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது.

15 ஆண்டுகள்

15 ஆண்டுகள்

முதல்வராக காங்கிரஸ் கட்சியின் ஷீலா தீட்சித் சுமார் 15 ஆண்டுகள் ஆட்சி செய்தார். ஆனால் காங்கிரஸில் இருக்கும் உள்கட்சி பிரச்சினையால் அடுத்த தேர்தலில் ஷீலா வீழ்த்தப்பட்டு தற்போது ஒற்றை இலக்க இடங்களில் வெல்லவே போராடி வரும் நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டது. இவருக்கு அடுத்து 7 ஆண்டுகளாக டெல்லியை ஆம் ஆத்மி ஆட்சி செய்து வருகிறது.

காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல்

காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல்

பாரம்பரிய கட்சியான காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பிரச்சினை இருப்பதால் அக்கட்சியினரே சொந்த கட்சியினருக்கு தேர்தல் பணியாற்றாத நிலை உள்ளது. இதனால் காங்கிரஸ் இந்தியாவில் பல மாநிலங்களில் தோற்கடிக்கப்பட்டு ஆட்சியில் இல்லாத நிலை உள்ளது. அப்படியே இருந்தாலும் கூட்டணி கட்சியின் தயவுடனும் ஆதரவுடனும் ஆட்சி செய்கிறது. காங்கிரஸ் கட்சியை சீரமைக்க அதன் தலைவர்கள் தவறிவிட்டனர். இதனால்தான் இந்த கட்சி வீணாகி வருகிறது.

மறைமுக உதவி

மறைமுக உதவி

காங்கிரஸ் கட்சி அனைத்து மாநிலங்களிலும் நன்கு பரிச்சயம். ஆனால் ஆம் ஆத்மி அப்படி இல்லை. இப்போதுதான் வளர்ந்து வருகிறது. பாஜகவை துரத்தி கொண்டே வருகிறது. ஆம் ஆத்மியிடம் கூட பல இடங்களில் காங்கிரஸ் கட்சி தோற்கும் நிலை உள்ளது. டெல்லி, பஞ்சாப், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக வெர்சஸ் ஆம் ஆத்மி எனும் நிலை வந்துவிட்டது. இந்த குஜராத் சட்டசபை தேர்தல், ஹிமாச்சல் பிரதேச தேர்தலிலும் அதே நிலை ஏற்படுமா?. என்னதான் ஆம் ஆத்மியும் பாஜகவும் எலியும் பூனையுமாக இருந்தாலும் பெரும்பாலான மாநிலங்களில் வாக்குகளை பிரித்து காங்கிரஸை அதள பாதாளத்திற்கு தள்ளி பாஜக வெல்வதற்கு ஆம் ஆத்மி மறைமுகமாக உதவுவதை போலவே களநிலவரம் அமைகிறது.

English summary
Gujarat assembly election 2022: How did Aam Admi grow much better in recent elections?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X