ஸ்கூட்டரில் ஒய்யாரமாய் உட்கார்ந்திருக்கும் நாய்.. இந்த போட்டோவைப் பார்த்து நாம நிறைய கத்துக்கணும்பா!

ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் செல்லும் நாய் ஒன்றின் புகைப்படம் வைரலாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் இருசக்கர வாகனத்தில் செல்லும் நாய் ஒன்று ஹெல்மெட் அணிந்து செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் போது ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருத்தப்பட்ட மோட்டார் சட்டத்தின்படி, ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அதிகளவில் அபராதமும் வசூலிக்கப்படுகிறது.

helmet wearing dog photo has won twitters heart

சமயங்களில் கார்களில் செல்பவர்களுக்கு கூட ஏன் ஹெல்மெட் அணியவில்லை என அபராத ரசீது விதிக்கப்படும் வேடிக்கைகளும் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. ஏனெனில் அந்தளவிற்கு போக்குவரத்து காவல்துறை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு ஹெல்மெட் அணியாதவர்களை கண்காணித்து வருகிறது.

இந்நிலையில், போக்குவரத்து விதிகளை மதிக்கும் வகையில் டெல்லியில் ஒருவர் தன் நாய்க்கும் ஹெல்மெட் அணிந்து ஸ்கூட்டரில் அழைத்துச் செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதம் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும். அப்போதே இணையத்தில் வைரலானது. தற்போது மீண்டும் இப்புகைப்படம் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

நிச்சயம் போக்குவரத்து காவல்துறைக்கு சிறந்த பிரச்சார புகைப்படமாக இது இருக்கும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

இந்த நாயின் புகைப்படத்தைப் பார்த்து ஒருவர், புனேயில் ஹெல்மெட் அணிந்து செல்லும் மற்றொரு நாய்க்குட்டியின் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+