ரூ.20,000 கோடியில்'மத்திய விஸ்டா' திட்டம்..நேருக்கு நேர் கேள்வி கேட்ட டி.ஆர்.பாலு..மிரண்டுபோன பாஜக!
டெல்லி: மத்திய விஸ்டா திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டதா? என்று மக்களவையில் தி.மு.க எம்.பி. டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பி-அதில் அளித்து பேசினார்.
தலைநகர் டெல்லியில் 'மத்திய விஸ்டா' என்னும் திட்டத்தின் கீழ் புதிய பிரமாண்ட நாடாளுமன்ற கட்டிடம் மற்றும் பிரதமர் இல்லம் கட்டப்பட்டு வருகிறது. சுமார் ரூ. 20,000 கோடி மதிப்பில் இந்த கட்டிடம் கட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பொருளாதாரம் முடங்கி இருக்கும் இந்த நிலையில் ரூ. 20,000 கோடி மதிப்பில் இந்த கட்டிடம் தேவையா? என்று பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பினார்கள்.

மத்திய விஸ்டா திட்டம்
மத்திய அரசு விஸ்டா திட்டத்தை ஒதுக்கி வைத்து மக்களின் நலன் மீது கவனம் செலுத்த வேண்டும், மருத்துவக் கட்டமைப்புகளை அதிகமாக உருவாக்கி மக்களின் உயிர்களைக் காக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அப்போதே கேள்வி எழுப்பி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தன. இந்த நிலையில் மத்திய விஸ்டா திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார்.

டி.ஆர்.பாலு கேள்வி
மத்திய விஸ்டா திட்டத்தை, சிறு சிறு திட்டங்களாகப் பிரித்து, தடையில்லாச் சான்றிதழ்கள் பெறுவதிலிருந்து விலக்குப் பெறப்பட்டதா? சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டதா? என மத்திய வீட்டு வசதி மற்றும் நகர வளர்ச்சித் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியிடம் மக்களவையில் டி.ஆர்.பாலு எம்.பி கேள்வி கேட்டார்.

சுற்றுச்சூழல் அனுமதி
இதற்கு பதில் அளித்த ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், ' மத்திய விஸ்டா திட்டத்துக்காக சுற்றுச்சூழல் அனுமதி உள்பட அனைத்து தடையில்லாச் சான்றிதழ்களும் உரிய முறைப்படி பெறப்பட்டுள்ளன. நாடாளுமன்றக் கட்டிடத்துக்கான சுற்றுச்சூழல் அனுமதி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 17-ம் தேதியே பெறப்பட்டு விட்டது.

உச்சநீதிமன்றம் மறுப்பு
மத்திய விஸ்டா திட்டத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் முறையாக நடத்தப்பட்டன. கடந்த மே 21, 2021-ல், சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டது என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். மத்திய விஸ்டா திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டது. ஆனால் மத்திய விஸ்டா திட்டத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.
-
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications